Jump to ratings and reviews
Rate this book

இத்தா

Rate this book
நாவலின் மையமான புள்ளியாக இருப்பது இத்தா' என்கிற சடங்கு. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களும் தனித்திருத்தல் என்பதை அறிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த இத்தா என்பது கணவனை இழந்த அல்லது கணவனால் தலாக் செய்யப்பட்ட அல்லது காணாமல்போன பெண்கள் தங்கள் தூய்மையை உலகுக்குக் காட்ட மூன்று மாதவிலக்குக் காலம் தனித்திருக்க வேண்டும். என்கிற சடங்கு. கணவனின் கணவன் உடல் முகத்தைக் கூடப் பார்க்காத கணவனின் கைவிரல் நகம் கூடத் தன் மீது படாத மரியம் ஏன் இத்தா என்னும் தனிமைச் சிறைக்குள் அடைபட வேண்டும் என்கிற கேள்வியை நாவல் அழுத்தமாக எழுப்புகிறது. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலுமே இதுபோலப் பெண்ணுக்கு மட்டுமான சடங்குகள் இருக்கின்றன. இதை விவாதப் மாற்றியிருக்கிறது இந்நாவல். புள்ளியாக ச.தமிழ்ச்செல்வன் இதுவரை பேசப்படாத ஒரு சூழலில் இத்தா எனும் அனுபவம் குறித்து ஒரு இளம்பெண்ணின் குரலை அக்கறையும் அன்பும். உள்ளவர்களுக்கு நன்கு புரியும் வண்ணம் ஒலிக்கச் செய்திருக்கும் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்களுக்கு, மரியத்தை ஒரு சகோதரியாகக் காணும் என் போன்றவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இஸ்லாமிய வாசகர்களும் அடங்கிய மொத்தத் தமிழ் வாசகப் பரப்பும் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்களின் இந்த இத்தா எனும் புதுமையான களம் கொண்ட நாவலை வரவேற்று வாசிப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஜமீலா தமிழ் முஸ்லிம் திண்ணை முகநூல் குழு

264 pages, Paperback

First published January 1, 2022

Loading...
Loading...

About the author

கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ் நவீன எழுத்தாளர் ஆவார். 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரிலிருந்து தன்னுடைய எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். அதிகம் அறியப்படாத தமிழ் இஸ்லாம் சமூகத்தின் வாழ்க்கையை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர். 2004ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து வெளிவந்த 'மீன்காரத்தெரு' நாவல் தமிழ் முஸ்லிம்களில் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியது. கருத்த லெப்பை, துருகித்தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகை வாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ள ஜாகிர்ராஜா மேலும் 4 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள், 6 தொகை நூல்கள், குழந்தை இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். தனது எழுத்துப் பணிக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட 15 விருதுகள் பெற்றுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Displaying 1 - 1 of 1 review