Jump to ratings and reviews
Rate this book

Box கதைப்புத்தகம்

Rate this book

252 pages, Paperback

First published July 1, 2015

2 people are currently reading
77 people want to read

About the author

Shobasakthi

21 books58 followers
Born as Antonythasan Jesuthasan.

Shobasakthi lives in France. He is a Sri Lankan Tamil refugee and a former LTTE child-soldier. He has published two novels, a collection of short stories, three plays and many essays. His first novel, translated in English as Gorilla, was published to immense acclaim. For the last twenty years, he has worked as a dishwasher, cook, supermarket shelver, room boy, construction worker and street sweeper, among other things. He blogs at www.satiyakadatasi.com.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (19%)
4 stars
31 (60%)
3 stars
9 (17%)
2 stars
1 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Haran Prasanna.
28 reviews11 followers
September 21, 2015
Box novel written by Shobasakthi is good. It deals with the pains of Tamils suffered in Srilanka during and after the war time. It does not fail to register the violence of LTTE too. Since author was a former LTTE child fighter, the value of the book increases and the incidents covered in the book get more authenticity. The book is close to the history when author explains in first person at final chapters. The dramatic change of the deaf and dumb boy is an artificial one. No idea if it's an true indecent. The excellent language of the author what we see in his short stories is missing here in the novel. Many novels in this genre may give some light on the plight of Tamils in Srilanka after war. This novel may be regarded as the starting point of that and this is the importance of the novel too. On the other hand, this novel gives a small account of early Christianity in Srilanka.
Profile Image for Gowthaman Sivarajah.
17 reviews1 follower
July 25, 2018
நீங்கள் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் அங்கு இருந்திருப்பீர்களானால் அல்லது அவ் யுத்தம் பற்றிய தகவல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்களானால் "அவங்கள் box அடிச்சிட்டாங்களாம்" என்ற வசனத்தையும் அதன் அர்த்தத்தையும் இலகுவாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதை புரிந்துகொள்ளாமல் விட்டாலும் கூட ஒன்றும் பெரிய தப்பில்லை. ஏனென்றால், இங்கு இலங்கை யுத்தம் பற்றிக் கூக்குரலிடுகின்ற பலருக்கே பல விடயங்கள் தெரியாது. சரி கதைக்கு வருவோம். அந்த 'box அடித்தல்' தான் இந் நாவலின் கரு. ஆனால் இது யுத்த காலத்தில் அடிக்கப்பட்ட box பற்றியதல்ல, யுத்தமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட மே 2009ற்குப் பிறகு நம் மக்களைச் சுற்றி அடிக்கப்பட்ட boxஐப் பற்றியது.

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வருகின்ற ‘நிர்வாணம்’ என்ற சொல்லால் கதையின் மூலக்கரு நாவலெங்கும் கடத்தப்படுகிறது.
Profile Image for Remy Moses.
35 reviews5 followers
May 22, 2024
மனதை பிசைகின்ற உண்மை கதைகள். எழுத்தாளர் ஷோபாசக்தி 2009ஆம் ஆண்டிற்கு பின்னான ஈழ தமிழர்களின் வாழ்க்கையை பற்றிய களத்தை இந்த நாவலில் கையாண்டுள்ளார். இதற்கு முன் இவரின் ம் நாவல் வாசித்துள்ளேன். ஷோபாசக்தி அவர்கள் புலிசார்போ எந்த ஒரு சார்போ இல்லாமல் நடுநிலையாக எழுதகூடியவர். புலிகள் அமைப்பில் இருந்திருந்தாலும் அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டாமல் இல்லை. அது இந்த நாவலிலும் தொடர்கின்றது. சிறிலங்கா நாட்டில் பெரிய பள்ளன் குளம் என்ற ஊரில் உள்ள மனிதர்களை பற்றியும் அவர்கள் ராணுவத்தினாலும் போலிசாரின் தாக்குதலுக்கு உள்ளானார்கள் மற்றும் தமிழ் போராளி இயக்கங்கள் செய்த தவறுகளையும் குறிப்பிடுகிறார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.
Profile Image for Tharsi Karan.
50 reviews7 followers
March 4, 2020
நான் வாசிக்கும் ஷோபாசக்தியின் 4வது நாவல் இது. போராட்டம் போராட்டத்திற்கு பின்பான காலம் போன்றவற்றின் இனனொரு முகத்தை இதன் மூலமாக தான் பாரக்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் ஒருதொகை கனத்தை மனதில் ஏற்றினாலும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றேன்.
Profile Image for Mani Kandan.
31 reviews
October 27, 2017
கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
ஒரு சிறிய கிராமம், சில கிராமவாசிகள், ஒரு சிறுவன் - அடிப்படையா வைத்து நாட்டில் நடந்த ஆயுத போராட்டம். அதன் சிதைவுகள், இயலாமை, ஏக்கம், தியாகம், சாதி, சமூக ஏற்றத்தாழ்வு என சித்தரிக்க பட்டுஇருக்கிறது. ஈழ தமிழ் சமூக அமைப்பு தெரிய இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.
Profile Image for NaGa.
7 reviews3 followers
February 9, 2020
“..ஆனால் இந்த நிழல் சித்திரத்தைவிட போரின் உண்மைச் சித்திரம் கடுமையானது. அந்தச் சித்திரம் இந்தத் தேசத்தின் மனச்சாட்சியின் வீழ்ச்சி” - Box கதைப்புத்தகத்திலிருந்து.

நாவல் வெளியான சமயத்தில் அரசியல் காரணங்களுக்காக நாவல் மீதும் ஷோபா சக்தியின் மீதும் வெறுப்பைக் கக்கிய சிலருக்கு தகுந்த பதிலாய் நாவலின் இந்த வரிகளை எடுத்துகொள்கிறேன்.

நாவலின் கதை குறித்தும் அதன் வடிவ நேர்த்தி(structure) குறித்தும் பலரும் கூறியிருக்கிறார்கள் நான் தனியே ஏதும் சொல்லத் தேவையில்லை அவ்வளவு அட்டகாசமானது. ஷோபாவின் மற்றைய நாவல்களைக்காட்டிலும் இந்த நாவல் அளவில்(size) சற்று சிறியதாக இருப்பதுவும், அட்டைப்படத்திலுள்ள பின்னப்பட்ட நிலையிலிருக்கும் கால்களும் நுட்பமாய் எனக்கு Box’ஐக் காண்பித்து அதன் வடிவமைப்பிலும்(design) ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிட்டது.
24 reviews9 followers
March 18, 2018
நான் படித்த சோபா ச்கதியின் முதல் நாவல். உயிர்ப்பான நடை. நம்மை கலங்க வைக்கும் எழுத்து.
Profile Image for Abinesh G.
6 reviews2 followers
June 12, 2025
போரின் குரூரத்தை பெரியபள்ளன்குளம் என்ற கிராமம் மற்றும் அதன் மக்களின் ஊடாக எடுத்துரைக்கிறது இந்நாவல்.
இருபதாம் நூற்றாண்டின் முதற்காற்பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்ப பெரியபள்ளன்குளம் கிராமத்திற்கு வந்து அங்கேயே இறந்தும்போன டைடஸ் லெமுவேல் என்ற ஆதாம் சுவாமியின் கல்லறை வீடு, கிராமத்தின் குளம், படர்ந்து வளர்ந்த புராதன மதுரமரம் என ஒவ்வொன்றும் மனிதமனத்தின் பிரம்மாண்ட அவலட்சணத்தின் சாட்சியங்கள்.

இது ஒரு நாவல் என்பதைத் தாண்டி போரினால் துணை, மக்கள், வீடு எல்லாவற்றையும் இழந்து வாழ்வின் பிடிப்பை துறந்து வாழ்ந்த/வாழ்ந்துக் கொண்டிருக்கும் சீவன்களின் ஓலமோ என்றெண்ணவேத் தோன்றுகிறது.

இலக்கியவாசிப்பில் ஷோபாசக்தியின் "ம்" நாவலை ஒருபடிக்கு மேலே வைத்திருந்தாலும், "ம்" நாவலை விட BOX கதைப் புத்தகம் எவ்விதத்திலும் என்னை குறைவாக பாதித்துவிடவில்லை.

Basilique du Sacré-Cœur de Montmartre ஆலயத்தின் அடிவார வீதியான ரியூ ஜோன் பப்டிஸ்ட் பிகாலில் பத்தொன்பதாம் இலக்கத்திலிருந்த ஒன்பது மாடிக்குடியிருப்பின் ஏழாவது தளத்தில் வடக்கு நோக்கி ஒரேயொரு சிறிய சாளரம் மட்டுமே அமைந்திருந்த கதகதப்போ வெளிச்சமோ இல்லாத அறையில் இப்புத்தகத்தை படித்துவிட்டு வெளியே வந்தேன். வானத்தில் நிலவு நான் படித்ததை போல இன்னும் பல்லாயிரம் BOXஅடித்த கதைகள் தன்னிடம் இருக்கின்றன என்பதுபோலவும் அதை சொல்ல எத்தனிப்பது போலவும் தோன்றவே மறுபடியும் அறையினுள் சென்றுவிட்டேன். நான் ஓடிவிட்டதால் BOXஅடிப்பது நின்றுவிடப் போவதில்லை என நன்கு தெரிந்தே இதை செய்தேன்.
Profile Image for சலூன் கடைக்காரன் .
44 reviews2 followers
September 9, 2023
எந்தப் போராக இருந்தாலும் எளிய இலக்கான சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அதிலும் பெண்களும், குழந்தைகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.முதலாம் கதையில் ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட BoX வருகிறது அதைத் தொடர்ந்து புத்தகம் முழுமைக்கும் சிறியதும் பெரிதுமான பல BoX கள் வருகின்றன ஆனால் அந்த BoX ல் மாட்டிக் கொண்ட அனைவருக்கும் ஒரே நிலை தான் நிர்வாணம்,மரணம்.ஒரு மனிதன் சக மனிதனை நிர்வாணப் படுத்துதலின் வழி எதனை அடைகிறான்.பெரிய பள்ளன் குலம் ஊரும்,குளமும்,மதுர மரமும் அங்குள்ள மக்களும் மனதில் தேங்கி நிற்கிறார்கள்.பெரிய பள்ளன் குளத்து மக்கள் இனப் பாகுபாட்டோடு சாதியப் பாகுபாட்டையும் சந்திக்கிறார்கள்.வீட்டிற்கு ஒருவரோ அல்லது சிலரோ போரினால் உடல் உறுப்பை இழந்து விடுகிறார்கள்.நாச்சியார்,அமிர்தகலா மற்றும் பெண் புலிகளைப் பற்றி படிக்கும் பொழுது மனம் கலங்கி விடுகிறது.இறுதியில் பெரிய பள்ளன் குளத்தை ராணுவம் கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை அந்த ஊரை விட்டே விரட்டி அடிக்கிறது.துறவறத்திற்காக பெளத்த மடாலயம் அனுப்பப்படும் சிங்கள சிறுவன் அங்கே இருக்க விருப்பமில்லாமல் தப்பித்து பெரிய பள்ளன் குளம் வருகிறான்.அங்கே அவனுக்கு ஆதரவாயிருந்த அமையாள் கிழவி நிர்வாணமாக இறந்து கிடப்பதை பார்த்து இவனது"காவி நிற சீவர" உடையை அந்தக் கிழவிக்கு போர்த்தி விட்டு அந்த நிர்வாணத்தை அவன் உடுத்திக் கொண்டு துறவி ஆகிறான்.அவனது நிர்வாணத்தை ராணுவம் Box அடித்துப் பாதுகாக்கிறது.எழுத்தாளர் எந்தச் சார்பும் இல்லாமல் நடுநிலையோடு போரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். இலங்கை ராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமைகளாலும், இனப்படுகொலைகளாலும் இலங்கை அதன் ஆன்மாவை இழந்து நிற்கிறது.
Profile Image for Thavanathan T.
8 reviews
July 12, 2016
ஷோபாசக்தியின் கதை சொல்லும் விதம் ஒரு சில எழுத்தாளர்களுக்கே கை கூடி வரும். சிறந்த புத்தகம். முகத்தில் அறையும் உண்மையில் சில நாட்களுக்கு தூக்கத்தை கெடுத்து விடும்.
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.