கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது.இதனை பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பெப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார். விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற தலைப்பிலும் மூன்றாவது இதழில் இருந்து ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி. ஆர். சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார்.
ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். 19ஆம் நூற்றாண்டின் மக்களினைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு மற்றும் நாட்டுப்புற சூழல் பற்றி கூரியமான அவதானிப்பினை பதிவு செய்துள்ளது இந்த நாவல். இந்த அவதானிப்பினை பதிவு செய்ததாலும், தத்துவ மற்றும் இயல்பான நகைச்சுவை பரவியிருப்பதாலும், இந்நாவல் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்நாவல் தெற்காசிய இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாக திகழ்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பகுதியானது ராஜமய்யரின் இலக்கியக் கலைத்திறனாலும், அனுபவ செழுமையாலும் நிறைந்துகிடக்கிறது. இயல்பான பேச்சும், பல வண்ணங்கள் கொண்ட நகைச்சுவையும், யதார்த்தமான நடையும், நடமாடும் கதைமாந்தரின் குணச்சித்திரமும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியோடு அமைந்திருக்கிறது.
B.R. Rajam Iyer (B. R. Rajam Aiyer/ B. R. Rajamaiyar) ( January 25, 1872 - May 13, 1898) was an author, novelist, columnist, journalist with inclination towards spiritual and philosophical thinking. His full name was B. R. Sivasubramanya Iyer. Rajam Iyer authored Kamalambal Charithiram, one of the earliest novels written in Tamil. He is considered to be one among the forerunners of realist novels in Tamil.
A pioneering novel as a series in a periodical. Written about a century ago, by an author who barely crossed his twenties, it represents the eloquence and the flow that takes the storyline of the novel that is very well defined. It also exhibits the lifestyle of the people who lived a century ago and how the society operated. Some of the parts looked more like digressions but it exhibits the author's eloquence and literary knowledge. It was like travelling back in time.