இன்று பொது வாழ்க்கையில் உள்ள பல அரசியல் தலைவர்கள் நான் காமராசர் வழி ஆட்சி செய்வேன் என்று பல கூட்டங்களில் கூவுகின்றனர், ஆனால் அது கனவிலும் நிறைவேறாத சூழ்நிலையில் நமது இன்றைய வாழ்வு இருக்கிது. சுயநலம் மேலாங்கி பொதுநலம் என்றால் என்ன என்றே பெருவாரியான மக்கள் கேட்கும் நிலை இன்று. காமராசர் கல்விதுறையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார், பல பள்ளிக்கூடங்களை திறந்தார், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், இந்தியாவின் பிரதம மந்திரி பதவி இவரை தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்து இந்திரா காந்தியை பிரதமராக்கினார் இந்த தகவல்களே நான் நேற்று வரை அறிந்தவை. பெருந்தலைவரின் மேலும் பல சாதனைகள் நிகழ்வுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள எண்ணிய போது என் கண்ணில் காண கிடைத்த புத்தகம் எஸ்.கே.முருகன் எழுதிய “பெருந்தலைவர் காமராஜர்”.
எஸ்.கே.முருகன் எழுதிய “பெருந்தலைவர் காமராஜர்” புத்தகத்தை வாசித்து போது நான் 1903ம் வருடத்திலிருந்து 1975ம் வருடம் வரை என்ன நடந்தது என்பதை பெருந்தலைவர்வுடன் இருந்து கண்டு வந்த ஒரு உணர்வு. கிட்டத்தட்ட ஒரு டைம் டிரவல் என்றே சொல்லலாம். பிறந்தார்,தொடக்க கல்வி கற்றார், தொழில் செய்தார், காந்தி வழி நடத்தார், காங்கிரஸ் உறுப்பினரானார்,கட்சி பணியாற்றினார்,பொது கூட்டங்கள் பல நடத்தினார்,சிறை சென்றார்,பல நண்பர்களை சம்பாதித்தார், பல புத்தகங்கள் வாசித்தார், மக்களின் மனதை படித்தார், அரசியல் ராஜதந்திரங்களை கற்றுக்கொண்டார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார்,தேர்தலில் வெற்றி கண்டார்,பல நல்ல திட்டங்களை வகுத்தார், பல பள்ளிக்கூடங்கள் திறந்தார், பல தொழிற்சாலைகள் கொண்டு வந்தார், பல அணை/நீர்த்தேக்கங்கள் கட்டினார்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்,அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரானார், நேருவின் மறைவுக்குபின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்தார், பல வெளி நாடுகள் பயணப்பட்டார், இந்தியாவின் மிகப் பெரிய தலைவரானார், இயற்க்கை எய்தினார் என 1903 -1975 வரை நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த புத்தகம்.அது ஏன் என தெரியவில்லை அக்டோபர் 2ம் தேதி 1975ம் வருடம் காமராசர் ஐயா தனது உதவியாளரிடம் அந்த விளக்க அணைத்துவிடு என சொல்லும் வாக்கியங்களை வாசிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டது.
நாம் அறியப்படாத பல தகவல்கள் தொகுத்து வழங்கிய நூல் தொகுப்பாசிரியர் எஸ்.கே.முருகன் அவர்களுக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்.
தங்கமே! தண் பொதிகைச் சாரலே! தண்ணிலவே! சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுந் தாய் தவிரச் சொந்தம் என்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை! தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை! ஆண்டி கையில் ஓடிருக்கும், அதுவும் உனக்கில்லையே! -கண்ணதாசன்.
I was always fascinated by this great leader, who was himself not educated but made sure his people get education, what made him to think and act with that strong principle, simple life not expecting anything from politics in contrary to the current ones.. Simply he is a legend and I always grateful to him, through his spreading of importance of education, otherwise we would have still remained as dumb people..
The best and the most comprehensive book on Kamarajar. I highly recommend this one, worth the money. Author has covered the whole national picture as well.
ஒவ்வொரு தேர்தலிலும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று கூறுவதைக் கேட்பதுண்டு. இந்த மனிதர் அப்படி என்ன சா தித்து விட்டார். அவரது பின்புலம், கொள்கைகள், ஆட்சி முறை, நேர்மை என எல்லாவற்றையும் அறிந்துகொள்ள ஒரு புத்தகம். திராவிடக் கட்சிகள் என்ன வளர்ச்சியை கொண்டு வந்தார்கள் என்று இன்னும் படிக்கவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்ற கையோடு அக்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இவர் செய்த வேலைகள் அளப்பரியது. முற்றிலும் சோசியலிசக் கொள்கைகள் கொண்டிருந்தாலும் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைப் புரட்டினாலும் இவர் இட்ட அடித்தளத்தை வேறு எவரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம். இலவசக் கல்வி, மதிய உணவு, நீர் அணைகள் , கனரக தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் என இவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு மேல் பல துறைகளில் சிறிதளவு முன்னேற்றமே கொண்டிருக்கிறோம் என்பது என் கருது. எளிமை, நேர்மை, அதிகம் சோடை போகாத அரசியல் தந்திரங்கள் என ஒரு உதாரணமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அரசியலிலும் சமூக சேவையிலும் " வாழந்தார் , செம்மையா வாழ்ந்தார்" என்கிற மாதிரி ஒரு வாழ்க்கை. வாய்ப்பு இருந்தால் நிச்சயம் படிக்காலாம்.
A good biography about tamilnadu ex cheif minister kamaraj. For a biography this book has great pace, from the first till the end author has relied on facts to explain things (which most biographies tend not to adhere to). The book has dealt well with the conterversies that the leader had with other leaders and does true justice to the main theme taken.
Go for it if you want to know about kamaraj - the king maker, a very good biography which you would love in case you are interested in Indian and Tamilnadu history.
Amazing book by the author about the greatest Chief Minister Tamil Nadu has seen yet. A great human being and a superb administrator, "Karma Veerar" Kamarajar was a legend. When he died, he did not have any property in his name or even a bank account. RIP.
Must read for everyone who wants to learn what a truly dedicated and committed leader can achieve.
காமராஜர் அய்யா பத்தி இந்த புத்தகம் முலமாக அதிக அளவில் தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் முருகன் அவர்களுக்கு மிகவும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.