Kuna Kaviyalahan has written three novels. His first novel Nanchundakaadu won the Tamil literary garden fiction award for 2014. His third novel Appaal oru Nilam won the Vasaga Salai best novel award for 2016 . Vidameriya kanavu / The Poisoned Dream is a harrowing tale of a Tamil tiger facing incarceration, torture, the possibility of death, and the faint hope for escape
குணா கவியழகன் அவர்களின் நஞ்சுண்டகாடு கர்ப்ப நிலம் ஆகியவற்றைத் தொடர்ந்து நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம் விடமேறிய கனவு.2009ஆம் ஆண்டு மே 18 விடுதலைப்புலிகள் பல நாடுகளால் ஒன்றிணைந்து அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பிறகு அங்கு மீதமிருந்த போராளிகள்,மக்கள் போன்றோர் எப்படிப்பட்ட அடக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பதை நூலின் ஆசிரியர் நமது கைகளை பற்றிக்கொண்டு அந்த இடங்களுக்கு கூட்டிச் சென்று உணர வைக்கின்றார். கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் நடத்தும் விதங்கள் சிறிதளவு தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் அவர்கள் படும் பாடுகள் இவையெல்லாம் வாசிக்கவே ரணமாக இருக்கின்றன. ஆரம்ப கட்டங்களில் சற்று மெதுவாக ஆரம்பித்தாலும் நாவல் போக போக வேகம் எடுக்கின்றது.மேலும் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு குறித்த விமர்சனத்துக்கு ஆசிரியர் இந்த நூலில் பதில் கூறி இருக்கின்றார்.
"தன் சூழலையும் சூழலில் தன்னையும் பிணைந்து ஊடாடுவதே உறவு.உறவுறாத மனதைக் கொண்டு வாழ்வதுதான் எப்படி என் குடும்பம் இல்லை,என் ஊர் இல்லை, நான் விரும்பியவள் இல்லை,என் போராடும் இயக்கம் இல்லை,என் தோழர்கள் இல்லை என் போராட்டம் இல்லை,என் மக்கள் இல்லை..எதனுடன் உறவுறுவேன் நான்? எல்லாவற்றையும் தின்று தீர்த்து என்னை ஏன் எஞ்ச வைத்தாய் ?பாழ்விதியே என் விதியே.. விலக்கப்பட்ட எந்தக் கனியையும் உண்ட தில்லையே..பின் எதற்காக சபிக்கப்பட்டோம்..அணைகட்ட மெய்வருத்தம் சுமந்தோம்.. இருந்தும் என் முதுகுகளில் ஏன் இத்தனை சாட்டையடி.. எம்மை நம்பிய மக்களை காக்க நின்றுவிடும் ஆனாலும் அது கண்டத்தில் மட்டும் தங்க வில்லையே எம்முடைய தள்ளாத எதையும் கேட்டதில்லை பின் எதற்காக வஞ்சிக்கப்பட்டோம் என்று நாவல் முழுக்க அழுத்தமான வரிகள் மூலம் நம்மை கலங்க வைக்கின்றார் குணா கவியழகன்.கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்💔