நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை நம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தனித் தன்மையானவை. 'அந்த கண்கள் அபூர்வமான ஒரு இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இரு பக்கமும் கூராக இருந்தன.' இப்படி எழுதும் ஒவ்வொரு வசனமும் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்வதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதே விதமான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
பிரபல ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அங்கே இப்ப என்ன நேரம் ஒரு கட்டுரை தொகுப்பு.
இவர் வசித்த நாடுகள், வாசித்த இலக்கியங்கள், சந்தித்த மணிதர்கள், ரசித்த கலைகள் ,செய்த பயணங்கள் , குடும்பம், வேலை என்று இவரது அனுபவங்களை மிகவும் ரசிக்கும்படி எழுதி இருக்கிறார்.
பல எழுத்தாளர்கள் இது போன்று நூல் எழுதியிருந்தாலும் பொதுவாக அதில் ஒரு மேதமை தன்மை வெளிப்படும் ஆனால் நமது நெருங்கிய நண்பன் தனது எளிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைப்போல இருக்கிறது இவரது எழுத்து, அதற்கு காரணம் இவரது எழுத்தில் ததும்பும் நகைச்சுவை. சின்ன புன்னகையை உதிர்க்காமல் நம்மால் பக்கங்களை கடக்க இயலாது என்பது நிச்சயம்.
ஒரு மனிதருக்கு இவ்வளவு அனுபவங்களா என்று வியப்பு ஏற்படுகிறது அதிலும் இவரது பணி அனுபவங்கள் கனடாவில் தொடங்கி சூடான்,பெஷாவர் , சோமாலியா என்று நீள்கிறது.
ஒரு பக்கம் கூட சலிப்பு ஏற்படாமல் தொடர்ந்து படிக்க தூண்டிய புத்தகமாக இருந்தது.
அ. முத்துலிங்கம் தன் வாழ்வின் பலதரப்பட்ட அனுபவங்களை, சுவரஸ்மான மொழிநடையில் மிகக்கச்சிதமான வார்த்தைகளால் எழுதியுள்ளார். படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், சந்தித்த மனிதர்கள், வேலை அனுபவங்கள் என பலவற்றை பற்றி எளிய நடையில் எழுதியுள்ளார்.