'மதம் அதற்கு மதம் பிடித்து விடக் கூடாது' என்பதனையும் எல்லா மதங்களும் நல்லதை மட்டுமே போதிக்கிறது. பாரதி பாஸ்கர் அவர்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் தொலைநோக்குப் பார்வையில் 'சிறகை விரி பற!' என முழங்குகிறார். உலக தலைவர்களையும் தியாகிகளையும் தமிழகத்தின் ஆளுமைகளையும் இந்த நூலில் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பாரதி பாஸ்கர்.
Book 40 of 2024 புத்தகம் : சிறகை விரி பற எழுத்தாளர் : பாரதி பாஸ்கர் பதிப்பகம் : புஸ்தகா பக்கங்கள் : 168 நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2024 விலை : 170
🔆 பாப்பையா ஐயா அவர்களின் பட்டிமன்றத்தில் இன்றியமையாத இரு நபர்கள், பாரதி அவர்களும் ராஜா அவர்களும். இந்தப் புத்தகம் அவரின் இரண்டாவது படைப்பு, சிறு வயதில் இருந்து தான் கேட்டு வளர்ந்த ஆன்மீக நிகழ்வுகளை பற்றி கூறுகிறது இந்தப் புத்தகம்.
🔆 சென்னையில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றது அவரின் உரையை கேட்ட பின்பு தான்.
🔆 ஒரு 14 வயது மாணவன் ஆசிரியர் படி என்று கூறியதால் அவரை கொலை செய்து விட்டான். சமீபத்தில் வந்த செய்தி, கணவரோடு ஏற்பட்ட சண்டையால் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் அந்த பெண். மனித மனத்துக்குள் தான் எத்தனை வெறுப்பு, மிகவும் கடுமையானதாக இருந்தாலும் வெறுப்பை அகற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். மிகவும் அருமையான புத்தகம்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
பண்டிகை நாட்களின் சிறப்பம்சமான பட்டிமன்றங்கள், பிற்போக்கு தனமான கருத்துக்களை இன்றும் மக்களிடையே புகுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கலாச்சாரம் பண்பாடு என்று மார்தட்டிக் கொள்ளும் நடுவர்கள், பேச்சாளர்களுக்கு மத்தியில் பாரதி பாஸ்கரின் சிந்தனையும் பேச்சும் வேறுபட்டு, மனதுக்கு ஆறுதல் தருவதாகவே இருக்கும். எனவேதான் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
புத்தகத்தின் ஆரம்பத்திலேயே பக்திமான்கள் யார் என்று எடுத்துரைக்கிறார். அவரின் கூற்றுப்படி பார்த்தால் இன்று கடவுளை வணங்குபவர்கள் அனைவரும் மனதில் அமைதி, நிதானமின்றி அலையும் மதவெறியர்களே அன்றி பக்திமான்கள் அல்ல என்பது தெளிவாகிறது. ஆண்மீகத்தின் கதைகளின் வழியாக அவர் கூறும் ஆழ்ந்த கருத்துக்கள் நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. பெண்ணியத்தைக் கூட பக்திகதைகளின் வாயலாக எடுத்துரைத்தது என்னை மிகவும் வியக்கவைத்தது.
நான் கடவுளின் மீது நம்பிக்கை உடையவள் தான். ஆனால் ஆண்மீக கதைகளில் பெரிதும் ஈடுபாடு இல்லை. எனவே இந்த புத்தகம் வாசிப்பதை பாதியிலேயே நிருத்திவிட்டேன். கடவுள் பற்றியும், அவரது அடியவர்கள் பற்றிய கதைகளை விரும்புபவராயின், நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து மகிழலாம்.
பல தளங்களில் தன்னுடைய ஆழ்ந்த அனுபவத்தையும் விசாலமான வாசிப்பையும் முத்திரை பதிக்கிறார் பாரதி பாஸ்கர் அவர்கள். சிறகை விரி பற என்ற உடன் இது சுய முன்னேற்ற புத்தகம் என்றே நினைத்தேன். வாசிக்க வாசிக்க எனக்கு பல சிந்தனைகள் பரிசாய் கிடைத்தது.