Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #9

வெண்முரசு – 09 – நூல் ஒன்பது – வெய்யோன்

Rate this book
Begins with
http://venmurasu.in/2015/12/20/
or
http://www.jeyamohan.in/81949#.VoxOYP...

848 pages, ebook

Published December 1, 2015

9 people are currently reading
97 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
50 (67%)
4 stars
19 (25%)
3 stars
5 (6%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Swami Nathan.
99 reviews2 followers
October 21, 2024
மிக மிக கடினமான ஒரு படைப்பு. எங்கே நகர்கிறாய்? கூர்ந்து கவனி! ஒரு துளி மணிப்பொழுது கூட பிசகினாலும் பேரரறிவை நீ இழப்பாய் என்று ஆயிரம் பக்கங்களும் கூர்வாளுடன் ஜெமோ..

கர்ணனே ஒரு மிக மெல்லிய நுணுக்கமான கதாபாத்திரம். நம் பரிதாபத்தையும் வெறுப்பையும் மாறி மாறி பெரும் இவனைப்போல் வேறு யார் பாரதத்தில்? இதில் இவனில் நிகழும் உளமயக்குகளும் எது உண்மை எது ஊழ்வினை செய்தி என்று அறிய முடியாமல் நம்மை வதைக்கின்றன. என்ன சாதி? இங்கு ஆரம்பத்தில் அவனின் தேரோட்டி தந்தையும் தாய் ராதையும் பேசுகிறார்கள் பாருங்கள் அதுவே சாதி.

ஜயதரதனின் வாழ்வும் இந்திரப்ரஸ்த விழாவில் அரங்கேறும் அந்த நாடகமும் அதை தொடர்ந்து மயன் மாளிகை சம்பவத்தை ஜெயமோ தன் பாணியில் கூறுவதும்…. எல்லாவற்றிற்கும் பின்புலனாய் காலம் என்ற பட்டுநூலில் அவிழ்க்கமுடியா சிக்குகளாய் விழைவும் வஞ்சமும் இருப்பதும் அசர வைக்கின்றன.

ஒரு காட்சி மிக சிறியதாக வருகின்றது இந்த புத்தகத்தில் இந்திரபரஸ்த விழாவில் நடக்கும் பூஜையில் கர்ணன் கலந்துகொள்கின்றான். வேண்டா வெறுப்பாக, முள்மேல் நிற்கும் பாதமாக காரணம் வில்லாளன் அல்ல குந்தியும் திரௌபதியும். அவன் உளவாலே விவரிக்க முடியா ஒரு சிக்கல் அவனுக்கு இவ்விருபெண்களிடமும் . அங்கு குலத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் மலர் அளிக்கப் படுகின்றது குந்தியின் மிக மெல்லிய ஓசைகளுக்கு பின்னர் கர்ணனுக்கும் மலர் வருகின்றது அந்த பக்கங்களில் ஜெமோ நடத்துவது ஒரு அகசதுரங்கம்

மாதவனின் மாயமோ திரௌபதியின் வெஞ்சினமோ பாரதம் அன்று. அதை அனைத்தையும் இந்த வெய்யோன் நினைத்திருந்தால் ஒரு சொல்லில் ஒரு எண்ணத்தில் இல்லாமல் ஆக்கியிருக்கலாம். இவனே அனைத்திற்கும் அச்சாணியாய் இருந்து அந்த சக்கரத்தை சுழலவிட்டிருக்கிறான்.
30 reviews1 follower
November 9, 2021
Oh my God. I literally got frightened because of this. Mahabharata the world of chaos begins at the end of this book. I wanted to avoid this book because of the intensity it has. Finishing this book is like overcoming my deepest fear.
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
November 26, 2025
வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தது முதல் நான் அதிகம் எதிர்பார்த்த கதை கர்ணனுடையது. ஏற்கனவே சில ஆசிரியர்களின் படைப்பில் கர்ணனை வாசித்திருக்கிறேன்.

ஆனால் எதையும் நாம் எதிர்பாராத முற்றிலும் வேறொரு கண்ணோட்டத்தில் காணும்/காட்டும் ஆசிரியர் ஜெயமோவின் கர்ணன் எப்படி உயிர்ப் பெருகிறான் என்ற ஆவலுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

கர்ணனின் வாழ்க்கையை முழுமையாக அலசும் நூலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், இதற்கு முன் அர்ஜூனன், இளைய யாதவனையும் எழுதி வெறுக்க வைத்தது போல ஆகி விடகூடாது என்ற பதைபதைப்புடனும் வாசிக்கத் தொடங்கினேன்.

எடுத்த எடுப்பிலேயே தூங்கி வழிகிறான் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக"அரியணையையும் மஞ்சமாக்கியவன்" என்றே ஆப்படித்துவிட்டார்.

எனக்கு வருத்தம் பா !!

எட்டு புத்தகங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அவனை வாசித்து உருவாகிய "கர்ணன் ஆர்மி"க்கு வெய்யோன் புத்தகம் தங்கள் ஹீரோவான கர்ணனை முழு மூச்சாக எழுதித் தீர்க்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

'ஊருக்கே பட்டுக் குஞ்சலம்னாலும், வீட்டுக்கு விளக்குமாறு தான்'

என்பது போல் சூரியபுத்திரன், ஒளிரும் கவச குண்டலங்களைக் கண்டு ஊரே தெய்வப் பிறவியாக வணங்கும் கர்ணனை மனைவிமார்கள் மதிக்காமல் இருப்பதும் , அதற்கு அவனும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதும், ஏன் அவன் பெற்றோர் கூட அவனை பந்தாடுவதும் என்று டோட்டல் டேமேஜ் செய்து கர்ணன் ஆர்மியினர் மனதில் ஆறாத ரணத்தை உருவாக்கி விட்டார் ஆசான்.

அவனுக்கு ஆறுதல் துரியனின் நட்பு. அஸ்தினபுரியில் தான் அவன் தன்னிலை மீள்கிறான். கர்ணனின் பார்வையில் துரியன் அன்பானவன், அழகானவன், அசராதவன் . அதனாலோ என்னவோ ஆசானும் இந்த புத்தகத்தில் கர்ணனைக் காட்டிலும் துரியனைப் பற்றியே அதிகம் எழுதியிருப்பதாகத் தோன்றியது. அதற்காக அந்த குளியலறை காட்சி கொஞ்சம் ஓவர் தான்.

கௌரவ நூற்றுவரோடு நில்லாமல் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் வரை என்று வேறு எந்த புத்தகத்திலும் எழுதியிருக்க வாய்ப்பில்லை.. மூலம் உட்பட!!! ஆனால் ரசிக்க முடிந்தது.

மோகனத்தின் அழகியல்.

இருந்தாலும், ஒரு ஆயிரம் பேர் கர்ணனை "பெரீந்தையே" என்று கூப்பிட்டதை, ஆயிரம் முறை எழுதியருக்க வேண்டாம் என்று ஆசிரியரிடம் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!!!

முந்தைய புத்தகத்தில் எழுத மறந்துவிட்ட காண்டவ தகனத்தை, பலர் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன் என்று நம்மை கதறடித்துவிட்டார் ஆசிரியர். ஆனாலும் ஏனோ அது மனதிற்கு ஒட்டுமளவுக்கு உணர்வுப்பூர்வமாகத் தோன்றவில்லை.

இந்திரப்பிரஸ்தத்தின் வர்ணனைகள் அழகு. திரௌபதியின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று புத்தகம் நெடுகிலும் அனைத்து கதாப்பாத்திரங்களும் சொன்னாலும், அங்கத நாடகம் என்று பகடி செய்தாலும் அது அழகு தான்.

மயனீர் மாளிகை காட்டிய மாயஜாலங்கள், திரைப்படத்தில் காட்டும் VFX காட்சிகளையும் மிஞ்சிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. வர்ணனைகளில் ஆசானுக்கு நிகர் ஆசானே!!

அதுவரை அன்பின் வடிவாய் கருணையின் உருவாக காட்டப்பட்ட துரியனை எப்படித் தான் வஞ்சம் நிறைந்த நாம் அறிந்த துரியோதனனாக காட்டப் போகிறார் என்ற கேள்விக்கு இந்த புத்தகம் எதார்த்தமாக நம்பும்படியாக பதில் அளித்திருந்தது.

ஆனாலும் துரியன் விழுந்த காட்சி குறித்து இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம், காண்டவ தகனம் போல் அடுத்த புத்தகத்தில் விரிவாக இன்னும் எத்தனை பேர் பார்வையில் எழுதவாரோ என்று யோசனையால் நின்று போனது.

ஐந்து கணவர்களை மணப்பதில் சூழ்நிலை கைதியாக இல்லாமல் சொந்த விருப்பமாக பாஞ்சாலியை எழுதிய ஜெயமோ, பாரதத்தில் காட்டிய 'பொம்ள சிரிச்சா போச்சு' கருவை தன் வார்த்தை ஜாலம் கொண்டு வித்தியாசமாக எழுதுவார் என்ற என் எண்ணம் பொய்த்தது.

ஆம், ஆண்களால் எழுதப்பட்ட பெண்கள் இப்படித்தான் போல...

கர்ணன் நாகாஸதிரத்தை எப்படிப் பெற்றான் என்பதை எளிதாக பத்து பக்கங்களில் முடித்திருக்கலாம். ஆனால் நாகங்கள், நாகர்கள், உரகர்கள் என்று ஒரு நீட்டி முழக்கி, கர்ணன் நாகர்களை சந்திப்பது நடப்பது நிஜத்திலா, கனவிலா, இல்லை அவன் உளமயக்கா,மதுமயக்கா என்று ஒரு பெரிய குழப்பம் குழப்பி என்று எங்கெங்கோ கதையை தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்கிறார்.

மொத்தத்தில் புத்தகம் வாசிக்க தொடங்கிய போது கர்ணனை வெறுக்க வைத்துவிடுவாரோ என்ற கவலை புத்தகம் முடிக்கும் போது இல்லை.

ஏன்னா அவர் தான் கர்ணனைப் பத்தியே எழுதலயே !!!

இனி வரும் புத்தகங்களில் கர்ணன் குறித்து நிறைய எழுதுவார் என்று நம்புவோம் .
மேலும் இதுவரை இருந்த புத்தகங்கள் போல் ஆரவாரமாக ஆரம்பித்து ஒரே மாதிரியாக கடுப்படித்த மாதிரி முடிக்காமல், அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கடைசி சில பக்கங்களை விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார்.

நாம் அறிந்த பாரதப் போரின் முக்கிய காட்சியை வாசித்த ஒரே ஒரு திருப்தியை மட்டுமே இந்த புத்தகம் தந்தது. ஆனாலும் கர்ணனை பத்தி இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம் ....
Profile Image for Shanmuga.
2 reviews1 follower
January 11, 2020
My favorite character in mahabharata. Shows how a person who lives according to his unwavering (mostly) moral compass, one who is tormented by his earthly ties and relations colliding with his principles is a loner amidst people.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.