விகடன் குழுமத்தார் செய்துள்ள சில நல்ல காரியங்களில் இந்நூலும் ஒன்று. இந்நூல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. நான் நம்மாழ்வார் பேசுகிறேன் (நம்மாழ்வார் ஐயா அவர்கள் எழுதியது) மற்றும் நான் நம்மாழ்வாருக்காக பேசுகிறேன் (ஐயா அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் ஐயாவை பற்றி எழுதியது).
நூலில் இருந்து சில வரிகள்:
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள்.
சின்ன அம்மாச்சிக்கு, இடுப்புக்கு மேல் உடம்பு முன் நோக்கி வளைந்து இருக்கும். நிமிருந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. ஆணாதிக்கச் சமூகத்தின் முத்திரை சின்ன அம்மாச்சி.
எருமைகள், எருமைகளுக்காக, எருமைகளைக் கொண்டு செயல்படுத்துவது ஜனநாயகம்.
எப்போதும் புத்தங்களுடன் நட்பு கொள்ளுங்கள். அவை தீங்கு பயவாத நண்பர்கள்
பப்பாளி மரத்திற்கு பாலினம் (ஆண், பெண்) உண்டென்று எத்தனை பேருக்கு தெரியும்?
இனிப்பான பப்பாளிப் பழத்தை உண்டு கருச்சிதைவு செய்து கொள்ள முடியுமானால்... ஒரு தேசம் குடும்பக் கட்டுப்பாடுக்காக இவ்வளவு பணத்தைச் செலவழிக்குமா?
இளமையைப் பறிகொடுத்து, பெற்றோர் பணத்தைச் செலவழித்து, கல்லூரி செல்பவனுக்கு விடுமுறை எதற்காக?
ஜி.டி.நாயுடுவின் மூளையை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது தான் உண்மை.
தாவரங்கள் இசைக்கு ஏற்ப உணர்ச்சி வசப்படுகின்றன.
அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை.
ஏழைகளிடம் உள்ள நிலத்தைப் பறித்து பணக்காரர்களிடம் ஒப்படைப்பது என்ற கொள்கையை மத்திய, மாநில அரசுகள் முழுமூச்சுடன் இன்றளவும் செயல்படுத்தி வருகின்றன..... இப்போதெல்லாம் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.
இந்த நாட்டு ஏழைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கவேண்டியது தேசத்தின் கடமை.
இந்திய நாட்டில் பணக்காரர்கள், பிச்சைக்காரர்களாக இருப்பது வியப்பளிக்கிறது.
நமது எதிரி நம்மைப் பற்றி தவறாகப் பேசினால்... நாம் சரியாக இருக்கிறோம் என்று பொருள்.
விஞ்ஞானம் என்கிற போர்வையில் நடக்கும் வியாபாரம், தாய் மண்ணைச் சாகடிக்கிறது.
மக்கள் பங்கெடுப்பு இல்லாத நலத்திட்டங்கள், மக்களுக்கு உதவாமல்தான் போகும்.
எதையும் இலவசமாக கொடுத்த மதிப்பு இருக்காது. குறைஞ்ச விலைக்கு கொடு.