Jump to ratings and reviews
Rate this book

வேடிக்கைப் பார்ப்பவன்

Rate this book
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்.

231 pages, Paperback

First published September 1, 2014

276 people are currently reading
1753 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
671 (65%)
4 stars
298 (28%)
3 stars
45 (4%)
2 stars
11 (1%)
1 star
7 (<1%)
Displaying 1 - 30 of 106 reviews
22 reviews2 followers
August 22, 2021
வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
⠀⠀
இங்கு வேடிக்கை பார்த்தது முத்துக்குமார் மட்டும் அல்ல முத்துக்குமாருக்கு தெரியாமல் உடனிருந்து அணைத்து வேடிக்கைகளையும் நானும் பார்த்தேன் முத்துகுமாரின் எழுத்துகளின் மூலம்.

முத்துக்குமாரின் எழுத்துக்கள் என்னைப் பாதித்த வண்ணமே இருந்தன. என் மனதின் ஆழம் வரை சென்று தேங்கி நின்ற துன்பங்களையும் கவலைகளையும் தூர் வாரியது முத்துக்குமாரின் எழுத்துக்கள்.
⠀⠀
வாசிக்க வாசிக்க முத்துக்குமாரின் பிரிவு என்னை வாட்ட தொடங்கியது.நமக்கு கிடைக்க இருந்த பல படைப்புகள் அவருடன் மறைந்தது என்றும் அவருடைய எழுத்துக்களை நாம் இழந்து விட்டோம் என்று நினைக்க மனம் வேதனைக்குள்ளாகியது. வேடிக்கை பார்ப்பவன் காட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு.
Profile Image for Priya Ravikumar .
34 reviews16 followers
February 6, 2017
he is such a Introvert character .. I liked this book,. some sentences àre really awesome....

எந்த நினைவுகளும் அற்று உங்கள் பிம்பத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி.

எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சென்றதே இல்லை. அலைகளிடம் பயம் இல்லை பயம் அப்பாவிடம்தான்!

“ஏய் இக்பால்! சாகும் வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும

“உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!”
Profile Image for Karthik.
17 reviews7 followers
August 3, 2020
சினிமாவில் எனக்கு அதிக ஈடுபாடு கிடையாது.. முத்துக்குமார் அவர்களை ஒரு பாடலாசிரியராக தெரியும்.. ஒரு சில நாட்களுக்கு முன்பு பவா அவர்களின் ஒரு காணொளி பார்க்க, மிகவும் சுவாரஸ்யமான மனிதர் முத்துக்குமார் என்று தெரிந்து, இந்த புத்தகம் வாசித்தேன்., தமிழ் வாசகர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்..
அவர் தன்னுடைய தாயின் மரணத்தை விவரிக்கையிலும், கடவுளோடு அவர் உறவாடும்போது 40 வயதுக்கு மேல் எனக்கு நடக்கவிருப்பதை நான் அறிய விரும்பவில்லை அப்புறம் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது என்ற பகுதியை வாசிக்கையிலும் , கண்ணில் நீர் சுரந்தது..
வெயிலோடு விளையாடி பாட்டில் வரும் சிறுவர்களில் ஒரு சிறுவன் அவர்தான்..
ஒரு லட்சம் புத்தங்களை கொண்ட ஒரு குடிசை வீட்டில் வளர்ந்தேனென்று சொல்கிறார்.. அப்படி ஒரு குடிலில் வளர்ந்தால் தேசிய விருதென்ன , கொஞ்சம் பொறுத்திருந்தால் ஆஸ்கர் விருதே உன்னை தேடி வந்திருக்கும்..
இலக்கியத்திற்கும் அப்பால்.. ஒரு கிராமத்து சிறுவன், புத்தகங்களை மட்டுமே துணையாக கொண்டு, கடின உழைப்போடும் , விடா முயற்சியோடும் ஓடினால் வெற்றிக்கனியை ஒரு நாள் நிச்சயம் ருசிக்கலாம், என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு முத்துக்குமார்..
தமிழ் மண்ணை அலங்கரித்தது போதும், விண்ணையும் கொஞ்சம் அலங்கரிக்கட்டுமென்று கடவுள் உன்னை கவிதை பாட அழைத்து செல்வதற்கு இனி கொஞ்சம் காலம் காத்திருந்திருக்கலாம்..தமிழ் பேசும் மக்களின் சுவாசம் கலந்த காற்றில் ஓயாமல் மிதக்கும் ஒரு சிறகாக நா.முத்துக்குமார் என்றுமே கலந்திருப்பார்..
Profile Image for Ragul.
12 reviews2 followers
February 18, 2024
'நெருப்பு' என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்.... கண்ணீர்! - நா.முத்துக்குமார்.


கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க💔🥺
Profile Image for Pavithra Sathya.
5 reviews5 followers
February 19, 2020
உங்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்ததில்
உங்கள் மகனின் மழலை மொழியின் மீதும்
உங்கள் கவிதைகள் மீதும் உங்கள் கவிதை ரசனைகள் மீதும் காதல் பெருகுகிறது.
Profile Image for Karthikeyan Pushparaj.
2 reviews2 followers
August 26, 2017
அப்படியெல்லாம் போகிறபோக்கில் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துவிட முடியுமா?

பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
January 30, 2022
நா.முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றை 30 கட்டுரைகளாக விகடனில் தொடராக எழுதியுள்ளார்.
புதுவிதமாக எழுதியுள்ளார்.

நிறைய கவிதைகள் நன்றாக இருந்தது..

ஆண்கள் அழுக கூடாதுன்னு சொல்லுவார்கள், ஆனால் தான் உணர்ச்சிவசப்பட்டு அழுததை வெளிபடையாக எழுதி நிறைய விடயங்களை உடைத்தார்..

குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவது பழமொழி திரிந்து போனதை விளக்கியது அருமை..
Profile Image for Girish.
1,153 reviews260 followers
October 3, 2020
"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?"

"சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!"


This is a book that works very well when you read it out loud. It seems silly, but Na.Muthukumar's 'naya urai' is heartwarmingly simple and in contrast his kavidhaigal sound that much more special.

His life told in third person as an observer initially seems an effort. He has to invent methods and imagine scenarios to tell his story. The second half of his book when he started writing about his colleges - the writing become more natural.

I liked his Aniladum Mundril just a bit more than this book. However, this is definitely a beautiful read. He teases his poems in this book including the much talked about 'Thoor' which I loved. Almost sold to try his kavithai puthagam - with a trepidation - I might be unworthy.

‘சமர்ப்பணம், புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு...’ என்று அதன் முதல் பதிப்பில் இவன் வலியுடன் குறிப்பிட்டிருந்தான்.
Profile Image for Amara Bharathy.
46 reviews6 followers
March 22, 2022
நான் வாசித்த தலைசிறந்த படைப்புகளில் இது ஒன்றாக எப்போதும் இருக்கும்!
192 reviews9 followers
November 2, 2020
Though written as an ordinary man...
The book shows what a versatile personality Muthu is...
The praise of Tamil in his college admission and the fun at park... More and more...
Profile Image for Arun gg.
11 reviews
April 6, 2023
”புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்.
16 reviews
January 25, 2025
‘நான் இல்லாமல் போகிறேன்
ஆனால் வசந்த காலம்
என்னுடைய நினைவுகளுடன்
இருந்து கொண்டேதானிருக்கும்!’ -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ

“நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!” - ஜென் தத்துவம்

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! - ஜென் கவிதை

‘ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!’

போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தால் பேருந்துகள்
திருவிழாவுக்குத் திருவிழா வெளியே வந்தால் தேர்

உன் கவிதையை நீ எழுது
உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது
உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
“எழுத்தாளர் சுந்தர ராமசாமி"


“உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!” -சாக்ரடீஸ்

சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது?
வீடு மாற்றுவதை!

பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!
Profile Image for Elankumaran.
140 reviews25 followers
December 18, 2021
வேடிக்கை பார்ப்பவன் ❤️

காலையில் வாசிக்க ஆரம்பித்தேன், நா.முத்துக்குமாரின் வேடிக்கைகளை அவருடனே சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்து, நினைவலைகளில் வள்ளம் ஓட்டி கரை சேர்ந்த பிறகே என்னால் எழும்பமுடிந்தது. இவரின் எழுத்து அனைவரும் அறிந்ததுதான். சுவாரஸ்யமான தனது வாழ்க்கையை அதனிலும் சுவாரஸ்யமாக படைப்பாக்கி எங்களையும் அவரின் நினைவுகளூடே காலச்சக்கரத்தை சுற்றவைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்.

“பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்கு தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!”
5 reviews1 follower
September 13, 2020
"இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது
துன்பமும் இருக்கிறது
வாழ்ந்து பார்க்கத் தெரியவில்லை"
எனும் உண்மை வரிகளில் தொடங்கி,

"சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை" எனும் கடைசி வரி வரை அனைவருக்கும் வேடிக்கை பார்ப்பதைக் கற்றுக்கொடுத்து இருக்கிறார்.

புத்தக்கத்தின் பக்கங்கள் முடிவுற்றாலும் நாமும் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்கத் தொடங்குவோம்.
Profile Image for Gowsihan N.
95 reviews1 follower
May 12, 2020
அண்ணார்ந்து பார்க்க வைக்கும் வானவில்லைவிட... அருகில் பறக்கும் பட்டாம்பூச்சியில்தான் எத்தனை வண்ணங்கள்... #வேடிக்கை பார்க்க கற்றுத் தந்தமைக்கு நன்றி...
Profile Image for Thamiziniyan Supa.
Author 1 book27 followers
January 6, 2022
"அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை. பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது."

கிழக்கும் மேற்கும் அழிந்த முன்னும் பின்னும் இல்லாத மாபெரும் வெற்றிடத்துக்கு நம்மைக் கூட்டிப்போகிறார் நா.முத்துக்குமார்
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
August 12, 2024
#291
Book 52 of 2024- வேடிக்கை பார்ப்பவன்
Author- நா.முத்துக்குமார்

“கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.”

வேடிக்கை பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது? எத்தனை வயதானாலும்,எல்லாருக்கும் வேடிக்கை பார்க்க ஏதோ ஒன்று இருக்கத் தானே செய்கிறது. ஒரு இருபது முப்பது ஆண்டுகள் கழித்து,நம் வாழ்க்கையை நாமே வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும். சிறுவயதில் இருந்து,பால்யம் தொடங்கி,எல்லா பருவத்தையும் வளர்ந்த பின் வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்? அது தான் இந்த புத்தகம்.

நா.மு தன் வாழ்க்கையை திரும்பி பார்த்து நம்மையும் அழைத்துச் செல்லும் படைப்பு தான் இது. பள்ளி நாட்கள், அவர் தாயின் மரணம், அவரது பால்யகால கனவுகள், ஆசைகள், கல்வி, வேலை, கலைத்துறை, சினிமாவுக்குள் நுழைந்தது, சினிமாவில் உயர்ந்தது பற்றி என தன் வாழ்க்கையை அப்படியே பகிர்ந்திருக்கிறார். இந்த மாதிரியான புத்தகங்களை படிக்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் சலிப்படையும். ஒருவருடைய வாழ்க்கையின் எல்லா பாகங்களும் எல்லாருக்கும் பொருந்தாது. ஆனால், இவருடைய வாழ்க்கை கதையில் இழையோடும் எதார்த்தம் தான் இதன் அழகு.

இந்த புத்தகம் நிறைய சிரிக்கவும்,அழவும்,ரசிக்கவும் வைக்கும். வாழ்க்கை எத்தனை அழகானது! வாழ்தல் எவ்வளவு அலாதியான சுகம் என்பதை ஒவ்வொரு நா.மு புத்தகமும் நினைவூட்டிகர கொண்டே இருக்கிறது.

My Rating- ⭐️⭐️⭐️⭐️⭐️
Available on- Amazon
4 reviews
August 2, 2025
The poet gently takes us by the hand and leads us back to our childhood…
and makes us watch ourselves with wonder and amusement.

If we take a moment to look closely…

Each and every one of us is sure to find something in this book —
Read it, experience it, and take a roller-coaster ride
between your childhood and your present.

This book…

Plays with your memories…
Connects with your memories…
Speaks with your memories…
And traps you within a magical realm…

So, journey with your sweetest memories,
and go meet yourself — and your loved ones — once again.


நினைவுகளோடு ஒரு உரையாடல்

கவிஞர் நம் கைபிடித்து நம்மை நம் பால்ய காலத்துக்கு நம்மை அழைத்து கொண்டு நம்மை வேடிக்கை பார்க்க வைக்கிறார்...

நாம் சற்று உற்று நோக்கினால்....


ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படித்துப் பார்த்து நீங்கள் உங்கள் பால்ய காலத்துக்கும் உங்களது நிகழ்காலத்துக்கும் ஒரு ரோலர் கோஸ்டரில் போவது போல் சென்று சுற்றிப் பார்த்து வாருங்கள்....

இந்த புத்தகம்

உங்களின் நினைவுகளோடு விளையாடி...

உங்கள் நினைவுகளோடு உறவாடி...
உங்கள் நினைவுகளோடு உரையாடி...
உங்களை ஒரு மாயவளைக்குள் சிக்க வைக்கும்....



உங்கள் இனிமையான நினைவுகளோடு சென்று உங்களையும் உங்கள் உறவுகளையும் சந்தித்து வாருங்கள்...
Profile Image for Anitha Ponraj.
274 reviews42 followers
July 17, 2022
புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்
ஆசிரியர் : நா. முத்துக்குமார்
பக்கங்கள் :240
பதிப்பகம் : விகடன் பிரசுரம்

தன் வாழ்க்கை நிகழ்வுகளை கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் மூன்றாம் நபர் பார்வையில் வேடிக்கை பார்த்த�� அதை வாரவாரம் விகடனில் பிரசுரித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

அவரின் எளிமையான தோற்றம் போலவே அவர் பாடல்கள், கவிதைகள், புத்தகங்களிலும் எளிமை, எதார்த்தம், இனிமை!!!

அவர் ஒரு நல்ல மனிதனான உருவானதில் அவர் தந்தையின் பங்கும், புத்தகங்களின் முக்கிய பங்கும் இந்த புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் கடந்து வந்த பாதைகள், மனிதர்கள் அவரின் பயணத்தில் அவரின் பார்வையில் நாமும் பயணிக்கிறோம்...

விகடன் பிரசுரித்தின் புத்தகத் தாள்களின் வழுவழுப்பு நான் எப்பவும் ரசிப்பது. அதைவிடவும் இந்த புத்தகத்தின் வார்த்தைகளை வண்ணங்களாக நம் கண்முன் நிறுத்தும் செந்தில் அவர்களின் வரைபடங்கள் மேலும் அழகூட்டுகின்றன.
Profile Image for Nirupana.
8 reviews2 followers
August 1, 2022
such a soul full book I ever read before . Just like he is sitting in front of us . he Alive in his lines
Profile Image for Gayathri (books_and_lits).
105 reviews1 follower
July 24, 2025
(தொலைபேசி ஒலிக்கிறது)
நான் - சொல்லும்மா!
அம்மா - என்னம்மா சோகமா இருக்கியா?குரலே சரியில்லையே!
(அம்மாவின் பின்னிருந்து எனக்காக பதில் சொல்லும் அப்பா)
அப்பா - அவ நா.முத்துக்குமார் இறந்துட்ட துக்கத்துல இருக்கா…
(புனைவல்ல!முற்றிலும் நடந்ததே!!)

ஒரு மனிதன் தன் பூதவுடலை விட்டகன்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழியப்போகும் நிலையிலும் எங்கோ,யாரோ என்ற ரீதியில்,எவ்வகையிலும் சற்றும் சம்பந்தமில்லாத என் மனதை சோகத்திலாழ்த்தி,நான் துக்கம் அனுஷ்டிப்பதை என் குடும்பமே கண்டுகொள்ளுமளவு செய்திருக்கிறது என்றால்,அந்த மனிதனின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!அவரது எழுத்தின் மூலம் மட்டுமே நான் உணர்ந்து,இத்தகைய தாக்கத்தை அனுபவிக்க நேர்ந்ததெனில்,அந்த எழுத்து எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!!

Read more…

https://www.instagram.com/p/DMfEs3PzC...
65 reviews1 follower
June 9, 2022
இந்த பொத்தகத்தில் முதல் தலைப்பான 'ஒப்புதல் வாக்குமூலம்' வாசித்தவுடன் நான் இவரின் தீவிர காதலனாகி விட்டேன்❣️. அதன் பிறகு இவரை 'நா.முத்துக்குமார் என்னும் காதலன்' என்றே அழைக்க விரும்பினேன். ஏனென்றால் இவரை போன்று எல்லா விடயங்களையும் அணு அணுவாக காதலித்தவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எழுதுவதை கூட அவ்வளவு காதலித்துள்ளார் இந்த காதலன்❤.

நான் இதுவரை வாசித்ததிலேயே தன் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு சுவாரசியமாக யாரும் எழுதியதில்லை. எத்தனை முறை வாசித்தாலும் இவரது சொற்களும் எழுத்துநடையும் ரசிக்கக்கூடியது. இவரது தந்தையின் வாசிப்பு மோகத்தை பற்றியும் அவரது பொத்தகங்கள் பற்றியும் இவர் குறிப்பிடும் போது பொத்தகங்களின் மீதான காதல் பல மடங்காக கூடுகிறது. இவரது பையன் இவரிடம் நீங்களும் பல பொத்தகங்களை கடன் வாங்கி கூட வாசியுங்கள் உங்கள் கடனை நான் அடைக்கிறேன் என்று சொல்லும் காட்சி கண் கலங்க வைத்துவிட்டது🥺.

ரயில் நிலையத்தில் நடக்கும் ஒரு அபூர்வக் காட்சி, வீட்டிற்கே வரும் இவரது ஆசிரியர் காட்சி என எங்கேயும் சுவாரசியம் குறையாமல் வாசிப்பவர்களை அவருடனே அழைத்துச் செல்கிறார் இவர்.

இவர் கவிதை எழுதத் தொடங்கியது, சினிமாக்குள் நுழைந்தது, பொத்தகம், சினிமா என்று தேடி அலைந்தது என இவரது வாழ்க்கையை நாமும் வாழ்ந்து விட மாட்டோமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு விவரித்துள்ளார் நா. முத்துக்குமார் அவர்கள். இந்த பொத்தகத்தை பாதி வாசித்து முடித்து விட்டு இடையில் சில நாட்கள் வேறு பணியால் இதை வாசிக்க முடியாமல் போனதால் மீண்டும் முதலில் இருந்து வாசித்தேன். முதலில் வாசிக்கும்போது கிடைத்த அதே இன்பமும் காதலும் எனக்கு கிடைத்தது என்றே சொல்லலாம்.

இவரை ஏன் இயற்கை சீக்கிரம் நம்மிடமிருந்து அழைத்துச் சென்றது என இவரது திரைப்பட பாடல்களின் வரிகளை கேட்கும் போதே வருந்தியது உண்டு. இந்த பொத்தகம் அந்த வருத்தத்தை பல மடங்காக உயர்த்தியுள்ளது🥺. இவர் தனது எழுத்துக்கள், பாடல் வரிகள் மூலம் என்றும் நம்முடனே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார், வாழ்வார்! இவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் குறையாது. ஏனென்றால் நா. முத்துக்குமார் என்னும் காதலனை நானும் அளவுக்கடந்து காதலித்து விட்டேன்❣️✨.
53 reviews42 followers
November 28, 2018
"இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்" என்ற தலைப்பில் வைரமுத்து ஒரு நூல் எழுதி இருக்கிறார். இந்நூலைப் படித்த போது அந்தத் தலைப்பு இந்நூலுக்கும் பொருந்தும் என்று தோன்றியது.

வாலி, வைரமுத்து, நா முத்துக்குமார், புலமைப்பித்தன், அறிவுமதி என்று எனக்குப் பிடித்த பல திரைப்பாடலாசிரியர்கள் உள்ளனர். முத்துக்குமரன், நடுவண் அரசின், நாடளாவிய (தேசிய) விருது பெறவில்லையே என்று ஒரு முறை வருந்தினேன். இரண்டு முறை தொடர்ந்து வென்று காட்டினார். அதற்காக அவரைப் புகழ்ந்து வெண்பா கூட ஒன்று எழுதினேன். அவருக்குப் படித்துக் காட்ட வேண்டும் என்றாவது, என்று நினைத்திருந்தேன். காலம் ஏதோ நினைத்து விட்டது.

இப்படி மனத்துக்கு நெருங்கிய நா. முத்துக்குமாரின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் ரசித்த நூல். ஏன் ரசித்தேன் என்று விளக்கிச் சொல்ல சொற்கள் இல்லை. உங்களுக்கு இவரின் கவிதைகள் / பாடல்கள் பிடிக்கும் என்றால் மட்டுமல்ல, பொதுவாக தமிழ்த் திரையிசைப் பாடல்கள் பிடிக்கும் என்றாலே கூட இந்நூலும் பிடிக்கும்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
November 2, 2018
வேடிக்கை பார்ப்பவன்( 30 கட்டுரைகளின் தொகுப்பு ) - கால சக்கரத்தை பின் நோக்கி நகர்த்தி, நா.முத்துக்குமார் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆன வாழ்க்கை வாரலாறு பற்றிய நூல்.

இவன், இவனான கதை! என்ற ஒரு கட்டுரையில் நா.முத்துக்குமார் எப்படி கவிஞர் ஆக உருமாறினார் என இவ்வாறு குறிப்பிடுகிறார் : இவன் ஒன்றும் சுயம்பு இல்லை. இவனையும் தட்டித் தட்டி வனைந்தது பல எழுத்தாளர்களின் கைகளே. ஒரு சரளைக்கல்லாக தன் போக்கில் கிடந்த இவனை, இவன் படித்த புத்தகங்கள் எனும் மகாநதிகள்தான் லயமாகச் செதுக்கி, ஜென் தோட்ட கூழாங்கல்லாக மாற்றின.

கவிஞரின் வாழ்க்கை அனுபவங்களை வேடிக்கை பார்க்க விரும்புபவர்கள் வசிக்கலாம்

- கலைச்செல்வன் செல்வராஜ்
Profile Image for Navaneeth.
31 reviews2 followers
April 22, 2020
Oh, I was wrong when I wrote "This is the first autobiography I read" in the review of "Wings of Fire". I read this one before Wings of Fire.

I'm a huge fan of Na.Muthukumar and reading this book was like talking to the spirit of this poet by using this book as an Oujha board. This book actually referred me to read Kafka, Murakami, Gabrielle Garcia Marque. A must read for all people aiming to get into Cine Industry.
Profile Image for Subiksha  Bharathi .
12 reviews5 followers
June 30, 2021
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் போல் சின்னஞ்சிறு கதைகளுக்குள் தன் வாழ்வை எதார்த்தமாகவும் எளிமையாகவும் கற்பனை திறனால் புகட்டியுள்ளது இந்த வேடிக்கை பார்ப்பவன். வேடிக்கை பார்பவன் - ரசனையின் சுவை!! புத்தகம் - வேடிக்கை பார்ப்பவன்.
எழுத்து - நா. முத்துக்குமார்

நாம் இழந்தது ஒரு மனிதனையல்ல ஒரு உலகை என இதன் ஒவ்வொரு வரிகளும் உரைக்கும்.
1 review1 follower
August 13, 2017
வேடிக்கை பார்த்தேன்!!

இவ்வளவு கவித்துவம் வாய்ந்த ஒரு சுயசரிதையை நான் இதுவரை படித்ததில்லை.. விவரித்திருந்த அனைத்து விடயங்களும் கண் முன்னே விரிந்தன.. நா. முத்துக்குமார் அவர்களின் இறப்பு, தமிழ் சினிமாவின் பேரிழப்பு..
Profile Image for Maheshwaran.
40 reviews7 followers
December 23, 2017
நல்ல படைப்பு...

1980 களின் முன்பும் அதன் பின்பு அந்த காலகட்டத்தில் பிறந்தவர்களின் பால்ய காலங்களை, வாஞ்சையோடு கிளறி, நம்முடைய வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்க செய்கிறார் இந்த நா . முத்துக்குமார்....
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
February 8, 2021
நா.முத்துக்குமார் தன்னுடைய வாழ்க்கை பற்றிய முப்பது சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி இப்புத்தகத்தில் பேசுகிறார். இது கிட்டத்தட்ட சுயசரிதை போன்றது தான்.
நா.முத்துக்குமாரின் மொழி நடை வாசிப்பை வேகப்படுத்துகிறது; அவருடைய வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது; வாசிப்பின் முக்கியத்துவத்தை இப்புத்தகம் உணர்த்துகிறது.
Profile Image for Elakiya Samuel.
1 review3 followers
September 16, 2016
Read a tamil book after a long time and worth it. N.Muthukumars poems are high throughout the book.
Displaying 1 - 30 of 106 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.