Jump to ratings and reviews
Rate this book

கற்க கசடற

Rate this book
நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே, பெற்றோரின் மனதில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சித்திரம்தான் வந்துபோகிறது. ஏன் இந்த நிலை? அரசை விட தனியார் பிரமாண்டமானதா? தனியார் பள்ளிகளின் அதிவேக வளர்ச்சியும், அரசுப் பள்ளிகளின் அதலபாதாள வீழ்ச்சியும் தனித்தனியானதா? அரசுப் பள்ளிகளை மீட்கவே முடியாதா? ‘முடியும்’ எனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையில் இருந்து விடை அளிக்கிறார் பாரதி தம்பி. நமது கல்விச்சூழல் குறித்த அவ நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்லாமல், நம்பிக்கை தரும் அம்சங்களையும் தொட்டுச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களின், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், தமிழகக் கல்விச்சூழலில் மிகப் பெரும் விவாதங்களையும் தூண்டியுள்ளன. கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், நிபுணர்களின் கருத்துகள் என கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தாங்கி வெளியாகும் இந்த நூல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

248 pages, Paperback

First published January 1, 2015

3 people are currently reading
42 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (41%)
4 stars
7 (41%)
3 stars
3 (17%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Umesh Kesavan.
453 reviews179 followers
July 10, 2016
A brilliant overview of the ills that plague the school education system in Tamil Nadu.A particular shocker is the essay on how casteism has pervaded even classrooms of some schools.A must read for policy-makers.
Profile Image for Karthick.
373 reviews125 followers
January 12, 2021
கல்வி என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதையும், அதற்க்கு முக்கிய தூணாக இருப்பது நல்ல ஆசிரியர்களும், அரசுபலிகளின் முக்கியத்துவமும் தான் என்பதை முன் வைக்கிறார்.

இங்கு கல்விக்காக மிக பெரிய போராட்டம் தேவை என்பது தெளிவாக தெரிகிறது. நல்ல அறிவை வளர்ப்பதர்க்காக நம்மால் முடிந்த அறவழி புரட்சி மேற்கொள்வோம்.

Starting 2021 with a best book on importance of education, government schools and Mother Tongue Education
Profile Image for Venkat.
145 reviews73 followers
December 1, 2017
3.5 Stars. Not completely balanced, but still very relevant.
Profile Image for Saravan Prabu.
28 reviews
October 1, 2018
கல்வித் துறையில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்று மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். பாடசாலையில் சமத்துவத்துக்கு துளி கூட இடமில்லை என்றும், சமூகத்தில் உள்ள முரண்களையும் தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த புத்தகம் பல நல்ல புத்தகங்களுக்கு முன்னுரையாகவும், வாசற்படியாகவும் இருக்கின்றது. டோட்டோ சான், சக்தி பிறக்கும் கல்வி, எனக்குரிய இடம் எங்கே? , கரும்பலகையில் எழுதாதவை போன்ற புத்தகங்களை படிக்க தூண்டுகிறது. கல்வி என்பது பண்டம் ஆகிவிட்ட காலக்கட்டத்தில், அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. வாழ்த்துக்கள் பாரதி தம்பி .
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
July 2, 2015
Very good essays about Tamilnadu School education system. I read this weekly in Anantha vikatan.
8 reviews6 followers
February 28, 2017
அருமையான தொகுப்பு. அனைத்து தரப்பிரனருக்கும் ஏதோ ஒன்றை சிந்திக்க தரும் ஆழ்ந்த கருத்துகள்.

விகடன் பதிப்பகம் அச்சிடும் தாள் குறித்து மேலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வாரப் பத்திரிக்கையை போல் பதிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
95 reviews7 followers
November 22, 2015
மிக அருமையான படைப்பு.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.