கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.
From Wiki: கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
குத்துற ஒரலுக்கு ஒரு பக்கம் அடி, அடிக்கிற மத்தாலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி , சுத்துற ரொப்பு உரல் குழவி கல்லுக்கு எல்லா பக்கமும் அடி . அப்படித்தான் ஆகிப்போச்சு அஞ்சலை வாழ்க்கை எல்லா பக்கமும் அடி ,துன்பம் கண்ணீர் அவமதிப்பு, ஏமாற்றம். அவ வாழ்க்கை முழுவதும் ஊர் மக்கள் சொல்லும் வாய் பேச்சும் வம்பு பேச்சும் தான் முடிவு செய்யுது. நடவு நட பேன எடத்துல காட்டுகாரன் மவன் கூட சிரிச்சி பேச ஊரு கதை கட்ட இவளுக்கு கல்யாணம் பன்னிடலாம்னு ஆத்தா காரி முடிவு பன்ன, அவ மருமவன் கிட்ட சொல்ல நானே இவள ரெண்டாம் தரமா கட்டிக்கிரேனு அக்கா வீட்டுகாரன் சொல்ல முடியாதுனு தலையாட்டிடுறா அஞ்சலை.இருடி உன்ன பாத்துக்கிறேன்னு அவள பழிவாங்குறான் அக்கா வீட்டுகாரன். அப்பன் இல்லாம கம்முனாட்டிய கெடந்து மூனு பொட்ட பிள்ளையும் ஒரு ஆம்பளை பிள்ளையும் வளந்தா அவ ஆத்தா காரி கல்யாணி அவள சுளூவா எல்லாரும் ஏமாத்தி போடறாங்க. பிறகு அவள் வாழ்க்கை எங்கெங்கு லோல் பட்டு இந்த சமூகத்தின் கொடிய கரங்களால் கிழிக்கப்பட்டு எறியப்படுகிறாள் இறுதியாக நம் கண் முன் எஞ்சும் அஞ்சலை இந்த சமூகத்தின் கோர கரங்களால் கிழித்து எறியப்பட்ட வெறும் குப்பையாகவே காட்சி அளிக்கிறாள்.
இந்த நாவலில் முதன்மையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இந்த சமூகத்தில் நிலவும் வன்முறை மனநிலையும் ஆணாதிக்க போக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைத்து போடுகிறது என்பதை காட்டுகிறது. மொத்த நாவல் முழுவதுமே பெண் என்பவள் ஒரு பொருட்டாகவே எங்கேயும் யாராலும் மதிக்கப்படவில்லை. அஞ்சலையின் தம்பி கூட ஓரளவு கல்வி அறிவு பெற்ற பின்பு கூட நிலாவை கைவிடும் இடம் குறிப்பாக சொல்ல வேண்டும். அதற்கு அவன் சொல்லும் காரணம் வேறு என்றாலும் வாசகர்கள் அதன் அடித்தளத்தை அறிந்து கொள்வார்கள். மண்ணாங்கட்டி மட்டுமே சற்று அஞ்சல இடம் தாழ்ந்து செல்கிறான் அதுவே கூட அவனின் ஊனம் மற்றும் இயலாமையில் வெளிப்பாடால்தான் என்று நாவல் இறுதியில் அவன் அஞ்சலையை அடிக்கும் போது புரிந்து கொள்ளலாம் . மண்ணாங்கட்டி இடமிருந்து அஞ்சலையில் பிரிந்து சென்று நிலாவை பெற்று கார்கூடலில் விட்டுவிட்டு வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டி அவளை ஏற்றுக் கொள்கிறான் ஆனால் நிலாவை அவன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கும் காரணம் அஞ்சலையாகத்தான் தெரிகிறது அவள் திரும்பி வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டியிடன் நெருக்கமும் பரிவும் இல்லாதவே காலத்தை தள்ளுகிறாள் அதன் காரணமாகவே நிலா மீது எந்த அக்கறையும் இல்லாதவனாக ஆகிவிடுகிறான். இதில் வரும் மக்கள் அனைவரும் அடுத்தவரின் மகிழ்ச்சியை அபகரிப்பதிலும் புறம் பேசி வம்பு வளர்ப்பதிலும் பிரதானமாக இருக்கிறார்கள் ஒருவகையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையின் மீதான வெறுப்பும் அதீத உடல் உழைப்பால் தன்னையே நொந்து கொண்ட மனநிலையும் சிறிதளவு எனும் தனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லாத சூழலும் அவர்களுக்கு இவ்வாறான பிக்கல் பிடுங்கள் குணத்தை அளிப்பதாக நினைக்கின்றேன்.
குறைத்து காட்டப்பட்டாலும் அஞ்சலியை விட நிலாவின் சித்திரமே வலுவானதாக எனக்கு படுகிறது ஏனென்றால் கல்யாணியை விட அஞ்சலை மனதில் உறுதியும் பிடிக்கும் அற்றவளாகவே இருக்கிறாள் அதன் காரணமாக ஒவ்வொரு இடமாக தாவித்தாவி செல்கிறாள் ஆனால் கல்யாணி உடலில் இரத்தம் ஓடும் வரை உழைத்து வாழ்வேன் என்கிறாள். பீங்கான் தொழிற்சாலையில் அஞ்சலை வேலை செய்துவிட்டு உடல் முழுவதும் பீங்கான் மாவோடு தெருவில் வந்து நிலாவை சந்திக்கும்போது நிலா எந்தவித முகசுலிப்பும் இல்லாமல் அன்போடு தாயை எதிர்கொள்கிறாள் இந்த இடத்தில் நிலாவின் சித்திரம் வேறொரு தலத்திற்கு செல்கிறது குறிப்பாக இந்த தலைமுறை பிள்ளைகள் காரணம் இல்லாமல் பெற்றோர்களிடம் விளக்கத்தை அடையும்போது நிலா அதிலிருந்து மாறுபட்டவளாக இருக்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள போகும் அஞ்சலையிடம் "கம்மனாட்டி மவளே நீ ஏண்டி சாகப்போற யாரும் இல்லாமல் நான் தாண்டி சாகனும் ஒரு பத்து நாள் வாழ்ந்து புட்டா எல்லாம் சரியா போயிடும்" என்னும் இடத்தில் நிலா இன்னும் வாழ்வின் மீதான தெளிந்த பார்வையும் பிடிப்பும் கொண்டவளாக ஆகிவிடுகிறாள். அவள் கை பிடித்து அஞ்சலை துணிவோடு நடக்கும் இடம் நாவல் அழகியல் தளத்திலும் எதார்த்த தளத்திலும் வலுவான ஒரு மொழி தளத்திலும் தன்னை நிறுவிக் கொள்கிறது. நாவலின் கட்டுமானத்தில் கண்மணி குணசேகரனின் வட்டார வழக்கு பேச்சு மொழி இன்னொரு வலுவை சேர்க்கிறது.
வைரமுத்துவின் " கருவாச்சி " கவனிக்கப்பட்ட அளவிற்கு கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" கவனிக்கப்படாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
- சந்தேகமே இல்லாமல் தமிழ் சமுகம் ஒரு பில்ஸ்டைன் சமூகம் தான்-
இந்த அளவிற்கு வாசிக்கும் ஒவ்வொரு கணமும் மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தும் நாவலை சமீபத்தில் வாசித்ததில்லை.
விருத்தாசலம் அருகே இருக்கும் மணக்கொல்லை கிராமத்தில் இரண்டு அக்கா மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்து வளர்ந்து திருமணம் என்ற பெயரால் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு மறுதிருமணம் என்ற பெயரால் மீண்டும் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு நாவலின் கடைசி பக்கம் வரை துன்பங்களுக்கும், அவமானங்களுக்கும், மனஉழைச்சல்களுக்கும் ஆளாகுபவள் தான் அஞ்சலை. அவளுக்கு எங்கேனும் நல்லது நடந்துவிடாதா என்று மனம் துடித்தது. இது நிச்சயம் நாவலில் வரும் ஒரு கற்பனைக் கதாபத்திரம் அல்ல. பெற்றவர்களின் நிர்பந்தம் காரணமாக திருமணம் செய்து கொண்டு பிடிக்காத கணவனோடு விதியே என வாழும் அல்லது பிடிக்காத அந்த வாழ்க்கையை உதறிவிட்டு வரும் அல்லது வாழாவெட்டியாய் பிறந்த வீடு புகுந்தால் பெற்றவர்களுக்கு அவமானம் ஏற்படும் அதனால் நமக்கு பின்னால் திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கைகளுக்கு திருமணம் செய்வதில் பிரச்சனை ஏற்படும் என சகித்துக் கொண்டு வாழும் பல பெண்களின் பிரதிநிதியாகத் தான் அஞ்சலை எனக்கு தோன்றினாள். நீங்கள் எப்போது தவறு செய்வீர்கள் அதை பயன்படுத்தி உங்களை வார்த்தைகளால் குத்திக் கிழித்து பார்க்கலாம் எனக் குரூரமாகக் காத்திருக்கும் அக்கம்பக்கத்தார் மற்றும் உறவினர்களின் சாடைப் பேச்சுகள் போதும் வாழும் போதே நரகத்தை உங்களுக்கு காட்டுவதற்கு.
இத்தனை அவமானங்களை தாங்கிக்கொண்டு அஞ்சலை உயிரோடு இருப்பதை விட இறந்து போய் விடலாம் என பலமுறை நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது தோன்றியது. ஆனால் அது எத்தனை அபத்தமான முடிவாக போயிருக்கும் என நிதானமாக யோசித்தால் புரிகிறது. பிள்ளைகளின் நலன்களுக்காக அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டு பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டிய எத்தனையோ தாய்மார்களில் என் தாயும் ஒருவர். அதனால் நல்லதொரு மணவாழ்க்கையை எதிர்பார்த்த���ருந்த அஞ்சலை சிக்கி சின்னப்பட்டு துன்பத்தில் உழலும் போது ஏதோ நாவலில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என கடந்து போக முடியவில்லை.
கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலை சில மாதங்களுக்கு முன்பு தான் வாசித்தேன். அது தான் நான் அவரை முதன்முதலில் வாசித்தது. ஆனால் இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. அட்டகாசமான மொழிநடை. வட்டார வழக்கு பிரமாதமாக இருந்தது.
மிக மிக முக்கியமான கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. ஆனால் கோபல்ல கிராமம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற நாவல்களுக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் ஏன் இந்த படைப்புக்கு கிடைக்கவில்லை என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. காலத்தை தாண்டி நின்று பேசக்கூடிய படைப்பு இந்த அஞ்சலை.
Kanmani Gunaseekaran’s Anjalai is a story about a woman’s tears that follow her all through life. The novel starts with villagers complaining to her about Anjalai freely talking to a man while working. The complain on her character continues to torment her all life. In the initial stages of the novel we see Anjalai as an incredibly resourceful young girl who is able to better even men in the work she does in rice fields. Her uncle wants to marry her as a second wife as her sister is not able to contribute to household work. She is brutally cheated by her uncle after she refuses to marry him, he marries her of to a man lacking in any quality. In the pre wedding ceremony Anjalai is shown as the bridegroom the brother of the man she eventually is made to marry. Anjalai is livid with this treachery and she refuses to live with her husband.There starts all her troubles, even smaller happiness seem to elude her after sometime.
The author has captured the land, its agriculture, people’s everyday struggles well. Being from an agriculture background he is able to paint a realistic picture of rural life especially the Nadunaadu region. The novel is filled with fine details of rural life.
The travails of Anjalai continue as she walks out on her husband and lives for sometime with another guy. Eventually she comes back to her husband with a daughter from her intermittent life. She accepts her and they have two daughters, her first daughter grows up away from Anjalai in native village.
Anjalai is continuously taunted as a shady women who left her husband to have a kid with someone else. She is emotionally torn between her daughters living with her and the other one living with her mother.
Events come to such an end with everyone cursing her bad luck even her mother and husband. Anjalai continues to live initially for the promise she made to her mother at the end for her daughters especially the one who was born out of marriage. Her fate seems destined to go same alike Anjalai yet they live on where the novel ends. Indian writers over the year have captured the tears of women right from Valmiki, this novel belongs to that league.
This entire review has been hidden because of spoilers.
A story about a woman continuously suffering throughout her life. She suffers more from selfish envious people around her rather than the poverty. Very good narration.