அரசியல், புவியியல், மொழி, இனம், பொருளாதாரம் எனப் பல்வேறு காரணங்களால் இன்று பூமி எங்கும் பிரச்னைகள்! அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில நாடுகள் உலக மக்கள் அனைவராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற பல்வேறு நாடுகள் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகள் மீது மக்கள் அறியும் செய்திகள் தற்காலிகச் செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அச்செய்திகளின் முழு ஆழத்தை அறிய, அந்நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். உலகப் பிரச்னைகளை அறிந்து அதை அலசிப் பார்ப்பது என்பது வெறும் பொழுது போக்கு என்று கருத முடியாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இராக்கில் குண்டு வெடித்தால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் கத்திரிக்காய் விலை எகிறி விடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அடிப்படையில்தான் ஆனந்த விகடனில் 'பிரச்னை பூமிகள்!' என்ற தலைப்பில் தொடர் வெளிவந்தது. ஜனவரி 2005 வரை
A geopolitical book from a Tamil author is a rare event. This book briefs about the countries which were facing problems internally and the ones which creates problems for their regions. A very light read about the complex problems of the world countries.