அந்தமான் அருகே ஒரு நகரம் நீருக்குள் கண்டடையப்படுகிறது. அதன் வயது பத்தாயிரம் என்று சொல்லப்படுகிறது. ஜனாதிபதி அதற்கு யுரேகா என்று பெயர் போடுகிறார். அதைப்பற்றிய பரபரப்பின் ஊடாக அதனுடன் தொடர்புள்ள பலர் கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தங்கள் வணிக நோக்கத்துக்காக இந்திய மக்களின் கவனத்தை திசைதிருப்பும்பொருட்டு சில பன்னாட்டுநிறுவனங்கள் உருவாக்கிய போலி நகரம் அது என்று தெளிவாகிறது.