திருமணமாகிய ஓரிரு மாதங்களில் தன்னை விட்டு குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு சென்ற கணவனுக்காக மனைவி அவள் தன் மகளுடன் எட்டு வருடங்களாக காத்திருக்கிறாள். எட்டு வருடங்களாக ஒவ்வொரு ஆசைகளையும் பொத்தி மனதிற்குள் கணவனை நேரில் சந்தித்து அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றி கொள்ள தவம் இருக்கிறாள். சில மாதங்கள் விடுமுறைக்காக வீடு வரும் கணவன் மனைவியை அடுத்தக் குழந்தைக்காக தயார் பண்ணும் இயந்திரமாக பார்க்கின்றான்.
முதலில் புரியாத மனைவி அதை உணர்ந்தப் போது, தான் குழந்தைப் பெத்துக் கொடுக்கும் இயந்திரம் இல்லை, உணர்வும் உணர்ச்சிகளும் கொண்ட உடல், தனக்கும் ஆசைகள் இருக்கிறது என கணவனுக்குப் புரிய வைப்பதே கதைவின் கருவாகும்.