இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.
உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.
அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின்படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டு திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
இந்திரநீலம் என்னும் சொல் ஒவ்வொரு முறையும் என் அகத்தில் காண்பிப்பது இண்டிகோ நிறத்தையே. சத்யபாமையில் தொடங்கி காளிந்தி வரையிலான எட்டு தேவியரும் கிருஷ்ணனை, நீலத்தை அடைவதை விவரிக்கும் இந்நூல் அவனை அவதாரமாகவும், அவர்களை அஷ்டலக்ஷ்மிகளாவும் புனைவுபடுத்தும் அதே வேளையில் அதன் பின்னணியிலுள்ள அரசியலையும் எடுத்துச்சொல்கிறது. இந்திரப்பிரஸ்தத்திற்காக செல்வம் வேண்டிவரும் திருஷ்டத்யும்னன் இக்கதையின் மையமாகி அவன் வழியாக கிருஷ்ணனும், துவாரகையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. சூரியரத்தினமான சியமந்தகம், பெரும் செல்வத்தின், அதிகாரத்தின், விழைவின், ஆணவத்தின் நிறங்களை ஆங்காங்கே பிரதிபலித்து, அன்னையின் உருவான காளிந்தியின் கரங்களில் பொருளற்றதாகி ஆழ்கடல் மீள்கிறது. சத்யபாமை மற்றும் ருக்மிணியின் கதைகளே பெரும்பங்கு வகித்தாலும் தூய அன்பைத்தவிர வேறொன்றும் அறியாத காளிந்தியே தன் முதன்மை அன்புக்குரியவளாக கிருஷ்ணன் தெரிவிக்கிறான். மஹதியும், அமிதையும் செவிலியன்னையரின் அன்பிற்கிலக்கணமாய் என் மனதில் நீங்கா இடம்கொள்கின்றனர். அவர்களின் பெயர் மறந்தாலும் அவர்களை மறக்க இயலாது. அத்தகைய எத்தனை அன்னையர்கள் தாங்கள் வளர்த்த குழந்தைகளின் மேல் அன்பைத்தவிர வேறெந்த உரிமையும் இல்லாது மறைந்திருப்பரோ இவ்வுலகில்! ஒரு சூப்பர் ஹீரோவாக ஒவ்வொரு நாயகியரையும் உச்சக்கட்டத் தருணத்தில் கிருஷ்ணன் கவர்ந்து செல்கிறான் சிறுகாயம் கூட இல்லாமல். பிற எவரிடமும் இல்லாத ஒரு ஆயுதமாக கிருஷ்ணனிடம் மட்டுமே உள்ளது சக்ராயுதம். நுட்ப அறிவற்ற, தனித்து செயல்படாத ஆனால் நிகரற்ற உடல் பலம் கொண்டவராகவே பலராமர் தோன்றுகிறார்-ஹீரோவுக்கு உதவுவது மட்டுமே அவர் பணி. சுபத்திரையின் வடிவும், இயல்பும், திறனும் முற்றிலும் புதியவை எனக்கு. பெண்களை கவர்ந்து செல்லும்போது மட்டுமே இவர்களால் வீரர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். ஒரு நல்ல Action மற்றும் Romance Story.
இந்திர நீலம் என்று பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒரு குரல்,
’இதுவும் நீலம் மாதிரி நீளமா இருக்குமே!'
என்று மனதை தேற்றிக்கொண்டு குழுவினர் வாசிக்கத் தொடங்கும் அளவுக்கு வெண்முரசுடனான இந்த 500 நாட்கள் தாண்டிய பயணம் வாசகர்கள் மனதை ப(பு?)ண்படுத்தியிருக்கிறது.
“ஓம் ஓம் ஓம் அவ்வாறே ஆகுக! ”
என்று ஆசான் ஆமோதித்திருக்கிறார் 954 பக்கங்களாக !!!
ஆரம்பத்தில் இந்திரபிஸ்தம் அமைக்க கிருஷ்ணர் உதவி கேட்டு திருஷ்டத்யும்னனை துவாரகை அனுப்பி வைக்க திரௌபதி ஒரு கேமியோவும், கடைசியில் காண்டீபத்துக்கு ஓப்பனிங் குடுக்க அர்ஜூனனும் வந்து செல்கிறார்கள் மற்றபடி கதை முழுவதும் நீலன் குடும்பத்தாரும் அவர்களுக்குள் சமாதானப்படுத்த செல்லும் திருஷ்டத்யும்னனும் அவனுக்கு நண்பனாகும் சாத்யகியும் தான் !
நீலம் என்றாலே கிருஷ்ணர், இது இந்திரநீலம் கிருஷ்ணன் கதை தான் ஆனால்,
“மாப்ள இவர் தான்,ஆனா அவர் போட்ருக்க ட்ரஸ் என்னது!”
என்ற கதையாக முழுமையாக பக்கங்களை நிறைத்திருப்பது சியமந்தகம் தான் !!!
புத்தகம் தொடங்கும் போது அது என்ன என்று கூட தெரியாமல் வாசிக்கத் தொடங்குபவர்களை உறக்கத்தில் கூட ‘சியமந்தகம்,சியமந்தகம்‘ என்று உளறும் அளவுக்கு கதறக் கதற வைத்து செய்திருக்கிறார் ஆசான்!!!
முந்தைய அத்தியாயங்களில் பாண்டவர் கௌரவர்கள் கல்யாண மாலை! ‘அப்புறம், கிருஷ்ணன் மட்டும் என்ன தொக்கா?’ என்று ஆசான் இந்த புத்தகத்தை எழுதியிருப்பார் போல.
காதலையும் கிருஷ்ணனையும் பிரித்திறியாத அளவுக்கு அவன் கதைகள் கேட்டு வளர்ந்த நமக்கு பாமையின் கதை ரசிக்கிறது.
உண்மையில் நீலத்தை ரசிக்க முடியாமல் போனது அதன் அதீத கவிதை நடையைப் போல், தான் தூக்கி வளர்த்த குழந்தையான கண்ணனை ராதை காமுறும் காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாமையும் தான்.
பாமையை கிருஷ்ணன் காதல் ரசிக்கும் படியாக இருந்தது.
ஒருமுறை கண்டவனை மனதில் வரிந்து கொண்டு காத்திருக்கிறாள்.துவாரகை அவள் பலமுறை கனவில் கண்ட நகரமாக விரித்த காட்சிகளை ரசித்தேன்.
துவாரகை பெருவாயில் கால்கோளிடும் சமயத்தில் அவள் விளக்கேற்றும் போது கிருஷ்ணப் பருந்து மேலே பறக்க “துவாரகையின் அரசி!” “வாழ்க வாழ்க” என்று மக்கள் முழக்கமிட்ட காட்சிகள்,ஊன் உறக்கம் மறந்து காத்திருந்தவளை சியந்தகத்தை கொண்டு வந்து இளைய யாதவர் மணம் கொண்ட காட்சி எல்லாம் புல்லரிக்க வைத்தது.
ஆனால் அந்த கள்வன் கேப்புல இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டு வருவது பாமையை போல நமக்கும் அதிர்ச்சி தான்.
அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அஷ்டலட்சுமி என்ற பெயரில்,
சங்கு சக்கரத்தோட பிறந்தாள்,
திருவாகவே வளர்ந்தாள்,
எதையும் காணாத விழியோடு இருந்தாள்,
அவளுக்குள் அறியா தெய்வமொன்று குடியேறியதைப் போலனு
எட்டு முறை ஒரே விஷயத்தை ‘காப்பி பேஸ்ட்’ போட்டு கடுப்பேற்றிவிட்டார் ஆசான்.
அது அவருக்கே போரடித்து ஒரு எண்டர்டெயின்மெண்ட்க்குகாக, ‘சியமந்தகம்’ அதிக தடவை வருகிறதா ‘வரதா’அதிக தடவை வருகிதான்னு ‘அடிச்சு காட்டுவோம்னு’ போட்டி போட்டு எழுதியிருக்கிறார்.
நம்மை வரதாவுக்குள் முக்கிவிட்டு, ஒரு கூட்டத்தையே சியமந்தகத்தை வைத்து திருடன் போலீஸ் விளையாட்டு விளையாட வைத்து ஒரு புத்தகத்தை முடித்து விட்டார் ஆசான் !!
சாக்லேட் பாய் மாதவனை சைத்தான் படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக பார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது போல், கிருஷ்ணரின் கொடூரமுகம் வெளிப்பட்ட கிருஷ்ணவபுஸ் காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எல்லாம் அந்த சியமந்தகத்துக்காக !!! அதை மீட்பதற்காக. சரி அப்படியாவது பிரச்சினை தீர்ந்ததா என்றால் ,அப்போது தான் அடுத்த சண்டை தொடங்குகிறது,
“கிருஷ்ணன் உனக்கா ? எனக்கா ?”
என்று காதல் மிகுந்து சக்களத்தி சண்டை வரும் என்று எதிர்பார்த்தால்,
“சியமந்தகம் உனக்கா ? எனக்கா?”
என்று அஷ்டலட்சுமிகளும் அட்ட எ டைமில் சண்டை போட்டு நம்மை அப்சட் ஆக்குகிறார்கள். கடைசில அந்த சியமந்தகம் யாருக்கு தான் என்று நீலனாவது ஒரு முடிவுக்கு வருவார் என்று பார்த்தால்,
’அதுல ஒன்னுமில்ல,கீழ போட்டுடு’
என்று அவர் தீர்ப்பு சொல்ல, கடலுக்குள் மூழ்கி மறைகிறது சியமந்தகம் !!
‘நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு ‘
என்று சொல்லும் அளவுக்கு வாசகர்களுக்கு வாசிக்க ஈடுபாடு இல்லாததாலும், டைட்டானிக் போல கடலுக்குளிருந்து மீண்டும் யாராவது அந்த சியமந்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து பின்னர் கதை சொல்வதாக ஒரு புத்தகம் ஆசான் எழுத வாய்ப்புகள் இருப்பதாலும், தற்சமயம் ஒரு வழியாக நிறைவு பெற்றது இந்திர நீலம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறது வெண்முரசு வாசிப்புக் குழு.
இந்த புத்தகத்தில் நான் ரசித்த ஒரே விஷயம் திருஷ்டத்யும்னன் சாத்யகி நட்பு தான்.
காண்டீபம் கடுப்பேற்றாமல் செல்லும் என்று நம்புவோம் !
This is the only book by Jeyamohan that I would rate three stars, a departure from my usual five-star rating for his works. The narrative constantly shifts between Indira Neelam and the romantic lives of Krishna's wives. While Jeyamohan, as always, excels in his vivid landscape descriptions and intricate characterizations, it becomes quite tiresome to read about the ladies' intense devotion to Krishna before their marriages, only for them to become rather ordinary characters later, vying for the Syamantaka jewel and social status. This, I believe, is making this book a drag.
The first half, focusing on Satyabhama's life and Krishna's recovery of the Syamantaka jewel from Jambavan and then from Sathadhanva, reads like a first-rate thriller.
All said, Jeyamohan once again showcases his talent by providing complete and compelling profiles of Dhrishtadyumna, Satyaki, Kritavarma, Satyabhama, and Rukmini.