Jump to ratings and reviews
Rate this book

தேர்ந்தெடுத்த கதைகள்

Rate this book

192 pages, Paperback

First published January 1, 2012

1 person is currently reading
37 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (40%)
4 stars
8 (53%)
3 stars
1 (6%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
July 19, 2020
கி.ரா வின் தேர்ந்தெடுத்த கதைகள்

துக்கத்தின் ஒரு கோடியிலிருந்து குதூகலத்தின் மறு கோடியை உடனே எட்டித் தொடமுடிவது பெண்மைக்கே உரிய பாங்கு - கி.ரா- கனிவு

கி.ரா வின் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்திலும் கரிசல் காட்டு மனம் நிறைந்திருக்கிறது. அனைத்து கதைகளும் எளிய மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதைகளிலும் ஒரு குறிப்பிட்ட மென் உணர்வுகள் கையாளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதைகளிலும் சிரிப்பதற்கும் ரசிப்பதற்கும் நிறைய விஷயங்கள் உள்ளது. நல்ல வாசிப்பனுபவத்தை கொடுக்க கூடிய தொகுப்பு.

காய்ச்ச மரம்

முதுமை என்பது சுற்றம் சூழ கழிக்க வேண்டிய காலம். முதுமையில் தனிமை கொடூரமானது. வாழ்க்கை முழுக்க கம்பீரமாக வாழ்ந்தாலும் முதுமையில் மனம் ஏனோ அனைவரின் துணையை நாடும். வசதியானவர்கள் ஏழைகள் என்ற பாகுபாடில்லாமல் கிடைக்கப் பெறுவது முதுமையில் எதிர் கொள்ளும் புறக்கணிப்பு. நெகிழ்ச்சியான கதை.

கரிசல்காட்டில் ஒரு சம்சாரி

துரைசாமி நாயக்கர் என்ற சம்சாரியின் முழு வாழ்க்கையையும் ஒரே மூச்சில் வார்த்தை ஓடையாக கி.ரா எழுதியிருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் முக்கியமானது. சம்சாரிகளுக்கு உழைப்பதும் உற்பத்தி செய்வது மட்டுமே நிம்மதியை தரும், லௌகீக வாழ்க்கையில் நம்பிக்கை அற்றவர்களாய், எளிமையான வாழ்வே துணை போன்ற எதார்த்த உண்மைகள் நிறைந்த கதை.

நாற்காலி

நாற்காலி வாங்க ஆசைப்படும் ஒரு நடுத்தரக் குடும்பம் அதற்கான காரணம் என்று மிக இயல்பாக எழுதப்பட்ட கதை, கி.ரா வின் நையாண்டிகள் நிறைந்த கதை. Good read

கதவு

பிரபலமான கதை, படித்து முடிக்கும் போது மனதில் நிலைக்கும் கதை.

கனிவு

ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் பிரச்சனை, கணவன் மனைவி இருவர்கிடையேயான புரிதல். அதை கனிவு என்கிறார் கி.ரா. புதிதாக திருமணமான தம்பதி தங்களுக்கிடையே நடத்தும் ஒருவித விளையாட்டு தான் மொத்த கதையும், அட்டகாசமான கதை.

தொகுப்பில் உள்ள பிற கதைகளும் வாசிக்க வேண்டியவை.


Profile Image for Vivek Murugaiyan.
12 reviews1 follower
July 20, 2019
கதைகள் கரிசல்காட்டு மண்ணை மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது ... சிறிது அந்நியமாக இருந்தாலும் வார்த்தைகள் கடினமாக இருந்தாலும் சில வரலாறு கதைகள் மூலம் அழகாகிறது ...
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.