எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.
இக்கதைகளை ஏன் நாம் சிறுகதைகள் என்று பெயரிட்டோம் என்று புரியவில்லை. குறைந்த எழுத்துக்கள் கொண்டதனாலா... சில பக்கங்களில் முடிந்ததனாலா... இல்லை அடுத்த கதை உடனே தொடங்குவதனாலா...
இக்கதைகள் ஆழமானவை. மனித கீழ்மைகளை அதன் வேர்களில் வெளிச்சம் போட்டு காட்டுபவை. இயல்பானவை. எதார்த்தம் இவ்வளவு அச்சுறுத்துமா என்று புலம்ப வைப்பவை.
இதில் பல கதைகள், நாம் படித்து முடித்து, விளக்குகள் அணைத்து, போர்வையை இழுத்து முகத்தை மூடிய பின்னும் கண்களை மூட விடாமல், மூட முடியாமல் தவிப்புக்குள் விட்டவை.
வேறு புத்தகம் படிக்க தொடங்கியதும், இக்கதைகளை கடந்து போய் விடுவோமே என்ற வருத்தம் அலை போல் எழுகிறது.
தாமிரபரணியில் கொல்லப்பட்டாதவர்கள்- மாரி செல்வராஜ் ⠀⠀ மாரி செல்வராஜின் ஒர் சிறுகதை தொகுப்பு பெயருக்கு தான் சிறுகதை ஆனால் கதைகள் மிக ஆழமானவை. ⠀ நம் கண்கள் காண தவறிய மனிதர்களை மாரியின் கண்கள் கண்டு கொண்டு விட்டன அனைவரும் கதாபாத்திரங்களாக மாறி கதைகளுக்குள் நடமாடி கொண்டேயிருக்கின்றனர். கண்கள் காண தவறியதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். ⠀⠀ அனைத்து கதைகளும் நம்முள் ஏதோ ஒர் சொல்லமுடியாத உணர்வை ஏற்படுத்துகின்றன. கதைகளை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இல்லை வாசிக்க வாசிக்க நம்மை தினரசெய்கிறது!
புத்தகம் : தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் எழுத்தாளர் : மாரி செல்வராஜ் பதிப்பகம் : வம்சி பதிப்பகம் பக்கங்கள் : 200 நூலங்காடி: சப்னா புக் ஹவுஸ் விலை : 128
🔆 மாரி செல்வராஜ் அவர்களின் புத்தகத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம் இது 21 கட்டுரைகளைக் கொண்டது இந்த புத்தகம்.
🔆வீட்டிற்கு குழந்தைகள் ஒரு நாயை தூக்கிக் கொண்டு வந்தார்கள் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் சுரேஷ் என்று பெயர் வைத்தார்கள் அந்த கட்டுரை தொடங்கி பல கதாபாத்திரங்கள் நம் மனதோடு கலந்த விட்டன. வீட்டிற்கு வாங்கிய பசுவை பிடிக்காமல் போனது, பின்பு தொலைந்து போன போது பரிதவித்தது, இறுதியாக அந்த பசு இறந்த போது, மனம் உடைந்து போனது.
🔆 புளியங்குளம் கூட்டத்திற்கு சென்ற கட்டுரை மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. வீட்டில் பிள்ளையை காணவில்லை என்று ஒரு புறம், தலைவரை ஒரு முறையாவது பார்த்து விட முடியாதா என்று மக்கள் கூட்டம் ஒரு புறம் , திடீரென்று காவல்துறை நடத்திய தடியடி என தாமிரபரணியில் சொல்லப்படாதவர்கள் நம் மனதில் ஒரு ரணத்தை ஏற்படுத்துவிடும்.
🔆 நம் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
இந்த வருட சென்னை புத்தக விழாவில் மாரி செல்வராஜ் எழுதிய "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன்.
இந்த புத்தகத்திற்கு வண்ணதாசன் முன்னுரை எழுத, இயக்குனரும், மாரியின் குருவுமான ராம் "ஒரு ஊர் ஒரு நதி ஒரு பெருங்கடல்" என்னும் உரையை எழுதியிருக்கிறார். ராம் எழுதிய இந்த குறிப்பின் வழி ராமுக்கும் திருநெல்வேலி தான் சொந்த ஊர், அவரின் தாத்தா, அப்பா ஆகியோர் வாழ்ந்த ஊர் என்று அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ராமின் திருநெல்வேலியும், மாரியின் திருநெல்வேலியும் ஒன்றல்ல. ஆம் ராமின் ஸ்ரீவைகுண்டமும், மாரியின் புளியங்குளமும் ஒன்றில்லை தான்.அவற்றை தாமிரபரணி எனும் நதி பிரித்திருந்தது. அந்த பொல்லாத நதி தான் எத்தனை கோர முகங்களைப் பார்த்தும், இரத்தங்களை புசித்தும், எவ்வித சலனமுமின்றி 'ம்'-என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரின் குறிப்பை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது.
நாய்க்குட்டி சுரேஷ் கதை தொடங்கிய ஒரு உணர்வெழுச்சி அப்படியே அடுத்த பத்து கதைகளை படித்து முடிக்கும்வரை குன்றாமல் இருந்தது.
சுரேஷ்-க்காக இரங்கினேன். பத்மாவிற்காக இரங்கினேன். அவள் வைத்து வந்த அடுக்குசெம்பருத்தியின் அர்த்தம் புரிந்து மரித்தேன். தட்டான் பூச்சிகளுக்கான வீட்டைக் கண்டு சிலாகித்தேன். உண்மையில் இனிமேல் "தட்டான் தட்டான் வீடு கட்டி பறந்தேன் கோழி தூவாட்டோ" என்று தான் பாடத்தோன்றுகிறது. மாரியின் கதையில் வரும் சென்பகவல்லி என் வகுப்பு முனியம்மாளை ஞாபகப்படுத்தியது. சென்பகவல்லிகளுக்கும், முனியம்மாக்களுக்கும் பெயர் மட்டுந்தான் வித்தியாசம். முதல் கல் என்ற கதையில் வரும் வசந்தி அக்கா, அக்கதையில் வரும் நண்பர்களில் காமங்களின் மீது மட்டும் காரி உமிழவில்லை! என்பது புரிந்தது கண்டு தலைகுனிந்தேன்.
மாரி இந்த கதைகளில் புனிதங்களையும் அவற்றின் பினிருக்கும் அபத்தங்களையும் காட்டுகிறார். அதோடு அபத்தங்களின் அழகையும் காட்டுகிறார். கொள்கை கோட்பாடென திரியும் 'புனிதரான' அப்பாத்துரை மாமா போஸ்டரில் சிறுநீர் கழிக்கிறார்கள், சேற்றில் புரண்டு வாழும் பன்னிக்காக இரங்குகிறார்கள். கதிரேசன் மற்றும் முண்டன் மூலம் தலித்களுக்குள் இருக்கும் சாதிய இறுக்கத்தை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கும் "நின்றெரியும் பிண"த்தை எரிப்பது கடைக்கோடி வரை புரையோடி இருக்கும் சாதியின் தீ நாக்குகள் தான்.
"எனக்கு ரயில் பிடிக்காது" என்ற கதைதான் எனக்கு மிகவும் பிடித்தது. பேசாமல் ரயிலே அந்த மாட்டை கொன்றிருக்கலாம் என்று தோன்றியது. ஓர் உயிர் போவதின் கடைசி மணித்துளிகளை நம் கண்முன் நிறுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்ததைப் போல இருக்கும் "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" ஒரு கதை மட்டும்தானா என்றால் அதுமட்டுமல்ல, அது ஒரு வரலாற்றுப்பதிவு. ஒரு பெரிய வரலாற்றுப் பேரலையில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்த ஒரு கடையனின் காலப்பதிவுகள். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்குத் தெரியாது, உயிருக்கு பயந்து ஓடிய ஒரு சிறுவனால் இது பிற்காலத்தில் பதிவுசெய்யப்படும் என்பதை. வரலாறு எதையும் மறந்துவிடாது. பாதிக்க���்பட்டவனின் கதையில் தான் பல அபத்தங்களும் அபத்தவாதிகளும் வெளிப்படுவர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்கச்சொல்லி பிரிட்டனிடம் எதிர்பார்க்கிறோம்.அதே சமயம் இந்த மாஞ்சோலை தொழிலாளர் படுகொலையை வரலாற்றிலிருந்து அகற்றப்பார்க்கிறோம். நாமெல்லாம் என்ன சமூகமோ!.
மொத்தத்தில் மாரி மனதில் ஒரு எழுத்தாளராய் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார்.
Revolving around the region of Tirunelveli and Tuticorin district, this Tamil anthology Thamirabharaniyil Kollappadaathavargal, draws mostly from the writer's childhood and youthful experiences, travels across the themes of relationships, casteism and discrimination, politics, gender and sexuality. It wasn't aiming to make the readers enlightened and intellectual but emphathize and understand things outside of one's own comfortable bubble.
Every story has the potential to take the readers back to their nostalgic childhood days and moments at schools, bus stops, canteen, beaches, next door grandmothers and many more little things that'd add more sweetness to the living. Having lived a portion of my childhood days in some of the places he mentioned gives new perspectives to my romanticism and view of my native town.
“My entire schooling was in my village. It was when I stepped into the law college, I first came to a town. But college life was not a good experience. The first question I faced was about my caste. Since I was considered as an insubordinate student, whatever I did went wrong. At one point of time, a police case was registered against me and that was when I discontinued my studies and ran away from home.”
Beside his writings, he has directed a highly commendable tamil movie Pariyerum Perumal (2018) which explores a story of dalit law student dealing with the notions of love, relationship, humiliation with caste politics and honor killings.
“Party leaders see politics as business. Mine was ‘frustrated politics’ because whatever I lost in it during my early life have not been compensated till now. Tamil Nadu is in a state of ‘sexual poverty’. Having a woman’s friendship is considered a fantasy. At this juncture, understanding either sex becomes critical. I think my stories reflect that criticality.”
Overall, this collection of stories are wonderful to have for any tamil readers. For people who still live in villages at heart irrespective of where they are.
புத்தகம் : தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ஆசிரியர் : மாரி செல்வராஜ் பக்கங்கள் : 200 பதிப்பகம் : வம்சி புக்ஸ்
வெளியூரிலிருந்து நான் ஊருக்கு விடுமுறைக்கு வரும் போது ஆத்தூரில் தாமிரபரணி ஆத்துப்பாலத்தை கடக்கும் போது ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும், ஊருக்கு அருகில் வந்து விட்டோம் என்று தாமிரபரணியின் நீர்த்திவலைகளாய் உள்ளமும் குதிக்கும். அதுதான் சிறுவயது முதல் எனக்கு பரிச்சயமான தாமிரபரணி.
பின் எப்போதோ திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், கரையில் இருந்த கோவில் கோபுரம் முங்க தண்ணீர் ஓடியதை அம்மா பார்த்தாக தொலைபேசியில் சொன்ன நியாபகம்.
முதல் முறை தாமிரபரணியில் குளித்த போதும், பின் 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் தாமிரபரணியின் மகா புஷ்கரத்துக்காக 2018ல் குடும்பத்துடன் சென்று கும்பிட்டு குளித்து வந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. அது அழகான தாமிரபரணி, நான் அறிந்த, நேசித்த தாமிரபரணி.
ஆனால் மாரி செல்வராஜ் தன் எழுத்தில் காண்பித்த இந்த தாமிரபரணி எனக்கு சற்றும் பரிட்சயமற்றவள். இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த சமயம் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடக்கும் போதும், அதன் அருகில் வைத்து இந்த புத்தகத்தை புகைப்படம் எடுத்த போதும் என் கண்ணில் தெரிந்தது நான் இதுவரை ரசித்த தாமிரபரணி அல்ல, 11 ஆம் கட்டுரையில் மாரி செல்வராஜால் எழுதப்பட்ட 17 உயிர்களை காவு வாங்கிய தாமிரபரணி.
அந்த கட்டுரை வாசித்தபின் முதலில் அது பற்றி நான் கேட்டது அப்பாவிடம் தான். ஏனென்றால் சிறுவயதில் விவரம் அறியாத போது அந்த சம்பவம் குறித்து அப்பா குறிப்பிட்ட நியாபகம். இப்போது அதை கேட்ட போது இனி மீண்டும் என் தாமிரபரணியை பழையபடி பிரியத்துடன் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
அத்தனை தாக்கம். அதேபோல் தாக்கம் ஏற்படுத்தும் 21 கதைகள். தோலுரித்து காட்டப்பட்ட சாதியம், அதன் கோரமுகம், இப்போதும் இது மாறாத ஊர்களை கண்முன் காணும் அவலம் தொடர்ந்து கொண்டு இருப்பதுதான் கூடுதல் வேதனை.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் அல்ல இதுவரை யாராலும் சொல்லப்படாதவர்கள்
21 சிறுகதைகளைக் கொண்ட புத்தகம். கிராமம், சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால்யம், காதல், காமம், உடல், மனம் எனப் பல பேசு பொருள்கள்.
சென்பகவள்ளி புராணம், என் தாத்தாவை நான்தான் கொன்றேன், தனிமையை கவ்வித் தின்னும் பன்றிகள் இந்த மூன்று கதைகளும் எனக்குப் பிடித்திருந்தது.
1) மிகவும் வெள்ளந்தியாய் ஒருத்தி பள்ளிக்கூடத்தில் நம் கூட படித்திருப்பாள். சென்பகவள்ளி புராணத்தைப் படிக்கையில் அவள் கட்டாயம் நம் நினைவிற்கு வந்து போவாள். 2) படுக்கையில் இருக்கும் தாத்தாவிற்கு மருந்து வாங்கச் சென்றவன், அப்படியே சினிமாவுக்குப் போய் விடுகிறான். திரும்பி வருகையில் தாத்தா இறந்து கிடக்கிறார். இதோடு கதை முடிந்துவிடும். ஆனால் நிச்சயம் நாம் அந்தச் சிறுவனின் குற்ற உணர்ச்சி கொண்ட மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிப்பதற்கு சில வினாடிகளை எடுத்துக் கொள்வோம். 3) உணவுக்காக ஒரு பன்றியைக் கொன்று விடுவார்கள். பிறகு தான் தெரியவரும் அது சமீபத்தில் குட்டிகளை ஈன்ற தாய் பன்றி என்று. இந்தச் சம்பவம் இக்கதையின் முதன்மைக் கதாபாத்திரத்தைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். ஆனால் சிலருடைய மனம் மட்டுமே அதனை இடித்துக் காட்டிக் கொண்டே இருக்கும். நாம் நிம்மதியின்றி இருப்பதை ரசிக்கும். இது மனதைப் பற்றிப் பேசும் ஒரு நல்ல கதை.
சில கதாபாத்திரங்களினாலும், அதன் வசனங்களினாலும் சில கதைகள் பிடிக்காமல் போய்விட்டன. வன தெய்வம் என்ற கதை மொத்தமாக பார்க்கையில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கதை போலவே தோன்றியது.
ஒரு வாக்கியம் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் அல்லது எழுத்து வழக்கில் இருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தது போல இருக்கும் வாக்கியங்கள் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரவில்லை. பக்கத்திற்குப் பக்கம் சந்திப் பிழைகள் இருந்தன. இந்தப் புத்தகம் தொடர்ந்து விற்பனையில் இருப்பதால் இதில் உள்ள சந்திப் பிழைகள், எழுத்துப் பிழைகள் மற்றும் அச்சுப் பிழைகளை நீக்கிவிட்டு அடுத்த பதிப்பு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சிறுகதைகளா இவை? ஆழமான அழுத்தமான கதைகள். இயல்பான, பால்யத்தின் சுவடுகளோடு பயணிக்க வைத்து தெருக்களிலும் வீடு நீண்டிருந்த காலங்களை கண்முன்னே நிறுத்துகிறார்.
சாதிகளின் கோரப்பற்களை இழுத்துக்காட்டி, காதல், அன்பு, வன்மம், காமம், வேலையின்மை, விலங்குகளின் மேல் கொண்ட பரிவு, அரசியல், மேன்மக்கள் எனச் சுற்றித்திரிந்த மனிதர்களின் சுயம் என அனைத்தையும் துகிலுத்து எழுத்தாக்கி இருக்கிறார் மாரி.
இப்புத்தகத்தின் சமர்���ணம் அத்துனை அழகு!
தட்டான்பூச்சிகென வீடு, மருந்து வாங்க சென்று படம் பார்த்துவிட்டு வந்து அடி வாங்குவது, சின்ன வயதுக்கே என உள்ள அறியாமையின் தத்ரூபமான விடயங்கள்.
அன்புள்ள மாரி,
நீங்க எவ்வளவு வேனா படமெடுங்க, ஆனா எழுதுவதை மட்டும் என்றும் நிறுத்தாதீர்கள்!
அதிகாரத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் அதிகாரத்தின் மீது வீசப்பட்ட கல்லுக்கு பலியான உயிர்களின் சாட்சியாக முகிலனும், இராஜகிளி மாமாவும் தாமிரபரணியில் மட்டுமல்ல அதிகாரத்தின் பசிக்கு உயிர் பலி கேட்பதற்கான சாட்சியாக எல்லா போராட்டங்களிலும் இருக்கின்றன.
மாரி செல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்னும் இந்த புத்தகம் சில பக்கங்களைக் கொண்ட பல சிறுகதைகளின் தொகுப்பு . ஆனால் இதை சிறுகதை என்று சொல்வதைவிட ஒரு டாக்குமென்டிரியோ அல்ல ஒரு குறும்படமோ பார்த்த உணர்வை தான் ஏற்படுத்தியது . இதற்க்கு காரணம் மாரியின் எழுத்து நடை . சம்பவங்களை கண்முன் காட்டும்படியான மிக தெளிவாக வெளிப்படையாக விவரிக்கும் அந்த எழுத்து.
ஒவ்வோரு கதையும் ஒரு வெளிப்படுத்த இயலாத உணர்வை ஏற்படுத்தும். சில கதைகள் கதறி அழ தூண்டும் சில கதை தலை மேல் கை வைத்து எதுவும் செய்ய இயலாமல் ஒரு மூளையில் உட்கார வைக்கும். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்ச்சியின் உச்சத்தை தொட்டுச் செல்லும்.
இந்த கதையில் வரும் மனிதர்கள் யாவும் நம்மூரில் நம்முடன் வாழுபவர்களே. இதில் வரும் மனிதர்களுக்கு நிகழும் அவமானம் , ஏமாற்றம் , இயலாமை எல்லாமே நம்மை போல வாழும் சக மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிறது என்பதே பெரும் வேதனை.
எந்த புத்தகமும் என்னை இந்த அளவுக்கு பாதித்தது இல்லை. எனக்கு இந்த புத்தகத்தை பற்றி எதுவும் எழுத தோன்றவில்லை, பிடிக்கவில்லை நீங்களே படித்து உணருங்கள் அவ்வளவுதான்.
புத்தகத்தில் இயக்குனர் ராம் எழுதிய அறிமுக உரையிலிருந்தே பல எண்னங்கள், அனுபவங்கள் நமக்கு கிடைக்க ஆரமிக்கின்றன. ஒரு விசயம் எல்லோருக்கும் ஒரே மாதிரி அமயரதில்ல. அதே திருநெல்வேலிதான் இயக்குனர் மாரிக்கு வேறாகவும், இயக்குனர் ராமிற்கு வேறாகவும் பரிணமிக்கின்றது. இது எல்லோருக்கும் எல்லா விசயத்துக்கும் பொருந்தும். இதிலிருக்கும் 21 கதைகளும் அப்படியே.. நிச்சயம் இதிலிருக்கும் மனிதர்களை நாம் வாழ்வில் ஒருமுறையேனும் கடந்து சென்றிருப்போம், இனியும் கடந்து செல்வோம்.
ஒரு நாய்க்குட்டியின் உலகம், பள்ளி காதலால் இறந்த ஒருவன், மிகவும் ரசிக்கும் ஒருத்தியின் அவமானம், சிறுவர்களின் சிலை திறப்பு படலம், ஊரே அலையும் அழகிய விலை மாதுவின் மரணம், ஆசையாய் வளர்த்த உயிரின் மரணத்தை அருகிலிருந்து கவனிக்கும் சிறுவன், ஒரு போராட்டகளம் அல்லது வரலாற்று குறிப்பு அல்லது அதிகார வர்கத்தின் அன்றாடதிற்கு பலியானவர்களின் கதை. தம்பதியினரின் தற்கொலை, தாத்தாவின் மரணம், புதிதாய் ஈன்ற பன்றிகளின் கொலை இவற்றிற்கெல்லாம் காரணமானவனின் குற்ற உணர்வு. அப்பாதுரையின் அற்பகுணம், காதலனுக்காய் எத்தகைய எல்லைக்கும் செல்பவளுக்கு வாய்த்த காதல் கணவன் கதை, தாய் தன் மகனுக்கெழுதும் கடிதம், விருப்பதிற்குரியவரின் உடல், உடலிலிருந்து பிணமாகும் கதை!
இவையெல்லாம் மிகவும் பாதித்தவை.
“இல்ல பாட்டு நல்லாயிருக்கும், எனக்கு ரொம்ப புடிச்ச ராஜ ராஜ சோழன் நான் இதில தான் இருக்கு! அதுக்கு.. படத்த போய் வாங்குவியா? நல்லாவே இருக்காது ரெண்டு பெண்களை ஏமாத்துற கதை. பார்க்கறதுக்கே கடுப்பா இருக்கும். அத வெச்சுகிட்டு காமெடி வேற பண்ணுவாங்க!
ஏன் ஜோ உனக்கு ரெண்டு ஆம்பிளைங்கள ஏமாத்துற மாதிரி இருந்தா பிடிக்குமா?”
“திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் விழுந்த அநாதை பிணமாக தான் அவன் சாக வேண்டியதிருக்கும்”
இந்த மாரி, மாரி டச் நிறைய ரசிக்க வைக்கும்… எனக்கு பால்யம் பிடிக்கும்ன்றனாலவோ என்னன்னு தெரியல, இதுல இருக்க பால்யம், விடலை பருவத்து கதைகள் அனைத்தும் பிடிச்சுது. பொறுமையா படிங்க… 21 கதைல ஒரு கதை உங்களுதா கூட இருக்கலாம்!
நினைவில் கொதிக்கும் பால்யம் என்னும் இப்புத்தகத்தின் தொடர் இன்னும் கொதித்துக்கொண்டே இருக்கிறது என் நினைவில்🖤
இப்புத்தகத்தை பற்றி மாரியின் ஆசானான இராமின் சில வரிகள்
"நகரங்களில் வாழ்ந்த எனக்கு கிராமத்து விதிகள் அகப்படுவதாய் இல்லை. நான் வாழ்ந்த நகரங்களில் நீ என்ன சாதி என்று நேரடியாய் யாரும் கேட்டது இல்லை. யோசித்துப் பார்க்கையில் நகரம் கிராமத்தைக் காட்டிலும் பத்திரமானது என்று தோன்றியது. சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது .
தாமிரபரணி, திருநெல்வேலி, அப்புறம் செல்வத்தின் கதைகளில் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள், அலைந்து திரியும் பெருங்கடலாய்.
பெண்களின் பெயர்கள் சுதா, கோமதி, செண்பகவள்ளி, விஜயலட்சுமி, சாந்தி, வசந்தி, முத்தாரம்மா என வெவ்வேறாக இருந்தாலும் ஆண்களின் உலகில் அவர்கள் அழகு சதை கூந்தல் முலை பிட்டம் மலர் கற்பு என்ற ஒற்றை அர்த்தம் மட்டுமே கொண்டிருக்கிறார்காள்.
அவர்கள் பயந்து நடுங்கி மனம் பிறழ்ந்து அழுது அரற்றி வாயடைத்து மொழியின்றி பாவாடையில் எல்லோருக்கும் முன்னும் மூத்திரம் பெய்தார்கள். பெய்கிறார்கள். பெய்து கொண்டிருப்பார்கள். இந்த உலகத்தின் பெரும் வாசனை அவர்களின் மூத்திர வாசமே.
தாமிரபரணி மட்டும் அல்ல அனைத்து நதிகளிலும் அவர்களின் முத்திரமே ஓடி ஓடி உப்புக்கடல் சேர்கிறது. அவர்கள் அலைந்து திரியும் பெருங்கடல் ஆகிறார்கள்.
வசீகரக் கறுப்பு நிறத்துடனும் எள்ளல் மிகு கண்களுடனும் பெட்ரோல் கிடக்கா?" போன்ற நெல்லையின் உச்சரிப்புகளோடும் என்னோடு ஏறக்குறைய 5 வருடங்கள் வசிக்கிற வாழ்கிற மாரிசெல்வராஜ் என்றும் மாரி என்றும் செல்வம் என்றும் அழைக்கப்படுகிற இவன் மீதான என் பிரியங்களையும் அக்கறைகளையும் எதிர்பார்ப்புகளையும் நான் எழுதவேண்டாம் என்று நினைக்கிறேன். எழுதிச் சொல்லமுடியாத நேசங்கள் எழுதிச் சொல்லும் போது அர்த்தமற்ற நாடகமாய் ஆகிவிடுகிறது என்பதால்..."
✨திருநெல்வேலியின் அல்வாவின் இனிப்பும் , குற்றாலம் நீர்வீழ்ச்சியின் குளிரும் மட்டும் தெரிந்த நமக்கு , தாமிரபரணியின் கசப்பும் , அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வும் அதன் கசப்பும் காட்டுகிறது இந்த கதைகள் .
✨" கதைகள் எப்பொழுதும் இனிமையாக இருக்கவேண்டும் என்றோ , மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றோ எந்த அவசியமும் ���ல்லை , பெரும்பாலும் இருப்பதும் இல்லை "
✨21 சிறுகதை தொகுப்பில் ஏறத்தாழ எல்லா கதைகளும் நம்மை தொந்தரவு செய்யும் கதைகளை கொண்டது , மாரி செல்வராஜின் வாழ்வின் மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார் அவர்களின் வாழ்வு நிறைய கசப்பு கொண்டதாகவே இருக்கிறது , எல்லா கதைகளையும் ஒரே வீச்சில் படிக்கும் அளவு மாரி செல்வராஜின் எழுத்து இருக்கிறது .
✨செண்பகவல்லி புராணம் , பால்யத்தின் நினைவு போன்ற கதைகள் தூக்கத்தை கூட கலைத்துவிடும் .
✨தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மாஞ்சோலை படுகொலை கண்முன் நிறுத்திகிறது, இதில் நிறைய அரசியல் மறைந்தும் , வெளிப்படையாகவும் ரசிக்கும் எழுத்துடன் இருக்கிறது .
✨sarcasm தோணியில் சில கதைகளின் முடிவு நம்மை சுற்றிய வெள்ளை சட்டை போட்ட அழுக்கு மனிதர்களை காட்டுகிறது .
✨ஒரு எழுத்து தாகத்திற்கு சரியான ஊற்றாகவும் , ஒரு எழுத்தாளனுக்கு வார்த்தைகளின் கையாடல்கயும் காட்டுகிறது இந்த புத்தகம் ,
✨மனிதனின் கசப்பை உமிழ்ந்து துப்புகிறது இந்த கதைகள் , ஒரு முறை நீங்களும் இந்த அழுக்கு நிறைந்த , நிறையப்பட்ட ஆற்றில் முங்கி எழுந்திடுங்கள்
இந்த முழு நிர்வாணகதைகளுக்கும் உண்மைக்கும் 5 STAR ⭐️ மாரி செல்வராஜ்ன் முதல் புத்தகம். ஊரில நடக்கும் கதைகளை தம்முடனும் , கதைசொல்லியாகவும் வந்து எழுதும் எழுத்துநடை எனக்கு ஏற்பில்லை. தலையங்கங்கள் பொருந்தவில்லை. ஆனால் வெளிப்படையாக பீ யை பீ என்று சொல்லவும் , அம்மாவின் , மனைவியின் நிர்வாணமாக்கும் கதைகளை சொல்வதில் எந்த அச்சமும் அடையாத மாரி செல்வராஜ் ஒரு சிறந்த படைப்பாளி . இவருக்குள் இந்த கதைகள் படிப்படியாக ஒரு கதைசொல்லியாக உருவாக்கியும் . நிஜ கதைகள் என்றும் நாடக்க்கதைகள் இல்லை . சில கதைகள் என்னை உலுக்கியது. சினை மாடை வாழைப்பழத்தில் விசம் தடவி கொன்னவர்களை , ்அப்பா அ்அம்மா அண்ணன் அடிக்கு பயந்து ஒழிந்த மாரியை, ஊருக்கு உபதேசம் செய்து சாதி வெறி பிடித்த அப்பாத்துரை மாமாவை, தட்டான் பூச்சிகளின் வீட்டை , தாமரபரணியில் கொல்லப்படாதவர்கள் கதையை . இந்த சாதி கதைகளை துன்பங்களை அடுத்தவர்கள் கற்பனையாக்கி கதை சொல்வதை தவிர உண்மை இருப்பதில்லை . இது உண்மையின் எழுத்து கதைகள் கற்பனைகள் இதில் தெரியவில்லை. மாரி செல்வராஜ்சிடம் “பரியேறும் பெருமாள்” பின்பும் இவ்வளவு உயிரோட்டமான கதைகள் இன்றுவரை இருப்பதற்கு காரணம் இவை அனைத்தும் உண்மை என்பதாலே. என்றும் மாரி செல்வராஜ் சிறந்த பட இயக்குனர்.சிலரே இவர் ஆளுமையை அடைய முடியும் .இன்றைய மாரி செல்வராஜின் அடிப்படை துகள்களை இந்த கதைகள் சொல்கின்றது. அம்பேத்கர் எவ்வளவு முக்கியமானவர் அவர் பொதுத்தலைவர் ஆக்கப்பட வேண்டியவர் அவர் மாமனிதர் என்பது உண்மை.
To be honest, my opinion on Mari Selvaraj before this was just 'him being a good film maker'. "As long as he has Good content, he can deliver them with ease and keep making good films" was the only thing on my mind. This book has completely changed that thought. This guy has stories and he will never be lacking content. He has stories to tell for generations and damn he's a very good story teller.
As far as short story books are concerned, I could easily finish 15-20 storis in a week span as I love hearing stories. But completing these 21 stories atleast took me a couple of months. Not that they were difficult to read, but was quite tough to process for me. Such was the impact. I could never finish a story and immediately start off a new one. The former one was crawling all over my mind that forced me to have a pause before the next story.
As said before, Mari has stories to tell for generations and he'll be hitting with them real hard, be it through the screens or the papers.
மாரி செல்வராஜ் என்னும் கதைசொல்லி🖤
PS: Ranjith's signature on this cover makes it much more special for me personally 🙈🖤
முதற்கதையிலேயே வாலாட்டாத சுரேசைப் பார்த்தபோது எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. அதைப் போலத்தான் சுரேசைப் பார்த்தேன் நான்.
புயல் மழைக்கு ஒடிந்து உதிர்ந்து சிதறும் வண்ண மலர்கள்
கடைசிவரை சாயம் போகவில்லை ஓரிதழும்.
வலிகளை எல்லாம் பொதுமை படுத்தும் பாங்கு, காக்கா வடை சுட்ட கதை சொல்லத் தெரியாத தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள், குற்றவுணர்வின் ஆறாத் தழும்புகள், ஒப்பனை இல்லாத மனித மனங்கள், கிழிபடும் பொதுவெண்ணங்கள், முகத்தில் அறையும் உண்மை நிலை மற்றும் நிகழ்வுகள் நிறைந்த கதைகளின் மூலம் எனக்குத் தெரியாத ஒரு திசையைக் காண்பித்து இருக்கிறார்.
பீயைப் "பீ" என்று சொல்லாமல் மலம் என்று தின்னும் பன்றியாய் உடம்பு நாறியது.
"சுதந்திரமானவர்களே! சந்தர்பத்தின் கொடூர வாயிலிருந்து மிகச் சரியாக தப்பித்துக்கொண்டவர்களே, எல்லா உணர்வுகளையும் ரகசியமாய்ப் பாதுகாத்து அதை அனுபவிக்கத் தெரிந்தவர்களே, எல்லாம் தெரிந்தும் ஊமையாகவும் செவிடாகவும் வாழும் நல்ல மனிதர்களே...."
ஆகிய வரிகள் என்னைத் தூங்க விடாமல் செய்தன. குறிப்பாக வனத் தெய்வம் கதையின் கருவையும் கதை வடிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
This entire review has been hidden because of spoilers.
I seriously wish that there is an English translation of this book and I could recommend it to you all to read. This is a book about people whom you have crossed everyday in your life, but failed to notice. This one is not preachy or rebellious, it is simply about the lifestyle of those common people and helps us notice them and look around.
I belong to Tirunelveli district as well and I haven't noticed these common folks in my entire lifetime. They always cross the streets and roads and I had moved away from them in disgust. Or maybe that's what I was preached from a very young age.
This book just shattered all my identity, all my perceptions and spoke about sex, gender, desire sex workers, humans, their behaviour, dogs, cows and pigs in a way it was never spoken of. Maari Selvaraj annan has been one of my favorite directors right from his movie 'Pariyerum Perumal' and now I just look at him and he stands at a height that I won't ever reach.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – உணர்வுகளை கிழித்தெறியும் கதைகள் - மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இந்த நூலில் சொல்வது கதைகள் அல்ல, வரலாறுகள்! ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரை காகிதத்தில் சொற்களாக வடித்தெழுதும் போது, அது நம்மை உள்ளுக்குள் நொறுக்குகிறது. சாதியால் சிதைந்த வாழ்வுகள், அன்பு கூட அனுமதி கேட்க வேண்டிய சூழ்நிலைகள், குழந்தையின் கண்களில் society-யின் கொடூரம்—ஒவ்வொரு பக்கத்திலும் மனதை கிளறி எறியும் உண்மைகள்.
இந்தக் கதைகள் முடிந்தாலும் அந்த வலி மனதில் இருந்து மங்குவதில்லை. இதை படிக்கிறவர்களால் அனுபவிக்க முடியாது... உணர்ந்தே ஆக வேண்டும்!
கதைகளில் கொல்லப்பட்டவர்களும், கொல்லப்படாதவர்களும் மாறி மாறி கனவில் வந்து என்னை சந்திக்கிறார்கள்... அவர்களின் வேதனைகள் என் இதயத்துக்குள் நுழைந்து கதற வைக்கின்றன. மாரி செல்வராஜ் இந்த நூலில் கதைகளை சொல்லவில்லை—நிஜங்களைச் செதுக்கி, நம்மை எதிர்கொள்ள வைத்திருக்கிறார்.
இந்த புத்தகம் உங்கள் மனதை ஊடுருவி விடும், உங்கள் மௌனத்தைக் கூட ஒரு குற்ற உணர்வாக மாற்றும்! படித்த பிறகு நிம்மதியாக இருக்க முடியாது... ஏனெனில், இது ஒரு நூல் அல்ல—ஒரு அனுபவம்
"Thamirabaraniyil Kollapadathavargal" (Those who Survived Thamirabarani) is a compelling collection of 21 short stories penned by Mari Selvaraj, delving into themes of childhood innocence, love, lust, guilt, disgust, casteism, discrimination, and oppression. Set predominantly in the rural areas of Tirunelveli and Tuticorin, some may find the inclusion of local slang a bit challenging. However, Mari exhibits remarkable skill in immersing us in these rural settings, fostering empathy for the characters. While a few stories, such as the Anand-Shah short story, didn't resonate with me as strongly, the majority are impactful, and some stories prompting me to pause and reflect on the emotions. I recommend this book but please note that this book is for adult readers aged 18 and above.
A very different Maari Selvaraj than what we see in his movies. Written over the last ten years, one can see Maari selvaraj dabble with themes very varied than his two films. The title story stands out - probably because it is very close to the themes that he explores in his movies. The character of Mugilan leaves the same mark that Pari from Pariyerum Perumal. There are a few stories dealing with the harshness of life for oppressed communities in Villages. A few other stories take on adolescence, lust and love of rural Tamil Nadu. Whether they are successful or not, one thing that is constant across the stories is how well Maari captures the essence of Tirunelveli/Tuticorin life.
Hailing from the Foothills of Western Ghats, Especially the borders of Tirunelveli, This book gave me a sense that all these stories are happening in my next street. Mari's movies has previously instilled a sense of pride and prejudice to my hometown. But, this book destroyed all of that, pushed me into borderline identity crisis and showed that the pure blue river of Thamirabarani is dirtier (bloodier) than the stinky black cooum of Chennai. Now after this book, I understand the violence and the gore, his movies has. His movies are mere 1% of the intensity in his writings.
தரமான படைப்பு highly recommended 🔥 ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்களிடம் மிக மிக அருகாமையில் நின்று உரையாடுவது போல் இருக்கும். விலங்கு,செடி,மரம்,நதி,பூச்சிகள்,பறவைகள் ஏன் பேய் கூட அழகியலோடு எழுதப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் இப்புத்தகம் தொட்டுள்ளது.
இது ஒரு என்ற இலக்கிய புத்தகமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நான் வாசித்த மிகச் சிறந்த இலக்கிய புத்தகம் இது
நீதிக்கதைகளையோ, தந்திரக்கதைகளையோ மற்றுமினறி புராணக் கதைகளையும் கேட்காமல் தன் அண்ணன் கூறிய வாழ்க்கை நிகழ்வுகளை கேட்டுத் தூங்கியவன் நான் என்ற முன்னுறையோடு துவங்குகிறது இச்சிறு கதைத் தொகுப்பு. தாம் கண்ட மனிதர்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார். சில கதைகள் மனதை பிசைவதாகவும், சில கதைகள் அவரின் கதைகளில் வரும் பன்றிகள் போன்று அருவருக்கத் தக்கதாகவும் உள்ளன.
Its has some truth of society and The Mari Selvaraj write is show some bold move also amateurs in this book. But must read some of characters in book in never forgot.தாமிரபரணியில் கொல்லப்பட்டார்கள் is super but I read மறக்கவே நினைக்கிறேன் so I don't pike the narrative from this book after first book Mari do best work in next for my opinion
வாசித்து முடித்த பின், எழுந்து "தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்" புத்தகத்தை செல்ஃப்பில் உள்ள மற்ற புத்தகங்களுக்கு இடையில் வைத்தேன். இரண்டடி பின் சென்று பார்த்தேன். திருநெல்வேலி கூட்டத்தில் தொலைந்த முகிலன் போல முன்னும் பின்னும் புத்தகங்கள் உரச அசயதிருந்த மாரி செல்வராஜின், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்களை பார்த்து எனக்குள் மென்மையாக அலறிய வார்த்தை "நின்றெரியும் பிணம்".
தன்னை பாதித்ததை,தான் பாதித்தை அத்தனை உண்மையோடு எந்த சமரசமும் இன்றி எழுத்தாளர் போட்டு உடைத்துள்ளார். புதினங்களில் கற்பனைகளில் எழுதுவது வேறு ஆனால் தான் சார்ந்த உலகில் தனக்கு நடந்தவற்றை எந்த ஒரு அச்சமும் இன்றி சொல்லியது பாராட்டுதலுக்கு உரியது. வகுப்பின் சக தோழியின் மயிரை கத்தரித்ததை எல்லாம் ஒரு எழுத்தாளன் போட்டு உடைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.