சூழ்நிலைக்கேற்ப தன் காதலை மாற்ற தெரிந்தவனே பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பொறுப்பாளியாகிறான்.தகுதியான காதலே இன்பங்களை அனுபவிக்க அனுமதி கொடுக்கிறது.
ஆத்மிகாவை விரும்பும் மித்ரன் அவள் தன் சொந்த மாமன் மகன் பிரதீப்பை விரும்புகிறான் என்று தெரிந்து தன்னுள்ளே காதலை மறைத்துகொள்கிறான் நெருங்கிய சொந்தத்தில் இவன் மாமா முறையில்லை என்றாலும் அவளைத் திருமணம் செய்யும் முறையுள்ளவன்.
தன் செல்வ நிலையை விரிவுப்படுத்த பிரதீப் ஆத்மிகாவை காதல் என்ற பெயரில் விளையாடி அவளைவிடப் பணக்காரி கிடைத்தவுடன் இவளைவிட்டு விட, சொந்தங்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தில் கண்மூடிதனமாக அவர்களின் தேவைக்குத் தங்கள் குடும்பத்தை உபயோகப்படுத்திய அறிந்த ஆத்மிகாவின் அம்மா மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறாள்.
ஆத்மிகாவை வைத்தே சுழலும் அக்குடும்பம் துன்பத்தில் வாட அவர்களை ஆறுதல் படுத்தும் மித்ரன் மேல் பார்வை விழுகிறது.அவனுக்கு அவள் மீது காதல் இருப்பதைத் தெரிந்த பெரியவர்கள் இருவரையும் இணைத்துவிட உண்மை காதல் இருப்பதை உணர்ந்தவள் தன் மனதை முழுமையாக மித்ரனிடம் தொலைத்துவிடுகிறாள்.