அஷ்டமா சித்திகளின் ஆறாம் சக்தியான வசித்வம் என்னும் வசியத்தைப் பற்றித் தெரிவது.
வசந்தனுக்குத் தன்னுடன் படித்த அனைத்திலும் சுமாரான மாரிமுத்து பிரபலமான நடிகையை மணந்தான் என்பது ஆச்சரியம். அவனிடம் அதை பற்றி கேட்கும் போது குமாரசாமி என்னும் சித்தர் தான் அதற்குக் காரணம் என்று சொல்கிறான்.
மாரிமுத்து எப்பொழுதுமே உண்மை பேசுபவன். அதுவே அந்தச் சித்தரிடம் தேடிவர வைத்தது. அந்த நடிகை பிச்சைகாரியாக இருந்து சித்தர் மூலம் பிரபலமானவலாக மாறியவள். இவர்கள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கச் சித்தர் ஏற்படுத்தியது தான் திருமணம். இந்த உண்மையை வசந்தனிடம் சொல்கிறான் மாரிமுத்து இதைத் தெரிந்து சித்தரை பார்க்க வசந்தன் போகிறான். அவனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிவிடுகிறார்.
வசந்தனின் முதலாளியாக இருக்கும் பெண் பிசாசு மாதிரி இவனைப் படுத்தி எடுக்கிறாள். அவளை அடக்கத் தவறான வழிகாட்டுதலால் மந்திரவாதியை சந்தித்து அவளுக்கு ஏவல் வைக்க ஏற்பாடு செய்யும் போது சித்தர் வந்து அவனை நல்வழி படுத்துகிறார்.
பிராத்தனையும் , உழைப்பு மட்டுமே வசீகரிக்கும் என்று...
அனைவருக்கும் உள்ளே ஒரு விதமான வசீகரம் இருக்கதான் செய்யும் ...சிலர் அதைத் தூண்டிவிட்டு மற்றவர்களை ஈர்க்கின்றனர் பலருக்கு அது தெரிவதில்லை.