மருதநாயகம் பற்றி அறிய வேண்டி தொடங்கிய புத்தகம். பக்கத்திற்க்கு பக்கம் மருதநாயகத்தின் வீர வரலாற்றில் தொடங்கி அவரது ஆங்கிலேயர்களின் சவகாசம் பற்றியும், இவனை அழிக்க உடன் இருந்தவர்கள் பழித்த குழிகளை தாண்டி எப்படி ஆங்கிலேயர்களின் நம்பிக்கையை வீரத்தால் வென்றான் என்பதும், இந்தியா ஆங்கிலேயர்களிடமும், பிரெஞ்சு காரர்களிடமும் பட்ட பாடுகள் பற்றியும் எப்படி இந்த புத்தகத்தின் நாயகன் ஆங்கிலேயர்களின் விரோதி ஆகிறான் என்பதும் காலத்தின் கதையாக திவான் எடுத்துரைக்கிறார். இடையிடையே மருது பாண்டியர்களும், வீரபாண்டிய கட்டபொம்மனும், நவாப்புகளும், பாளையகாரர்களும் இதில் இடம் பெறுகிறார்கள்.
கதை போக்காக இல்லாமல் நடந்த நிகழ்ச்சிகளின் முகப்பும் புள்ளியியல் விவரங்களாக மட்டுமே இருப்பதனால் படிக்கும் பொழுது பெரிய பிடிப்பு தென்படவில்லை.