இந்தியத் தேர்தல் வரலாறு சுதந்திர இந்தியாவின் அறுபத்தைந்து ஆண்டுகால அரசியல் வரலாறு. நேரு முதல் மோடி வரையிலான இந்திய அரசியலின் ஒவ்வொரு நகர்வையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம் ! தேர்தல்களின் வழியே தேசத்தின் அரசியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் முதல் தமிழ் நூல் !
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.
An important documentation of the electoral history of Modern India in Tamil but lacks original research and almost reads like a bland translation of seminal works in English by Ramachandra Guha, Bipan Chandra and V.Krishna Ananth among others. But I thoroughly enjoyed the vignette of how actor S.S.Rajendran's stomach trouble indirectly led to Indira Gandhi's 1971 historic win. Classic Chaos Theory :)