Jump to ratings and reviews
Rate this book

Pethavan: The Begetter

Rate this book
When Bhakkiyam falls in love with a Dalit sub-inspector, death is the only punishment that will satisfy her village panchayat. Pazhani, her father, is ordered to kill her. But how can a father murder his own daughter?

Imayam's powerful tale about caste bitterness—sickness that continues to plague Indian society—eerily preceded an actual event that occurred two months later. The narrative, constructed on short, crisp dialogues, is an unflinching account of the ugliness and trauma that await those who dare to transcend caste borders.

92 pages, Paperback

First published January 1, 2013

21 people are currently reading
358 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
190 (55%)
4 stars
122 (35%)
3 stars
19 (5%)
2 stars
6 (1%)
1 star
3 (<1%)
Displaying 1 - 30 of 60 reviews
Profile Image for Univer Sun.
10 reviews1 follower
October 13, 2023
எங்க இருந்தாலும் உசுரோட இருக்கணும்!!!

சாதி என்னும் நோய் பாதித்த நோயாளி கூட்டத்தில் இருந்து தன் மகளை காப்பாற்றும் ஒரு தந்தையின் ஓர் இரவு முழுதும் நடக்கும் போராட்டம்.

துவக்கத்தில் இன்னிக்கி வெள்ளிக்கிழம என்று பழனி கூறி
அடுத்த நாள் காலை சனிக்கிழமையில் அவர் காட்டில் இறந்து கிடக்கும் வரை கதையின் சுவாரசியம் எங்கும் குறையவில்லை.

மிகவும் அழகிய வட்டாரமொழி பயன்பாடு.

தன் மகனிற்கு எந்த பாவமும் வர கூடாது என அவன் காலில் விழுந்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து
ஒரு புடி மண்ண எடுத்துகிட்டு போ நல்லயிருப்ப என தன் பேத்தியை அனுப்பும் துளசி.

கதை என்னவென்று கேட்ட பிறகு தன் கருத்தை திணிக்கும் மண்டையன் கிழவன்

ஊருக்கே வராமல் ஜாதி சண்டையை தூண்டிவிடும் அரசியல்வாதி.

பெரியப்பா/சித்தப்பா மகளாக இருந்தாலும் ஒரே ஜாதி என்பதால் கண்டுக்கொள்ளாத ஊர்மக்கள்.

ஊரில் சண்டை என வரும்போது மட்டும் அடித்து உதைத்து "சாவுடி" என பேசி, ஜோசியர் சொன்ன நாள் முடிந்ததும் தன் மகள் மாறிவிட்டாலா என குழம்பும் சாமியம்மா.

எண்ணவானலும் தன் சகோதரியை விட்டு கொடுக்காமல் ; தான் இரண்டு வருடங்களாக முந்திரி கொட்டை உடைத்து சேர்த்து வைத்த காசை எடுத்து கொடுக்கும் செல்வராணி.

ஊரையே எதிர்த்து, 20 வருடம் தவம் இருந்து பெற்ற மகளுக்காக தன் உயிரையும் விட்ட பழனியை "பெத்தவன்" ஆக பெற கொடுத்து வைத்த "பாக்கியம்".

என அனைத்து கதாபாத்திரங்களும் தனது பங்கை சிறப்பாக பகிற்கின்றனர்.

இதற்காக தானே அலைகிராய் என தனது வேட்டியை அவிழ்கும் ஆண்களை விட்டு நீங்காத மானம், தனது தங்கை உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தும் ஆண்களை விட்டு நீங்காத மானம்.

ஒரு பெண் தனது ஜாதி விட்டு வேறு ஜாதியை சேர்ந்தவனை மணமுடிக்கும் பொழுது மட்டும் நீங்கும் குணத்தை இந்த ஆணாதிக்க சமுதாயம் தான் கற்று கொடுத்தது என்னவோ?
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
April 3, 2025
#348
Book 19 of 2025- பெத்தவன்
Author- இமையம்

அப்பா, இரு மகள்கள், மனைவி, தாயுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சாதி தான் அந்த ஊரில் எல்லாமும். பெரியசாமியின் மூத்த மகள் வேறு சாதியை சேர்ந்த ஒரு போலீசை காதலிக்கிறாள். அது ஊருக்கு தெரிந்து, அவளை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். அவள் காதலனையும் கொலை செய்ய முயற்ச்சித்து, தோற்றுப் போகிறார்கள். மூன்று வருடம் இப்படியே செல்கிறது. எங்கே சென்றாலும் அந்த பெண்ணுக்கு பெரும் அவமானம், வார்த்தையால் மட்டும் அல்லாது செயல்களாலும் அவளை துன்புறுத்துகின்றனர்.

ஒரு நாள் பஞ்சாயத்து கூட்டம் கூடி, அப்பாவான பெரியசாமியிடம், “இந்த முறை உன் மகளை நீ கண்டிப்பாக கொன்றே தீர வேண்டும்” என்ற ஆணை வழங்கப்படுகிறது. தன் கையால் சாகாமல், அவளே சாவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவள் தந்தை இத்தனை ஆண்டு செய்திருக்கிறார், எதுவும் நடக்கவில்லை. இம்முறை கொன்றே ஆக வேண்டும், இல்லையேல் இவர்கள் குடும்பத்திற்கு பேராபத்து. இந்த கட்டத்தில் தந்தை என்ன செய்கிறார் என்பது தான் கதை.

பெருந்தாக்கத்தை இவரது எழுத்துக்கள் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு கட்டத்தில் மனம் உடைந்து ஓவென்று அழ வேண்டும் போல் இருக்கும். சமுதாயத்திற்காக, சாதி மதம் என்னும் திணிக்கப்பட்ட கோட்பாடுகளால், மகளா சாதியா என்ற கேள்வியின் வெளிப்பாடகத் தான் இந்த கதை. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
January 18, 2023
மனித மனத்தின் குரூரமான எண்ணங்கள் சாதிவெறி யாக வெளிப்படுகிறது.
Profile Image for Muthu Vijayan.
37 reviews13 followers
March 16, 2021
பெருகி வழியும் குரூரம்...
Profile Image for Ramakrishnan.
7 reviews1 follower
August 31, 2021
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை எடுத்துச்சொல்லும் நெடுங்கதை...

புத்தகத்திலிருந்து

"இது சத்தியம். நம்ப ஊட்டு வாய மரத்த வெட்டாத சாமி. ஒண்ணு நூறாவும்.நூறு ஆயிரமாவும்.எம் பேச்சுக் கேளு. நீ மகராசனா இருப்ப."

"இது வீம்புக்குச் சூரிக்கத்திய முழுங்கிற சாதி.கட்டுறதுக்குக் கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டானுவ."

"இந்த ஊரு பயலுவுளுக்கு ஓக்கித மசுரு இல்லெ. ஆம்பளச் செஞ்சா ஒண்ணு, பொட்டச்சி செஞ்சா ஒண்ணா?"

"இந்தக் காசி பணமெல்லாம் , நக நட்டெல்லாம் கொடுத்தது நீ கறிச்சோறு ஆக்கித் திங்கிறதுக்கில்ல. இதெ வச்சி நீ மேம்படுப்புப் படிக்கணும். வாத்தியாரா ஆவணும்..."
Profile Image for Prasanna Venkadesh.
9 reviews6 followers
December 11, 2014
"அட இன்னைக்கு யாருப்பா சாதி பாக்குறாங்க?" என்று யாரவது சொன்னால் இந்த புத்தகத்தை அவர்களுக்கு தாருங்கள். ஒரு ஒரு பக்கத்தை படிக்க படிக்க மன்ம் வலிக்கத்தொடங்குகிறது ஆனாலும் கீழே வைக்க மன்மில்லை.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
November 5, 2020
கீழ் சாதிக்கார பயலோட உன் மவ ஓடிப்போயி நம்ப சாதிய அசிங்கப்படுத்திப் பாக்கப்போறாளா? அவள நீயே சாவடிச்சுப்புடு நாளைக்கு காலயில அவ பொணம் சுடிகாட்டுல எரியனும் என சாதிக்காரன்கள் பழனியிடம் உத்தரவிடுகிறார்கள். நீங்க சொன்னபடியே செய்யறனுங்க என வேட்டியே போட்டு தாண்டி சத்தியம் செய்து ஒரு வழியாக அனைவரையும் அனுப்பி வைக்கிறான். தவமிருந்து பெத்த என் மவள இந்த சாதி சாவடிக்க பாக்குதே ஏதோ ஒரு மூலையில அவ உசுரோட இருந்தா போதும் என எண்ணி தன் மகளை அவள் விரும்பிவனோடு அனுப்பிவைக்கும் பெத்தவன் - கலைச்செல்வன் செல்வராஜ்.

பெத்தவன் கதையிலிருந்து சில வரிகள்,

“நீயெல்லாம் ஒரு அப்பனா? நீயெல்லாம் இந்தச் சாதியில பொறந்ததாலதான் இந்தச் சாதிய ஒரு பயலும் மதிக்க மாட்டங்கிறான். நாளக்கி ஒம் மவ பொணம் சுடுகாட்டுல வேவணும். இல்லன்னா ஒம் பொணம்தான் வேவும். ஞாபகத்தில வச்சிக்க. ஊருக்காரன ஒம்மவ பொட்டப் பயலுவோன்னு நெனச்சிக்கிட்டாளா? இந்த மாரி ஒண்ணு ரெண்டு தேவிடியாளுவோ இருக்கிறதாலதான் நம்ப சாதிக்கி மரியாதியே இல்லாமப்போவுது. ஒம் மவளுக்கு நம்ம பயலுவள ஒருத்தனயுமே கண்ணுல படலியா?”

“நம்ப பயலுவள அவளுவளுக்குப் புடிக்கலியாமா? அவளுவோ சாமான்ல மத்துக் கழியாலதான் குத்தணும். அப்பத்தான் அவளுவோ மதம் அடங்கும். பள்ளிக்கூடத்தில நிழலு வாட்டத்திலெ குந்த வைக்கிறதாலதான ஊருமேயப் போறாளுவ. முந்திரிக்காட்டுல போட்டு அடிச்சா தானா மதம் அடங்கிப்போவுது.”

“இதுக்குத்தான அலயுற. எத்தன வேணும்? எடுத்துக்க” என்று இருபது முப்பது பையன்கள் வேட்டியை அவிழ்த்துக் காட்டினார்கள்.

இது வீம்புக்கு சூரிக்கத்திய முழுங்கிற சாதி. கட்டுறதுக்குக் கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டானுவ.

கிழக்கால தெருவுல தொட்டிக்குப்பத்தாரு மவன் மணி இருக்கானில்ல. அவன் நாலு வருசத்துக்கு மின்னாடி பங்காளி அங்காளிகூட இல்லெ ஒடன்பொறந்த சித்தப்பன் மவ மல்லிகாவ இயித்துக்கிட்டு ஓடிப்புட்டான். மூணு வருசம் கழிச்சி ரெண்டு புள்ளயோட வந்து அதே ஊட்டுலதான் இருக்காங்க. சொந்தம் கொண்டாடாமியா போயிட்டாங்க. அதுல ஊருக்காரனுக்கு வெக்கமானம் இல்லெ.”
“சித்தப்பன் மவளாயிருந்தாலும் பெரியப்பன் மவளாயிருந்தாலும் சாதி ஒண்ணுல்ல.”
“சாதியில சாண்டதான் ஊத்தியடிக்கணும். அக்கா தங்கச்சின்னு மொற இல்லாமல் போறவனுக்கு எதுக்குச் சாதி?”

“கண்காணாத தேசமா ஓடிப்போயிடு. எங்கிருந்தாலும் உசுரோட இருக்கணும். காடுகர போனா சம்பாரிச்சிடலாம். சொத்துபத்து, நக நட்டு, பண்டம்பாடி போனா சம்பாரிச்சிடலாம். உசுரச் சம்பாரிக்க முடியாது. இருவது வருசமாச்சி ஒன்னெ பாக்கறதுக்கு. பெத்தவன்ங்கிற மொறயில என்னால ஒனக்கு இதான் செய்ய முடிஞ்சது. இனி நான் செத்தா நீ இல்லெ, நீ செத்தா நான் இல்லெ”

எனக்கு இப்ப வயசி என்னா தெரியுமா? அறுவத்தாறு. இன்னமும் ஊருக்குள்ளார எங்கப்பன் பேரச் சொல்லித்தான் கூப்புடுறாங்க. ‘சீ அவனா’ன்னு பேரு எடுக்கல. அவன் மவனாங்கிற பேரும் வாங்கல. எங்கப்பன் பேர நான் சாவுறமுட்டும் கெடுக்க மாட்டன்.

பழம் பயித்தா தரயில வியிந்துதான ஆவனும். விய்யும்போது முள்ளு மேல விய்யப்போறமா, கல்லு மேல விய்யப் போறமா, சாக்கட மேல விய்யப் போறமான்னு பழத்துக்குத் தெரியுமா?

இவன் சாதிக்கார பய ஒருத்தன்தான் கீச்சாதிக்காரிய இட்டாந்து மோட்டாரு கொட்டாயில வச்சிக் குடும்பம் நடத்துறான். ரெண்டு புள்ளயயும் பெத்துட்டான். மூணு நாலு வருசமா இந்த கூத்து நடக்கிறது இந்த ஊரு நாயிவுகளுக்குத் தெரியாது? வடபாதி காத தூரத்திலியா இருக்கு? கூப்புடுற தூரம்தான? அதெ என்னா ஏதுன்னு கேக்கறதுக்கு இந்த ஊரு பயலுவுளுக்குக் ஓக்கித மசுரு இல்லெ. ஆம்பள செஞ்சா ஒண்ணு, பொட்டச்சி செஞ்சா ஒண்ணா? வாய்ச்செத்தவன் மவங்கிறதாலதான் ஊடேறி வந்து வெசத்த கொடுக்கிறான். மயிர அறுக்கிறான். சீலயத் தூக்கிப் பாக்குறான்.

ராத்திரி நேரத்தில ஊட்டுல நெருப்ப வச்சிட்டுப் போயிடுவானுவ. ஒண்ணும் செய்ய முடியாது. இதே மாரிதான் முட்லூருல நம்ப எனத்து பொண்ணுக்கும் கீச்சாதி பயலுக்கும் ஒறவாகிக் கடசியில பட்டப்பகல்ல ஊரே கூடியிருக்கயில அந்தக் குட்டிய ஊட்ல வச்சி நெருப்ப வச்சிட்டானுவ. அதுக்காகதான் சொல்றன். எங்க இருந்தாலும் உசுரோட இருக்கணும்.

ஊருப் பஞ்சாயத்திலெ என்னிக்கி முடுவாச்சோ அன்னிய தேதியிலிருந்து நம்ப ஊட்டச் சுத்தி ஆளு நடமாடிக்கிட்டு இருக்கிறது எனக்குத்தான் தெரியும். கீச்சாதி பயகூட படுக்கத்தான அலயுறா. அதுக்கு மின்னாடி நம்ப காரியத்த முடிக்கணும்ன்னு சொல்லி ஏயி எட்டு எள வயசுப் பயலுவோ சுத்துறானுவ. கட்சிக்காரன்தான் இதுல மின்ன நிக்குறான். பத்து இருவது பேரு கூடி சாணிய மிறிக்கிற மாரி மிறிச்சி துவச்சி எடுத்துப்புடுவானுவ. அப்பறம் நாலு பேரும்தான் சாவணும். சொந்தக்காரன், பங்காளின்னு இருக்கிற பயலுவோதான் மின்னமின்ன நிக்குறானுவ. எங்கியிருந்தாலும் உசுரோட இருக்கணும். அதான ஒனக்கு வேணும். அப்புறமென்ன? மயிர அறுத்து மானபங்கம் செஞ்ச ஊரு. இங்க இருந்தா பேச்சு நிக்காது. வளந்துகிட்டுத்தான் போவும். வம்புவயக்கு நிக்காது. ரெண்டு தெருவுக்கும் கலகம் மூண்டுக்கிட்டுத்தான் இருக்கும். ஊட்டுச் சிக்கல் ஊருச் சிக்கலாச்சு. அப்பறம் சுத்துவட்டாரச் சிக்கலாயிப் பல ஊரு கச்சிக்கட்டிக்கிட்டு வந்து நிக்கும்.

“நீ உசுரோட இருக்கனுமின்ணுதான் நான் நெருப்புல குதிக்கப்போறன். திரும்பியுமா நீ எனக்குப் புள்ளயா பொறக்கப்போற? நாளக்கி ஒனக்கொரு புள்ளெ பொறந்தா அதெ நீ பத்தரமா வச்சிக்க. நாள ஒரு காலத்தில நீயும் எங்களப்போல கண்ணுத் தண்ணிய வுட்டுக்கிட்டு, கையக் கட்டிக்கிட்டு நூறு ஆயிரம் பேரு மின்னால நிக்கக் கூடாது” என்று சொன்ன பழனிக்கு கண்கள் கலங்கின. “ஒரு சத்தியம். நீயும் சாவக் கூடாது. நாங்களும் சாவ மாட்டம். இதான் சத்தியம்” -இமையம்.





Profile Image for Nirmal.
40 reviews2 followers
September 3, 2025
I read the Tamil version. It's a short novel about a father being forced to act against his daughter by his village due to an inter-caste marriage with a man of lower caste.
The writing is very impactful.
It shows the toxicity that caste brings from each one’s perspective – the villagers, the father, the family and the girl herself.
These perspectives bring feelings of disgust, pity, and sympathy.
The novel carries several trigger warnings, including violence and sexual violence.
I felt that reading it could sensitize readers to the harmful effects of caste glorification.
Profile Image for Senthilkumar Gunasekaran.
35 reviews16 followers
November 3, 2019
Bhagyam character is a well written character... I am just thinking what happened to her after catching the bus..
22 reviews
June 22, 2025
A poignant story based on the reality of caste. Love, hate, steadfastness, opportunistic behaviour, peer pressure, sacrifice, a false sense of honour, tribalism... It conveys them succinctly. Glad I read it.
Profile Image for Chelsea Mcgill.
85 reviews29 followers
March 21, 2016
The young girl Bhakkiyam has fallen in love with a Dalit (untouchable) boy, breaking caste boundaries. The village will not stand for this, and has gathered in front of her father’s house to demand that he kill her this time. Her father, Pazhani, promises the mob that he will kill her the next day.

Then he considers what to do.

This is a story of a man put in a terrible position. His daughter has done something outrageous according to the ideas of the villagers. Pazhani, his wife, and the other women in the family have tried to change her mind for three years. But Bhakkiyam has held firm to her decision to marry the Dalit boy, despite being beaten nearly to death multiple times and suffering constant abuse from the members of her own family.

Pazhani does not want to kill Bhakkiyam. He has already promised to do it three times and not followed through. This is the fourth time, and the villagers will not let him escape without carrying out the deed. They will come and kill Bhakkiyam themselves, and her father as well. It has reached the point where something drastic must be done.

Read the rest of my review here: http://thegloballycurious.blogspot.in...
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
September 30, 2014
பெத்தவன் - இமையம்
ஒரு வரியில் : ஜாதியின் பெயரில் நடக்கும் கெளரவக் கொலைகள் பற்றின ஒரு நெடுங்கதை.

தருமபுரி என்று சொன்னதும் நம் நினைவிற்கு தற்பொழுது வருவது இளவரசன் மற்றும் திவ்யாவின் தந்தை மரணமும் தான்.சட்டரீதியாக எதையும் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில் நம் மனதிற்கு தெரியும் இது ஜாதி எனும் சாத்தானின் செயல் என்று.

அப்படி சாத்தானின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் பெத்தவன்.காதல் காதலித்தவர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ , கண்டிப்பாக ஜாதியையும் அதை சார்ந்த அரசியல் கட்சிகளையும் நன்றாக வாழ வைக்கிறது.காதலுக்கு பெத்தவன் தலையசைத்த பின்னரும் ஊரே வேசிப் பேச்சு பேசி ,அந்தப் பெண்ணின் உசுரை உருவ என்னென்ன பாடுபடுகிறது ஒரு கூட்டம்.அதற்கு கெளரவ கொலைன்னு ஒரு பெயர் வேற வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு கெளரவ கொலை தான் இந்த கதையின் தளம்..

புத்தகத்திலிருந்து சில வரிகள்...

“அப்பிடியா? ஒன்னெ நம்பறம். ஒன் வாக்குப்படியே வச்சிக்குவம். காரியத்த எப்பிடி முடிக்கப்போற அதெச் சொல்லு?” என்று துரை கேட்டான்.
“ஊரு சொல்றபடி.”
“பூச்சி மருந்த வாயில் ஊத்தி, ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக் கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக் கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும்” என்று இடுப்பில் குழந்தையை வைத்திருந்த பெண் சொன்னாள்.
Profile Image for Prasad GR.
355 reviews3 followers
December 6, 2020
Reading this poignant little story in these times of anti-love jihad legislation makes it eerie. The depth of the emotions captured and the fleshing out of all the main characters within a few dozen pages, points to a master at work. This is one of those rare books that are powerful enough to leave the reader’s eyes moist.
Profile Image for Daijin.
15 reviews
January 14, 2017
காதல் திருமணம், வேறு சாதி, இவை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிர ஒன்று. இந்த புத்தகம் அதன் முகத்திரையை கிழித்து காட்டுகிறது. இன்றும் பல கிராமங்களில் இது நடக்கிறது. படித்து பகிரவேண்டிய புத்தகம்.
9 reviews5 followers
June 17, 2019
Try to watch it as the play performance. Gifted to have watched Dr. Raju's version of the play by PondiUni performing artists.

Must be enacted repeatedly.
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
July 23, 2021
கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவை.
இதில் யதார்த்தத்தை தாண்டிய பாணியில் கதை நகர்கிறது. ஏனென்றால், கதாபாத்திரங்கள் பேசும் தான் நிர்ணயிக்கிறது. அவ்வளவு உண்மை, அவ்வளவு சோகம்...
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
September 14, 2023
சமூகத்தில் இருக்கும் ஜாதிய இருக்கத்தை அது ஏற்படுத்தும் மனநிலையை மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறார் இமையம்
Profile Image for Thirupathi Mani.
16 reviews3 followers
January 20, 2022
சாதி தான் சமூகம் என்றால்.......
Profile Image for Padmanathan N.
32 reviews1 follower
May 13, 2022
ஆணவக்கொலையை மையமாக கொண்ட நூல் இதில் கட்டுக்கோப்பான குடும்பம் மாற்று இனக் காதலினால் ஏற்பட்ட வினையால் சூரையாடப்படும் பொழுது நிகழும் எண்ண ஓட்டம் மற்றும் தந்தையின் பாசப் போராட்டமும், கட்டுக்களை துண்டித்தெரிய எடுக்கும் முடிவும் மனதை கணக்க வைக்கிறது. திறந்த மனதுடன் படிக்கவும்.
Profile Image for Vignesh Narayanan.
119 reviews9 followers
January 24, 2023
என்னை நடுங்க வைத்தது, கடைசி வரி வாசித்து முடித்ததும் கதறி அழுதேன். இந்த சிறுகதையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகும்.
Profile Image for Gayathri (books_and_lits).
105 reviews1 follower
January 30, 2025
ஒரு பெண்ணைப் பெற்றவனின்,நிற்க,ஒரு கீழ்ச் சாதிப் பையனிடம் மனதைப் பறிகொடுத்த பெண்ணைப் பெத்தவனின் ஓர் இரவின் முழுநீள தவிப்பும்,…

Read more…

https://www.instagram.com/p/DFc-uhtzz...
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
April 10, 2023
காலங்கள் மாறினாலும் சாதி என்னும் சாக்கடை மனித உடலின் குறுதியோடு கலந்துவிட்ட ஒன்றாகத் தான் இருக்கிறது. சிலர் அதை மென்மையாகவும் பலர் அதை தீவிரமாகவும் கொண்டாடுகின்றனர். அந்த கொண்டாட்டத்தில் உயிர்பலி என்பது ஒரு பொருட்டல்ல அவர்களுக்கு.

பாக்கியத்தை காத்த பெத்தவன் பழனி தன்னுயிரைக் கொடுக்கிறான் சாதிவெறியர்கள் மனநிறைவு பெற....


எனினும் சாதி வெறிக்கு நிறைவு என்பது ஏது?....
Profile Image for K A R T H I P A N.
2 reviews
February 9, 2024
எழுத்தாளர் இமயம், எழுதிய இந்த குறுநாவலை இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் 11 பக்கங்கள் படித்திருக்கிறேன் சில இடையூரால் படிப்பதை நிறுத்தி விட்டேன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு படிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது இந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும் போது எனக்குள் சிறிய பதட்டமும் பயமும் உருவாயிற்று (சுய ஜாதி பற்றி பிற ஜாதி நட்பு) என்று என்று சொல்லிக் கொண்டு (honar killing)கௌரவ கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது

இந்த நாவல் முழுக்க கௌரவ கொலைகளையும் சாதி வெறியர்களால் நிகழ்த்தகப்பட்ட வன்முறைகள் மற்றும் தகப்பன் மகளின் உறவுகளை பற்றியானது முதல் பக்கத்தில் தொடங்கிய சுவாரஸ்யம் இறுதி பக்கம் வரையிலும் உங்களை அழைத்து செல்லும் அவ்ளோ நுணுக்கமான எழுத்துகளும் and narrative style

Prologue:
பழனியின் மகள் பாக்கியம் கீழ் சாதி என்று சொல்லக்கூடிய பையன் பெரியசாமி ( inspector) காதலித்து இரண்டு மூன்று தடவை ஊறவிட்டு வெளியே ஓடிப்போக முடிவு செய்து 3 தடவையும் மாட்டிக் கொள்கிறாள் மூன்று வருடங்களாக பாக்கியம் வீட்டிலேயே அடைக்கப்பட்டு கிடைக்கின்றாள்

ஊர் பஞ்சாயத்தும் சாதி பஞ்சாயத்தும் இணைந்து பழனி வீட்டு வாசலில் கூட்டமாக பாக்கியத்தை (honar killing)கௌரவ கொலை செய்ய வேண்டும் என்று பெண்கள் ஆண்கள் வயதானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் (கட்டுவதற்கு கோமணம் கூட இல்லையென்றால் சாதியை விட்டுக் கொடுக்காத வெறியர்கள்) பாக்கியத்தின் அப்பாவிடம் ஊர் மக்கள் அனைவரும் கட்டளை விதிக்கிறார்கள்

தன் மகளை தன் கையால் பால்டாயில் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊர் மக்கள் சொல்வது எவ்வளவு அபத்தமான விஷயம் ஒரு தந்தைக்கு

பழனி ஊர் அனைவருக்கும் முன் காலையில் என் மகள் இறந்து கிடப்பாள் என்று சத்தியம் செய்து விட்டார்

பலமுறை பாக்கியத்திற்கு தற்கொலை செய்து கொள்ள சூழ்நிலை உருவாக்கி கொடுத்தார் பழனி மாட்டு கொட்டையிலிருந்து கயிற்றை எடுத்துக்கொண்டு வந்து நடு வீட்டில் வைத்துவிட்டு இவர் காட்டுக்கு வேலைக்கு செல்வார் கூடவே பாக்கியத்தின் தங்கை செல்வராணி அழைத்து கொண்டு செல்வார் பாக்கியம் வீட்டில் தனியாக தான் இருப்பாள்

ஒரு நாள் பழனி விருத்தாசலம் சென்று பாலிடாயில் வாங்கி வந்து கொடுத்தார் அதை பாக்கியம் குடிக்கட்டும் என்று செல்வராணியையும் சாமியம்மாவையும் அழைத் துக்கொண்டு போய் பெருமாள் கோயிலில் தேங்காய், கற்பூரம் ஏற்றிவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்கள்

பாக்கியமே மனதை மாற்றிக் கொண்டாலும் அந்த ஊர் மக்களின் முடிவையோ அல்லது சூழ்நிலையை மாற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு இக்கட்டான நிலைமையில் பாக்கியத்தின் தலையெழுத்து எழுதப்பட்டு இருந்தது

இதற்குப் பிறகு அந்த இரவு என்ன நடந்திருக்கும் என்பது தான் கதை
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Karthick.
369 reviews120 followers
May 26, 2022
"மதம் மனிதனை மிருகமாக்கும். சாதி மனிதனை சாக்கடையாக்கும்"

தமிழகத்தில் மட்டும் ஜாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் அரசியல் தலையீடும் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமில்லை.

பெத்தவன் - ஒரு தந்தையின் வலியையும், அவமானத்தையும் சொல்லும் கதை.
பெத்தவன் - சாதித்தூய்மையின் அகோரத்தை சொல்லும் கதை.
பெத்தவன் - சமூக நீதி, ஆதிக்க சக்தியிடம் தோற்று நிற்கும் கதை.

ஒரே ஒரு வசனத்தில் பெத்தவனின் கதை அடங்கிவிடும் :

"நீயெல்லாம் ஒரு அப்பனா? நீயெல்லாம் இந்த சாதியில் பொறந்ததாலதான் இந்த சாத்திய ஒரு பயலும் மதிக்க மாட்டேங்கிறான். நாளைக்கு உம்மவ பொணம் சுடுகாட்டுல வேவனும். இல்லனா ஓம் பொணம் தான் வேவும்"

சாதி அழுக்கை சலவை செய்யாமல் சமூகம் முன்னேறாது !
Profile Image for Parkadhe Anibal.
53 reviews13 followers
November 28, 2023
புத்தகத்திலிருந்து

"இது வீம்புக்குச் சூரிக்கத்திய முழுங்கிற சாதி.கட்டுறதுக்குக் கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டானுவ."

“கண்காணாத தேசமா ஓடிப்போயிடு. எங்கிருந்தாலும் உசுரோட இருக்கணும். காடுகர போனா சம்பாரிச்சிடலாம். சொத்துபத்து, நக நட்டு, பண்டம்பாடி போனா சம்பாரிச்சிடலாம். உசுரச் சம்பாரிக்க முடியாது. இருவது வருசமாச்சி ஒன்னெ பாக்கறதுக்கு. பெத்தவன்ங்கிற மொறயில என்னால ஒனக்கு இதான் செய்ய முடிஞ்சது. இனி நான் செத்தா நீ இல்லெ, நீ செத்தா நான் இல்லெ”

"இந்த ஊரு பயலுவுளுக்கு ஓக்கித மசுரு இல்லெ. ஆம்பளச் செஞ்சா ஒண்ணு, பொட்டச்சி செஞ்சா ஒண்ணா?"

"இந்தக் காசி பணமெல்லாம் , நக நட்டெல்லாம் கொடுத்தது நீ கறிச்சோறு ஆக்கித் திங்கிறதுக்கில்ல. இதெ வச்சி நீ மேம்படுப்புப் படிக்கணும். வாத்தியாரா ஆவணும்..."
Profile Image for Kavin Selva.
47 reviews1 follower
September 21, 2024
மனிதம் இந்த சமூக மூட நம்பிக்கைகளையும், தவறான கட்டமைப்பையும் என்றும் வென்று எடுக்கும் என்பதை இமயம் , தனது உணர்ச்சி மிக்க பாணியில் எழுதியுள்ளார்.


அங்கு அங்கு சமூகத்தை நோக்கி கதாபாத்திரங்கள் கேட்கும் கேள்விகள் நம்மையும் ஒரு முறை கை காட்டி கேள்வி கேட்கிறது.
25 reviews2 followers
September 7, 2020
The Tami writer Ambai describes Imayam’s Pethavan as a story “snatched from the center of many happenings”, and this is true not only for the way it begins: right in the middle of a caste panchayat discussion, but also for the very character of the novella --- it is stripped of many specific details, Imayam lets the story hang bare. The novella does not deal in physiognomy, the reader is free to imagine; and yet, I found myself drawing familiar faces, or at least vaguely familiar outlines unconsciously gathered from newspaper reports, and it became clear to me why Imayam writes (in the introduction): it is more important why he wrote the story than how.

The novella follows the tragic after-life of an inter-caste love story, of Bhakkiyam and Periyasami, a Dalit sub-inspector. In pieces, we are also briefly informed of the origins of this love, and the surrounding social context; death or rape awaits any woman who dares to love outside her caste, we are told. “Pethavan” also highlights the ways in which persons with disabilities are looked at, specifically in rural Tamil Nadu, but also I would say most parts of India. These details make Pethavan difficult to stomach. It is not in any way an enjoyable read, and yet I would not call it raw, because there is definitely an element of literary sleight at work here, there are some clever manoeuvres, most importantly the deliberate blankness at its core. I wasn’t a fan of the translation, it felt awkward in many places. A slim, violent, deftly written novella that brings to light a terrifying reality that has definitely not gone unnoticed but could do with a lot more attention.
Displaying 1 - 30 of 60 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.