கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) (அக்டோபர் 10, 1910 - பிப்ரவரி 15, 1974) தமிழில் நாவல்களையும் திரைக்கதைகளையும் இசைப்பாடல்களையும் எழுதிய எழுத்தாளர். வில்லுப்பாட்டுக் கலைஞர், நடிகர், பாடகர். நாதஸ்வர இசையில் ஈடுபாடுகொண்ட இசைவிமர்சகர். இவர் எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்னும் நாவல் புகழ்பெற்றது. ஜெமினி கதை இலாகாவுடன் நீண்டநாள் இணைந்து பணியாற்றினார்.