நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை. எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கலந்து தான் இருக்கின்றன. கலவையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம். அதுமுக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான். - சுஜாதா
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
Impossible to correctly verbalize or coherently describe how deeply touched and thoroughly overwhelmed I am by this GEM of a book from Sujatha.
A prolific and versatile writer who knows the minds of adolescents like the back of his hand, looks back fondly at his own adolescence in the picturesque and idyllic temple town of Srirangam in the fifties, and presents it as 14 short stories populated with with some of the most authentic and unforgettable characters ever to step out of the streets and onto paper. These characters tickled me to the bone, flummoxed me with their degree of eccentricity, triggered nostalgia stemming from some of my summer vacations spent in small-town Tamil Nadu, brought back fond memories of stories recited by family members of the previous era and what not. Some stories like 'Almost a Genius' and 'V.G.R' were so bloody damn impactful that I broke down and couldn't continue the book for the rest of the day.
Impossible not to come out of the book without a feeling of having lived for years in the innocent, carefree, poetic, vittethi, savadaal times of the fifties and sixties. Solid Gold!
Sujatha's Srirangathu Devathaigal (Angels of Srirangam) is probably the original box of chocolates themed book. 14 short stories about ordinary(plus) people with their flaws and virtues intact narrated as anecdotes from the past of the author set in the orthodox town of Srirangam.
The stories evoke a variety of emotions. 4 stories into the book I was deeply affected and I was worried the book will be a heavy read. Slowly, we see the stories turning towards lighter side to downright humorous ones. With the prose oozing with Iyengar Tamil and common characters or known incidents across the chapters, the book gave me much joy.
The most affecting were the tales of Gundu Ramani and Ravira very early in the book. The best stories to me were more normal like the cricket match, the snake and the love letter. The Tamil of course is brilliant and the almost colloquial dialogues are a further plus.
At the end of every story, the author also states of his encounter with the characters after 30 years or so and tells us how they ended up. And that's what life is all about isn't it? We meet our childhood friends and discuss those ridiculous episodes and anecdotes and end with a 'now look at us'. The book made me nostalgic and recall instances of every hue from my life.
The book rekindled memories - and isn't that one of the best reasons to read a book?
தன்னை ஒரு ஹீரோவாக முன்னிறுத்திக்கொள்ளாமல் தன்னுடைய பால்ய கால நினைவுகளை, தான் செய்த தவறுகளை, பலஹீனத்தை, இயலாமையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நம்மையறியாமல் சிரிக்க வைத்தாலும் ஒவ்வொரு சம்பவ முடிவும் உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்திருக்கின்றது. அவர் வாழ்ந்த பிராமண சூழலில் எழுதப்பட்டிருந்தாலும் அவர் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரிப்புகள் நம்முடைய பால்யகால நினைவுகளைத் தூண்டுகின்றது. சுஜாதாவின் கதைகள், நாவல்களை விட அவரது சுய அனுபவ விவரிப்புகளின் எழுத்து நடை மிகச்சிறப்பாக இருக்கின்றது.
சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து வாழ்வின்(பள்ளி மற்றும் கல்லூரி) நினைவுகளை அழகிய சிறுகதைகளாக வழங்கியுள்ளார்.ஒரு கதையில் நான் சிறு வயதில் விளையாடிய "கவட்டை" (ஹாக்கி போல அனவரிடமும் குச்சி இருக்கும் , ஒருவனது குச்சியை அனைவரும் தள்ளிக் கொண்டே போக வேண்டும், அவன் வந்து குச்சியை மீட்க வேண்டும்.மற்றவர்கள் குச்சியை..pass செய்து அவனை முடிந்த வரை ஒட விட வேண்டும்.) பற்றி இதில் வரும் (வேறு பெயரில்)...அது என்னை மிகவும் கவர்ந்தது.
நிறைய இடங்களில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு பத்திரிக்கையில்(கையால் எழுதி) எழுதிய அனுபங்கள் இருக்கும்.அவரது எழுத்து பயணத்துக்கு அடிதளமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.எனக்கு மிகவும் பிடித்த கதை என்றால் .. பேப்பரில் பேர்,சின்ன ரா,கடைசியில் உள்ள இரு பாட்டி கதை (ம்று,காதல் கடிதம்)...
சுஜாதாவின் இளமைக்கால வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது கற்பனைகளையும் இணைத்து தொகுக்கப்பட்ட பதினான்கு சிறுகதைகள். ராவிரா, வி.ஜி.ஆர், ரமணி, புல்ஷூட் துரைசாமி.... ஶ்ரீரங்கத்தின் சாதாரண மனிதர்கள், சுஜாதாவின் தனித்துவமான எழுத்து நடை, கதைகளின் இறுதியில் சின்ன ட்விஸ்ட். சுஜாதாவின் எழுத்துகளை அதிகம் வாசித்ததாலோ இந் நூல் மீதான அதிகரித்த எதிர்பார்ப்பாலோ தெரியவில்லை இந்நூல் என்னை அதிகம் திருப்திபடுத்தவில்லை 😐.
இந்த வருடத்தின் தொடக்கம் - சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைளுடன்..சுஜாதா அவர்களின் ஶ்ரீரங்கத்து வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு...கடைசி சம்பவத்தில் நான் படிக்கும் கல்லூரியின் குறிப்பு😍..
புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுத்தாளர் : சுஜாதா பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம் பக்கங்கள் : 136 நூலங்காடி : Flipkart
🔆சுஜாதா, 200 க்கும் அதிகமான கதைகளையும் , 100 க்கும் அதிகமான நாவல்களையும் எழுதியுள்ளார் . ஸ்ரீரங்கம் அவரது சொந்த ஊர் . அங்கு அவரைச் சுற்றி நடந்த சம்பவங்களையும் , தனக்கு நெருக்கமான நபர்களைப் பற்றி அவர் பகிர்ந்திருக்கும் கதைகள் தான் ஸ்ரீரங்கத்து தேவதைகள் .
🔆14 கதைகளைக் கொண்டது இந்தப் புத்தகம் . அனைத்து கதைகளும் அவரது பால்ய காலத்தில் அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளே .
🔆வி.ஜி.ஆர்.- ரிட்டையர்ட் கணக்கு வாத்தியார் . 104 வயதில் தனியாக அவர் எவ்வாறு வாழ்ந்திருக்கிறார் என்பதைக் கூறியிருக்கிறார் . எந்தவொரு ஆசிரியரும் ஓய்வு பெறுவதே இல்லை . அவரின் மறைவுக்கு வந்திருந்த முன்னாள் மாணவர்களின் எண்ணிக்கையே , அவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு .
🔆திண்ணா – திருநாராயணன் , பாடசாலையில் படு பிரபலம் . பாடல்களையும் , மந்திரங்களையும் சட்சாரம் மாறாமல் பாடுவான் . அனைவருக்கும் அவனை பிடித்து விட்டது . 5 வருடங்களில் , சினிமாத் துறையில் சேர்ந்து நவநாகரிக இளைஞனாக அவனைப் பார்ப்போம் என்று சுஜாதாவே நினைத்திருக்க மாட்டார் .
அனைத்து கதைகளும் மிகவும் பிடித்திருந்தது . அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
An awesome book... detailing the innocence of a little boy's view of looking at the world.. The way he learns the good and evil about the world.. It also depicts the scenario of Classic Srirangam... At the end of the reading, it will be like u have lived sum days in srirangam..
Sujatha's sculpting of characters in Srirangam... Even a negative charcater's positivity will be highlighted and vive versa.. An impartial kind of penning...
And as a fan of Sujatha, it will be like knowing his own experiences during his childhood... It will be amazing to know that how such a dumb mouthed fellow could transform into a powerpuffed writer..
சுஜாதா என் தந்தை வளர்ந்த பொழுது பிரபலமான எழுத்தாளர். முதல் முறையாக நான் அவருடைய புத்தகத்தை படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நான் திருச்சியில் தான் பொறியியல் கல்வி பயின்றேன். அதனால் சுஜாதா விவரித்த, வர்ணித்த இடங்களும் மக்களும் எனக்கு பழக்கமானவை. படித்து முடித்தவுடன், வசந்த கால நினைவுகள் என்னை புரட்டி போட தொடங்கின. அந்த இடத்தின், அந்த காலத்தின் மனிதர்களின் வார்த்தைகள் மற்றும் பேச்சு வழக்குகள் மிக அழகாக பதிவு செய்ய பட்டுள்ளது. என் தந்தையின், பாட்டனாரின் காலத்தை பற்றி கற்பனை செய்ய முடிந்தது. இவ்வளவு அற்புதமாக ஒரு இடத்தை, அந்த மக்களின் வாழ்க்கையை எழுத்தால் நிரந்தரப்படுத்திய சுஜாதாவிற்கு நன்றி. இது அருமையான கலைப்படைப்பு.
சுஜாதா ஸ்டைலில் சிறுகதைகள். சில இடங்களில் படிக்கும் போது, கொஞ்சம் டீசன்டா எழுதிருக்கலாம் என தோன்றும். கதைகள் அருமை. நான் ரசித்தவை காதல் கடிதம் மறு கடவுளுக்கு கடிதம்
இது ஒரு சிறுகதை தொகுப்பு. மொத்தம் 14 சிறுகதைகள். ஆசிரியர் பிறந்தது சென்னை தான். ஆனா படித்தது, வளர்ந்தது எல்லாமே ஸ்ரீரங்கம். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவங்களை தான் கற்பனை கலந்து எழுதி இருக்காரு.
கற்பனையும் கலந்து எழுதப்பட்ட கதைகள் தான் எல்லாமே. ஆனா கற்பனையின் விகிதம் ஆசிரியருக்கு தான் வெளிச்சம். நம்மள சுத்தி நெறைய characters இருப்பாங்க, சில பேர பாத்தா கோவம் வரும், சில பேர பாத்தா பாவமா இருக்கும், சில பேர் மேல பயம் வரும், இந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு proper reasoning தெரியாது. ஆனா அதே சமயம் அதை தடுக்கவும் முடியாது. அந்த மாதிரி உணர்ச்சிகளை தான் நம்ம கூட ஆசிரியர் share பண்ணி இருக்காரு. அவரோட பாட்டிக்கும் அவருக்கும் உள்ள புரிதல் அழகா இருக்கு.
Real life account (maybe a bit fictionalized) of the author's early years - from adolescense till college years - in Srirangam, as a collection of short stories. Some poignant and most hilarious. But unlike the title suggests, it is not totally about women though featuring a few women. Highly recommended.
Ever since my inclination towards tamizh books started increasing, I've been meaning to read Sujatha's works and made no mistake by choosing to read this book first.
What a crafty, humorous and skillful story telling. Onto reading more.
One of the most amazing books in Tamil after a long time. Full of nostalgia as the stories take place in 40’s Trichy in places were I played as a child. His honesty and situational humour are visible throughout the books. A book I will visit again and again in years to come
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று``ஸ்ரீரங்கத்து தேவதைகள்`` புத்தகத்தைபடித்தேன். பசிக்கும் நடுவில் புத்தகத்தை முடிக்கும் ஆவலில் ஒரே சூட்டில் முடித்துவிட்டேன் என்பதை நினைக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சி எழுகிறது, இதுபோன்று இடைவெளியில்லாமல் புத்தகத்தைப் படித்து பல வருடங்களாயிற்று.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்தில் வந்த மிக முக்கியமான, சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு இந்த -ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவித எழுத்து நடை இருக்கும், ஆனால் சுஜாதா அவர்களின் எழுத்து நடையில் ஒருவித யுனிக்னெஸ் இருப்பதை அவரின் புத்தகங்களைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். பொதுவாக சுஜாதாவின் புத்தகங்களைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு இரண்டு மூன்று பக்கத்திற்கு குழப்பமிருக்கும், ஆனால் தொடர்ந்து படிக்கும் போதுதான் அந்நடையின் உயிரோட்டம் புரிந்து, கதையில் கூறப்படும் செய்திகள் கண்முன்னே கானல்நீர்ப் போலத் தோன்றும்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்த அனைவருக்கும் முதலில் வரும் ஐயப்பாடு, புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையா அல்லது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளா? என்பதாக இருக்கும். இங்குதான் சுஜாதா அவர்களின் இன்னொரு வெற்றி நிகழ்ந்திருக்கிறது.
சிறு சிறு கதைகளாக மொத்தம் பதினான்கு, அதில் முதல் கதையில் வரும் பாத்திரங்களில் ஒருவரே அடுத்த பகுதியின் நாயகன்/நாயகியாக இருப்பார். கதை சொல்லப்படும் விதம் எழுத்தாளர் நமக்கருகில் நின்று சுட்டிக்காட்டுவது போல் பயணிக்கும். கதையை வாசிக்கும் பொழுது சில நேரங்களில் நம் உதட்டருகில் ஒரு மெல்லிய புன்னகையும், சில நேரங்களில் சோகமும் சூழ்ந்துகொள்வது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
கதையின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலைத் தனியே பிரித்து வைத்தது போல் தெரியாமல், அவ்வாழ்த்தே கதைக்குள் அமைந்து கடவுளுக்குக் கடிதம் என்று தொடங்கும். கதையைப் படிக்கும் போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்ச் சித்திரை வீதியும், கோட்டை வாசலும், கீழ் வாசலும் நம் கண் முன்னே தெரியும்.
கதையில் வரும் பாத்திரங்களின் பெயர் அவர்களின் கேரக்டரருக்குப் பொருத்தமாக இருக்கும். கோவிந்து பைத்தியம், ரங்கு, உள்ளூர் இன்டெலக்சுவல் ராவிரா, பணக்காரன் தாஸ், குண்டு ரமணி, கணக்கு வாத்தியார் விஜிஆர், பிரபந்தம் திண்ணா, வரதன், பாட்டி (நிஜக்கேரக்டர்), ஜீனியஸ் ரங்கநாதன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முன்னோட்டம் அளித்திருக்கும் விதம் இன்னும் அருமை.
அதேபோல கதையை சஸ்பென்சாக முடித்திருக்கும் விதம், வாசகர்களின் கற்பனைக்குள் பொருந்துவதாகவும், அன்றைய நிலையில் அச்சமூகத்தில் பொதுவாக இருந்த நிகழ்ச்சிகள் குறித்து முற்றுப் பெறும். கதையின் முடிவு முன்பகுதியில் வந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளை தொடர்பிட்டு முடியும். உதாரணத்திற்கு,
~சின்ன `ரா` வின் முடிவில் வரும் - `செல்வம் இப்போதெல்லாம் படிக்கிறான்`, இதில் படிக்கிரான் – சின்ன ரா??~
~திண்ணாவின் சாதனையை `வீழ்ச்சி’ என்று என்னால் சொல்ல முடியவில்லை~
~மல்லிகா கோபாலனை கல்யாணம் பண்ணிக் கொண்டு அதே வீட்டில் அவள் அம்மாவைப் போல் நிற்கிறாள். அவர்கள் பெண் (மற்றொரு மல்லிகா) வாசலில் சிரித்துப் பேசிக் கொண்டே பள்ளிக்கூட���் போய்க் கொண்டிருக்கிறாள்~
அதே போல் குண்டு ரமணியின் பாத்திரத்தைப் போல் வரும் ஒருவரை நம் தெருவில் நிச்சயம்சந்தித்திருப்போம்.
ஒரு சில இடங்களில் நல்ல பன்ச் டயலாக் மறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, `கோவிந்தின் அம்மா சக்கரத்தாழ்வாருக்கு இன்னும் நெய் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்று பைத்தியத்தை தெளிவிக்க தீபம் மட்டும் போதாது என்று கடவுளுக்குக் கடிதம் என்ற கதையை முடித்திருப்பார்.
~எனக்கு யார் மேலோ கோபம் வந்தது, ஒருவேளை ஸ்ரீரங்கத்து பெருமாள் பேரில் இருக்கலாம்~ என்று தன்னுள்ளிருக்கும் ஆதங்கத்தைச் சொல்லியிருப்பார்.
அதேபோல் அந்த வயதிற்குத் தோன்றும் கலர்புல்லான மசாலா எண்ணங்களை ஆங்காங்கே சிதறவிட்டிருக்கும் விதம் அவ்வயதைக் கடந்து வந்த அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள இயலும் – வரதனுக்கு அவன் மாமா அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் பிரத்யோகப் படங்கள்! வீரசிம்மன் கதையில் திரை வழியாக சில்க் ஆசாமி கண்ணடித்த விதம், சிவராமன் வத்சலாவைப் பார்க்க வருவது, திருச்சி பார்பர் ஷாப்பில் இருக்கும் சீன அழகிகளின் போட்டோ, ஹரிதாஸ் படத்தில் வரும் வெட்டப்பட்டக் காட்சி என்று அந்த வயதில் தோன்றும் எண்ணங்களை பட்டியலிட்டிருப்பார்.
சில நேரங்களில் நண்பர்களின் மத்தியில் நாம் ஒப்புக்குச் சப்பாணியா நிற்பதையும், விளையாடும் போது நண்பர்களில் ஒருவன் அங்கிருக்கும் அனைவரையும் ஆதிக்கம் (டாமினேட்) செய்வதும், அதைக் கண்டு நாம் பொறாமைப் படுவது போன்ற இயல்பான விஷயங்களைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் பாட்டியின் கேர்க்டர் தான். சுஜாதா அவர்களின் சிறு வயதில் பெரும்பாலும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்ததையும், பாட்டியின் கண்டிப்பையும் கதை முழுவதும் பார்க்க முடியும். தனியே அழைத்து வந்து தண்டிப்பதையும், பிறர் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் பாட்டி பேசியதை மிக அழகாகக் கூறியிருப்பார்.
அதே போல சிறு வயதில் தான் செய்த தவறுகளில் ஒன்றான திருட்டு வேலையையும், அதனால் பின்னாளில் அவரடைந்த வலியையும் அதன் தொடர்ச்சியையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருப்பார்.
என் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த பக்கத்தைப் புரட்டும் ஆவல் முடிவில்லாமல் தொடர்ந்து வரவேண்டும்; மேலும் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகும் அதில் வரும் ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது பாத்திரம் (கேரக்டர்) மனதில் நிலைக்க வேண்டும். சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லுவதெல்லாம் அதற்குப் பிறகுதான்.
ஒரு நல்ல புத்தகத்தை வாசித்தது போன்ற உணர்வு தோன்றுகிறது.
இந்த புத்தகம் படித்த பின்பு சுஜாதா அவர்களோடு நாமும் ஸ்ரீரங்கம் சென்று எல்லோரையும் பார்த்துவிட்டு கோவில்களுக்கு சென்று கிரிக்கெட் விளையாடிய எண்ணம் வருகிறது .
என்ன தான் அடியேன் பிறந்தது பாண்டியன் ஆண்ட மதுரை என்றாலும், ஸ்ரீரங்கம் தான் நினைவில் வந்து நிற்கும், எவ்விதமான படிவதிலும் பிறந்த இடம் பூர்த்தி செய்யும் போது. கதையாசிரியர் திரு. சுஜாதா அறியா பருவம் முதல் , மீசை துளிர் விட்ட வயது வரை காவிரி மற்றும் கொள்ளிடத்தினால் சூழப்பட்ட ஒரு குட்டி தீவில் வாழ்ந்த வாழ்க்கை , என் பள்ளி பருவ காலங்களை நினைவு படுத்துகிறது. ஆசிரியர் அவர்கள் தனது இளம்பிராயத்து அசட்டு தனங்களை நகைச்சுவை கலந்து சமைத்து சிறு உருண்டைகளாய்(கதைகளாய்) பரிமாறி இருக்கிறார் என்று சொல்ல தோன்றுகிறது.
அரங்க மாறம்மா !..... ஏற்பத ஆயிரத்து எண்நூற்று தொணுற்றாறில் !.... வீர ராகவாசாரி வீறுதன் நிறுவினாறே!... (1896 AD நிறுவ பட்ட பள்ளி)
என்று தொடரும் என் பள்ளி பாடல் வரிகள், ஆசிரியர் வாயும் பாடியிருக்கும் என்று நினைக்கும் பொழுது சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் நடந்த, ஓடிய , சைக்கிளில் பயணித்த, வீதிகளை ஆசிரியர் குறிப்பிடும் போது மட்டற்ற ஆனந்தம் ஏற்படுவது இயற்கையே.
மொத்தத்தில் இந்த புத்தகம் எனக்குள் இருந்த சிறுவனை நினைவு படுத்திக் கொள்ள ஒரு கருவியாய் இருந்தது முற்றிலும் உண்மை. அதற்கு ரங்கா (அ) சுஜாதா விற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
திருச்சி ஶ்ரீரங்கத்தில் தன் சிறுவயதில் வாழ்ந்த சுஜாதா அவர்களின் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகத்தில் 14 சிறுகதைகளாக அமைந்து இருக்கிறது.
“இந்தக் கதையின் நாயகன் நான் அல்ல. அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுவன். அவனுக்கு அப்போது பல விஷயங்கள் ‘ஏன்’ புரியவில்லை. அந்தப் புரியா ஆச்சர்யத்தை முப்பது வருஷம் கடந்து எழுதும் போது அந்த வியப்பைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறேன். “ என்று முன்னுரையில் சுஜாதா அவர்கள் குறிப்பிடுகிறார்.
Cricket விளையாட்டு சம்பந்தப்பட்ட ஒரு கதையில் கேவி என்பவரின் captainship என்னை மிகவும் கவர்ந்தது. எதிர்வீடு, பாம்பு, கிருஷ்ண லீலா என்கிற தலைப்பைக் கொண்ட சிறுகதைகள் நகைச்சுவையின் உச்சம். ஏறக்குறைய ஜீனியஸ் என்ற தலைப்பைக் கொண்ட சிறுகதை மனதை விட்டு நீங்காத இடத்தை பிடிக்கிறது.
நான் திருச்சியில் மூண்று வருடம் பணியில் இருந்த போது ஶ்ரீரங்கம் அடிக்கடி செல்வது வழக்கம். ஆகையால், ஊரின் அமைப்பு மற்றும் கலாச்சாரத்தை புத்தகம் வாசிக்கும் போது முழுமையாக ஆனுபவிக்க முடிந்தது.
நம் அப்பாவோ மாமாவோ அவர்களின் சிறுவயதில் நடந்த சுவாரசியமான கதைகளை சொல்வது போல் இருக்கும் இந்தப் புத்தகத்தின் வாசிப்பு.
Reminiscing his adolescent years, Sujatha takes us on a ride down the memory lane with his fourteen short stories -all of which share a common back drop - his native, a small town called "Srirangam". His impeccable style of narration makes this an enjoyable read and the order in which introduces the streets, the houses and the Devadhais of Srirangam plays a subtle role in getting you on-board and all of a sudden you find yourself comfortably strolling on those Srirangam roads along with his devadhais. My favourite ones are - kadavulukku kadidham, maru, gundu ramani, VGR, chinna "ra".
சுஜாதா தன்பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை, அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இந்த "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
சுஜாதாவின் படைப்புகளில் நான் படிக்கும் முதல் நூல் இது. பிறந்தது மெட்ராஸ் என்றாலும் தன் பள்ளி, கல்லூரி காலம் கழித்தது எல்லாம் ஸ்ரீரங்கம்தான். தன் இளமை காலத்து அனுபவம் என்றாலும் அதில் சிறிய கற்பனைகள் சேர்ப்பதுதான் ஒரு ஆசிரியருக்கு அழகு. அதை சுஜாதா செய்திருக்கிறார் என்பது வியப்பல்ல. மொத்தம் 14 கதைகளை கொண்ட இந்நூலில் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் மற்றும் அவர்களுடன் ஏற்பட்ட உரையாடலை பதிவு செய்கிறார்.
கடவுளுக்கு கடிதம் எழுதும் கோவிந்து ஒரு மனநிலை பாதிக்கபட்டவன். கல்லூரியில் வேதியில் பேராசிரியராக வரும் விஜயராகவன். அவரின் அறிவியல் புலமைப்பற்றி பேசுகிறார் ஆசிரியர். நம் வாழ்வில் சிலரை கண்டாள் பிடிக்காது. அவரிகளின் வருகையை நாம் ஒரு போதும் ஏற்கக்மாட்டோம். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் குண்டு ரமணி. ஆனாலும் அவள் வாழ்வில் தன் குழந்தையை இழந்த சோகத்தை பதிவு செய்யகிறார். வரதன் என்ற பாத்திரம் நாம் நம் வாழ்வில் கடந்து வந்திருப்போம். வரதனுடன் நட்பு பாராட்ட அனைவர் வீட்டிலும் தடை உத்தரவு உண்டு எனில் அந்த வரதன் எப்படி பட்டவன் என்று அறிய முடிகிறது. தனக்கென ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு அனைவரையும் மிரட்டும் தோனியில் பேசி பழகும் ஒரு நாயகன். இவனிடம் சுஜாதா பட்ட கஷ்டங்களை விவரிக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீரராகவன் மூலம் அன்றே கிரிக்கெட் போட்டியில் இருவேறு அணிகள் எப்பவும் பரஸ்பரம் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள் என்பது நமக்கு புரிகிறது. ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்த அனுபவத்தையும் சுஜாதா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
வேலைக்காரியின் சம்பளப்பணம் மூன்று ரூபாய் தவறுதலாக எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து காஃபீ, சிகரெட், "பருவ மங்கை" என்ற புத்தகம் மற்றும் ராஜ்கபூர் நடித்த "ஆவாரா" என்ற ஒரு ஹிந்தி படம் என்று சுஜாதா செலவு செய்திருப்பது அந்த பருவத்திற்கே உரிய குணம் என்பதால் அதில் ஆச்சர்யம் இல்லை. இக்கதைகளின் சிறப்பம்சம் ஒரு சில கதாபாத்திரங்களை 10 அல்லது 15 வருடங்கள்கழித்து சுஜாதா நினைவுகூர்கிறார் .
தேவதைகள் என்றாலே பெண்கள்தான் என்று சிந்தனை எழும் பொது புத்தியில் நம் மனத்திற்கு பிடித்தவர்கள் அனைவரும் தேவதைகளே என்று சுஜாதா சவுக்கடி கொடுக்கிறார். நம் முந்தைய தலைமுறைகளின் சில சுவாரஸ்யாமான மனிதர்களை நினைவுகூர்ந்த சுஜாதாவின் இந்த தேவதைகள் நிச்சயம் ரசிக்கப்படவேண்டும்