பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காப்பியமாகின்றது. “பாண்டியன் பரிசு” என்ற சிறுகாவியம் “பாண்டியன் பரிசு’ என்ற ஆட்சி உரிமையைக் கொண்ட பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது.
Bharathidasan (Tamil: பாரதிதாசன்) was a twentieth century Tamil Poet and a rationalist whose literary works handled Socio-Political issues. His greatest influence was Periyar and his self-respect movement. In addition to poetry, his views found expression in his works of essays, plays, films, scripts. He was also influenced by his mentor Bharathiar, another great Tamil poet. He was awarded the Sahitya Academy award for Literature in the year 1969.
He was also called as "Paventhar Bharathidasan", "Puratchi Kavingyar" (Revolutionary Poet).
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
A dramatic novel with predictable storyline written entirely in poetry form. The magical use of words with musical rhymes and intelligent expressions activates dormant emotions and appreciation of language among readers. Only geniuses can be champions of such incessant zealous play of words with class and beauty!
Had this book for many years and never had the chance to read.,read yesterday and was amazed by the poetic use of words and brilliance of the narration
“எனைஈன்ற தந்தைக்கும் தாய்கும் மக்கள் இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால் செத்தொழியும் நாள்எனக்கு திருநா ளாகும்” இவ்வரிகளே என்னை இப்புத்தகத்தை நோக்கி நகர வைத்தது. ஒரு பேழைக்குள் நட்பு வீரம் காதல் தாய்மை துரோகம் என்று அனைத்து உறவுகளையும் உணர்வுகளையும் வைத்து எளிமை தமிழில் கவிதையாய் படைத்துள்ளார் இந்த கற்பனை காவியத்தை. புத்தகம்- பாண்டியன் பரிசு எழுத்து- பாவேந்தர் பாரதிதாசன்
ஒரு சிறிய கதையில் தமிழரின் வீரத்தையும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமூகக் கருத்தையும் அருமையான காதல் கதையோடு கலந்து மிக எளிய செய்யுள் நடையில் கூறியுள்ளார்.