Jump to ratings and reviews
Rate this book

Kambaa Nathi

Rate this book
‘நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்-கிறது.’ இது ஒரு நதியின் கதையல்ல. மனிதர்களின் கதை. ஒவ்வொரு பாத்திரமும் அவரவர்களுக்கான பிரத்யேக குணங்களுடன் வலம் வருகிறார்-கள். அழுகிறார்கள். சிரிக்கிறார்கள். பரவசப்படுகிறார்கள். நெகிழ்கிறார்கள். கோபப்படுகிறார்கள். அந்தக் கணங்களில் நாமும் அந்த உணர்வுகளுக்கு ஆளாகிவிடுகிறோம். அதுதான் வண்ண-நிலவனின் எழுத்து பலம். வாழ்வின் போக்கைத் தீர்மானிப்பது யார் கையில் இருக்கிறது? விடை கிடைக்காத பல கேள்விகளை முன் வைப்பதும், அவற்றின் ஊடாக மனித மனங்களை ஊடுருவிச் செல்-வதும் படைப்பின் தலையாயக் கடமையாக இருக்கிறது. அந்த வேலையை வெகு சிறப்பாகச் செய்கிறது ‘கம்பாநதி.’

Unknown Binding

First published January 1, 1979

5 people are currently reading
59 people want to read

About the author

Vannanilavan

23 books48 followers
Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (21%)
4 stars
23 (35%)
3 stars
25 (38%)
2 stars
3 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for S.A. Krishnan.
Author 31 books232 followers
May 23, 2021
Bad habits of any person can destroy himself and his family. The author has brought the fact out well in the story in the form of a story from suburbs of Tirunelveli. It felt like reading the old movies of the time. Interesting read.
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
January 18, 2023
மிக அதிகமாக வர்ணனை இருந்ததாக தோன்றியது. மிக சிரமப்பட்டு முடிக்க வேண்டியதாய் இருந்தது.
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
December 26, 2016
கம்பாநதிக் கரையோர (திருநெல்வேலி) மனிதர்களின் கதையை நெல்லைத் தமிழில் அழகாக விவரிக்கிறார் வண்ணநிலவன்.
Profile Image for Arun Bharathi.
102 reviews3 followers
January 28, 2023
நதிக்கரை மக்களை கதையின் மாந்தர்களாக்கி அவர்களின் வாழ்வையும், மனநிலையையும் பதிவு செய்யும் "கம்பா நதி", அவர்கள் எதிர்கொள்ளும் தனிமனித பிரச்சினைகள், சமூகச் சிக்கல்கள் மூலம் சமூக எதார்த்தவாதத்தை நிறுவிச் செல்கிறது.

திருநெல்வேலியை கதையின் களமாக்கி அந்த நிலப்பரப்பை தன் எழுத்தின் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறார் வண்ணநிலவன். அங்கே உள்ள மத வழிப்பாட்டுத் தளங்கள், நதிக்கரை, குறுகிய தெருக்கள், பேரூந்து வழித்தடங்கள், கடைத்தெரு, வீடுகளின் அமைப்பு ஆகியவற்றின் துள்ளியமான வர்ணனையுடன் வட்டார வழக்கில் வரும் உரையாடல்களை சேர்த்து உள்ளதை உள்ளவாரே சித்தரிக்கிறார்.

குடும்ப உறவுகளின் விரிசல்களையும், உடைந்த குடும்பங்களில் பெண்களின் நிலையையும், அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியும், தனிமனித ஒழுக்கமின்றி சுயநலத்துடன் அலையும் சங்கரன் பிள்ளையின் குடும்பம் காட்டுகிறது. சமூக அமைப்பு விதிக்கும் நெறி பெண்களுக்கு மட்டும் பொருந்துவதை சரி எனும் ஏற்கும் பொதுவான மனநிலை பெண்களிடம் இருப்பதை சிவகாமி, மரகதம் கதாப்பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. சிவகாமி தன் விருப்பு வெறுப்புகளை மறைத்து குடும்பச் சூழலை சரிகட்ட வேலைக்குச் செல்கிறாள். மரகதமோ "ஆண் என்றால் அப்படித்தான்" என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறாள்.

வேலையில்லா திண்டாட்டத்தின் தீவிரத்தையும், சிபாரிசில்லாமல் வேலைதேடும் போராட்டத்தையும் கோமதி, பாப்பையா கதாப்பாத்திரங்களின் காத்திருப்பு பிரதிபலிக்கிறது. பலமுறை ஆட்தேர்வில் ஏமாற்றமடையும் பாப்பையா மூடநம்பிக்கைகளை துணைக்குத் தேடி அதிலும் ஏமாறுகிறான். பாப்பையா இறுதியில் திடீரெனக் கிட்டும் ராணுவ வாய்ப்பை ஏற்கிறான். கோமதியோ தன் விருப்பம் கேட்காமல் அமையும் திருமண ஏற்பாட்டுக்கு மௌனமாக சம்மதிக்கிறாள். இங்கேயும் கூட வேலையின்மையின் அடுத்தக்கட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாக அமைகிறது. சமகால அரசியல் சூழல், அரசு அலுவலகங்களின் ஆட்தேர்வு முறை, மனிதர்கள் மூடநம்பிக்கைகளில் தஞ்சம் அடையும் வழக்கம் ஆகியவை கேள்விக்குள்ளாகின்றன.

இதைத்தவிர சமூகத்தின் சாதிய மனநிலை, அரசு அதிகாரிகளின் அதிகார வரம்புமீறல் ஆகியவையும் உள்ளது உள்ளபடி பேசப்படுகின்றன.

மொழிநடையில் மிளிரும் இந்நாவல் அதிகமான கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஆங்காங்கே கிளைக்கதைகளில் சிக்கிக்கொள்கிறது. அதையும் மீறி தாக்கத்தை ஏற்படுத்த தவரவில்லை.

http://arunbswaminathan.blogspot.com/...
78 reviews4 followers
March 2, 2023
இந்நாவல் பெரும்பான்மையான கதாபாத்திரங்களை கொண்டுள்ளது, ஒரு நதியில் நீர் ஊடுருவி போவது போல. 'காமா நதி' என்ற ஒரு நதி இருந்ததாகவும் அதை அழைத்து ஒரு மண்டபம் கட்டியதாகவும் இதில் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனதில் பதிய வைக்கிறது . அந்த அளவுக்கு ஒரு ஆழமான எழுத்து. இதில் வரும் கதாபாத்திரத்தின் பின்னணியில் வரும் மனிதர்களின் வாழ்வியல் இந்த மனிதர்கள் வாழ்வியலை எப்படி பாதிக்கிறது என்று விலக்கியருப்பார். பெண்களை இச்சமுதாயம் எப்படி பார்க்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவிட்டு இருக்கிறார். அதுவும் ஒரு வாழ்க்கையாகவே தவிர ஒரு கருத்தியலாகவோ அல்லது ஒரு ஓலமாகவோ இல்லை மிகவும் எதார்த்தமாக எழுதி இருக்கிறார்.

ஒரு பெண்ணின் வாழ்வு இங்கு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது பெரும்பாலும் ஆண் ஆதிக்கத்தால் தான் நடக்கிறது என்று மிக அழுத்தமாக கூறியுள்ளார். வண்ணநிலவனை இதுதான் நான் முதல் முறை வாசிக்க துவங்கினேன் அந்த ஊரில் வட்டார வாழ்க்கை மிக அழகாக இயற்றி இருக்கிறார்.
Profile Image for Vignesh Asokan.
22 reviews5 followers
July 10, 2020
நதியின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள். திருநெல்வேலி மக்களின் வாழ்வையும் நதியின் மூலமாக நிலப்பரப்பையும் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர்.

பாத்திரங்களின் உறவு முறைகளை பின் தொடர்வது சவாலாக இருக்கிறது.

கோமதி மனதில் நிற்கிறாள்.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.