டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்ஸ்டாய்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
புனைவுகளையே பெரும்பாலும் விரும்பி வாசிப்பவன் நான். அதுவரை நான் வாசிக்காத ஒரு புதிய எழுத்தாளரின் அபுனைவு நூலை வாசிக்க வேண்டுமென்றாலே சிறிது தயக்கத்துடன் தான் தொடங்குவேன். ஆனால் புனைவுக்கு நிகரான சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் அபுனைவு நூல்களிலும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படுத்திடும் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், சாருவும் தான்.
எஸ்.ராவின் வழியே தான் பெரும்பாலான ரஷ்ய எழுத்தாளர்களையும் இன்னும் பிற உலக எழுத்தாளர்களையும் தெரிந்து கொண்டேன். டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா"வை மோசமான மொழிபெயர்ப்பிலும் தஸ்தாயேவ்ஸ்க்கியின் "வெண்ணிற இரவுகளையும்" முன்பே வாசித்திருக்கிறேன் என்றாலும் இரண்டு எழுத்தாளுமைகள் குறித்தும் நிறைய தெரிந்து கொண்டது எஸ்.ரா அவர்களின் கட்டுரைகள் மற்றும் காணொளிகளின் வழியே தான்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலும் டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, செகாவ், காஃப்கா, ஐசக் அசிமோவ், தாகூர், வர்ஜீனியா வுல்ப், குர் அதுல் ஐன் ஹைதர் என்று பல எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துக்கள் குறித்த அறிமுகத்தையும் தருகிறார். டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு" நாவல் எழுதப்பட்டதற்கான காரணத்தை எஸ்.ரா பேசிய ஒரு காணொளியின் வழியே தான் தெரிந்து கொண்டேன். அது இந்த கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த கட்டுரைத் தொகுப்பில் "ஆயிரம் கொக்குகள்" என்ற கட்டுரை மிக நெகிழ்ச்சியான ஒன்று. டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்தக் கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக் கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக் கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட போது ஷடாகோ சஷாகி என்ற சிறுமிக்கு இரண்டு வயது. அவள் மிசாஷா என்ற பாலத்தின் அருகில் இருந்தாள். அணுவீச்சின் காரணமாக நகரமே மாபெரும் அழிவை சந்தித்தது. சஷாகி அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டாள். ஆனால் அணுவீச்சின் பாதிப்பு அவள் உடலில் இருந்து கொண்டே இருந்தது. அவள் வளர வளர நோயும் கூடவே வளர்ந்தது. முதலில் உடலில் நீலப்புள்ளி தோன்றத் தொடங்கின. உடல் மெலிவுற்றது. அவளது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. கால் முடக்கமானது. அதன் உட்சபட்சமாக பனிரெண்டாவது வயதில் அவள் லுகேமியா எனப்படும் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். இந்த நோயை அணுசக்தியின் நோய் என்றே சொல்கிறார்கள். ரத்தத்தில் கலந்து ஆளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியது. பனிரெண்டு வயது சிறுமியான ஷடாகோ சஷாகியை 1955ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஒரு வருடம் தான் அவளது வாழ்க்கை என்று மருத்துவர் கெடுவிதித்து போனார். படுக்கையில் நோயாளியாக வெளி உலகை ஏக்கத்துடன் பார்த்தபடி படுத்துக் கிடந்த சஷாகியை அடிக்கடி பார்த்து விளையாடிப் போகும் சிசுகோ என்ற அவளது தோழி ஒரு நாள் ஒரு காகித கொக்கினை தருகிறாள். கொக்கு நீண்ட ஆயுளைக் குறிக்க கூடியது.. நீ ஆயிரம் கொக்குகள் செய்து முடித்துவிட்டால் கட்டாயமாக பிழைத்துவிடுவாய் எனக் கூறுகிறாள். அதனை நம்பும் சஷாகி பகல் முழுவதும் கொக்குகள் செய்கிறாள். காகிதம் இல்லாத போது மருந்து புட்டியின் உறையை கிழித்து கொக்குகள் செய்கிறாள். ஆனால் 664 கொக்குகள் செய்து முடித்தபோது நோய் முற்றி அவள் இறந்து போகிறாள். இந்த செய்தி அறிந்த பள்ளி மாணவர்கள் மீதி 336 காகித கொக்குகள் செய்து அவளோடு புதைகின்றனர். இந்த செய்தி ஜப்பான் முழுவதும் பரவி காகித கொக்குகள் சமாதானத்தின் அடையாளமாக, ஆயிரம் காகித கொக்குகள் செய்தால் நோயாளி குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் பள்ளி மாணவர்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குறார்கள்.
எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துகளையும் மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு நகர்ந்து விடாமல் மேலே குறிப்பிட்டதை போன்ற சில சுவாரசியமான விஷயங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் எஸ்.ரா. விஞ்ஞான புனைவு மற்றும் அபுனைவு நூல்களை எழுதிய ஐசக் அசிமோவ் எழுத்தாளர் ஆக அவரை தூண்டிய காரணங்களையும், சொந்த வாழ்க்கையில் துன்பத்தில் உழன்றாலும் சிறுவர்களை மகிழ்விக்கும் Charlie and the chocolate factory, The BFG, Matilda போன்ற நாவல்களை எழுதிய ரொவால்ட் டால் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்களை இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பின் வழியே தெரிந்து கொள்ள முடிந்தது.
புத்தகம் : எனதருமை டால்ஸ்டாய் எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 142 நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ் விலை : 85
🔆சமகால எழுத்தாளர்களில் நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். தனது அத்தனை மேடை பேச்சுகளிலும் , அவர் தவறாமல் பரிந்துரைக்கும் இரு எழுத்தாளர்கள் : டால்ஸ்டாய் மற்றும் தஸ்த்யேவ்ஸ்கியும்.
🔆அவ்விறு எழுத்தாளர்களின் முக்கியமான படைப்புகள் , சமூகத்தின் மீது அவர்களுக்கு இருந்த பார்வை , ஒவ்வொரு படைப்பை எழுதும் போதும் அவர்கள் இருந்த சூழல் எல்லாத்தையும் அறிய முடியும் . அவர்கள் இருவரின் புத்தகங்கள் இல்லாது , இன்னும் பல புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கிறார்.
🔆சுயமுன்னேற்ற புத்தகங்கள் எவ்வளவு முக்கியமோ , அதே போல நாவல்களும் முக்கியமே. நான் அன்னா கர்னியாவையும் , தஸ்த்யேவ்ஸ்கியையும் தெரிந்துக் கொண்டது எஸ்.ரா மூலமாகத் தான் .
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் . வாசித்து பாருங்கள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
உலக இலக்கியம் பக்கம் அவ்வளவாக தலைகாட்டாத எனக்கு உலக இலக்கியம் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அறிவதற்கான ஓர் சிறந்த ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகம் இருந்தது.
The title of the book should be changed as it not only talks about tolstoy..it's great read all together the writer might be a voracious reader he takes from Russian literature to English literature then Greek then Asia.
தமிழ் மொழி அல்லாமல் பிற மொழி ���லக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள் அப்படி என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கக் கூடும். இருபது உலக இலக்கியங்களைப் பற்றிய சிறிய தொகுப்பு தான் இந்த புத்தகம்.
இதில் சில உலகப் புகழ்பெற்ற பிற மொழி இலக்கியங்களைச் சுருக்கமாகவும் அழகாகவும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார்.
குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை, ஜோர்பா எனும் உல்லாசி, மத்தவிலாசம், எனது அப்பா ஐசக் அசிமோவ், வீடில்லாத புத்தகங்கள், பீட்டர் புருக் மகாபாரதம், ஆயிரம் கொக்குகள்.
இந்தப் புத்தகத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது #மத்தவிலாசம், ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் அன்றைய மத சூழலை வைத்து கேலி செய்து மகேந்திரவர்மன் எழுதிய நாடகம். இந்த நாடகத்தை ஒரு சாதாரணப் புலவர் எழுதியிருந்தால் அது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பேசப்படுமா என்பது சந்தேகம், ஆனால் இது ஒரு மன்னன் எழுதிய நாடகம் என்பதனால் என்னவோ இந்த நாடகம் இக்காலத்திலும் மேடையேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
வெறும் 142 பக்கங்களுக்குள் எத்தனை இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அடக்கிவிட முடியும். எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தில் உலகில் சிறந்த, இறப்பதற்குள் ஒரு தடவையேனும் படித்து விட வேண்டும் என நினைக்கும் பல இலக்கியவாதிகளையும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய சிறு சுருக்கங்களும் கொடுத்துள்ளார். டால்ஸ்டாய் தொடங்கி ஐசக் அசிமோவ் வரை எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துப்பாணியை அறிமுகம் செய்திருக்கிறார். ஒரு சிறந்த புத்தகம் இன்னும் சில சிறந்த புத்தகங்களை நமக்கு அறிமுகம் செய்யும். அந்த வகையில் இது மிகச்சிறந்த புத்தகம்.