Jump to ratings and reviews

சங்க நூல்களில் முருகன் (Sanga Noolgalil Murugan) (Research)

122 pages, Kindle Edition

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Karthick.
391 reviews128 followers
August 15, 2026
வெறும் 90 பக்கங்களே! ஆனால் அதகளமான புத்தகம்.

சங்க இலக்கியங்களான பரிபாடல், அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை மூலம் முருகன் பெயர் அர்த்தம், பிறப்பு, முருகனின் தாய், வாழ்விடங்கள், வாகனங்கள், வழிபாட்டு முறை, பலியிடும் சடங்குகள், தெய்வ ஆட்டங்கள், வைதீக இடைச்செருகல்கள் என்று பாடல்கள் வாயிலாக விவரித்துள்ளார்.

என்னை சுவாரஸ்யமாக இருந்த தகவல்கள் :.

1. வேலன் என்பது முருகனின் மற்றொரு பெயர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் வேலன் என்பவன் முருகனின் பூசாரி பெயர். குறிபார்ப்பவனே வேலன். படிமத்தான் என்று மற்றொரு பெயரும் உண்டு. நற்றிணை, ஐங்குறுநூறு பாடல்கள் வேலனை பற்றி குறிப்பிடுகிறது.

2. கட்டுக்குறி & வெறியாட்டம் - தலைவனை பிரிந்த தலைவி உடல் மெலிந்து பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள். இதை பார்த்து அவளின் தாய், முருகனால் நோயுற்று இருப்பதாக கருதி வேலனை (பூசாரியை) கொண்டு குறிபார்த்து, வெறியாடுதலுக்கு ஏற்பாடு செய்கிறாள்.

3. முருகனின் வாகனம் களிறு (யானை) என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. வைதீக தாக்கத்தால் நான்காம் நூற்றாண்டுக்கு பின், முருகனை ஸ்கந்தனாக மாற்றி, கட்டுக்கதை உருவாக்கப்பட்டு, யானைக்கு பதிலாக மயில் காட்டப்பட்டுள்ளது.

இன்னும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு வாசிக்கவும்
Displaying 1 - 1 of 1 review