திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.
இசுலாமிய படையெடுப்பும் கொள்ளையும்
கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட முனைந்தான். பெரும்படையை எதிர்த்து கோவிலையும், கோவிலுள் உள்ள சிலைகள், ஆபரனங்கள் போன்றவற்றையும் காக்க திருவரங்க நகர மக்களும், ஆச்சாரியர்களும், தேவதாசிகளும் போராடினார்கள். நகர வாசிகள் ஆயுதமேந்தி போராடியதாகவும், தேவதாசிகள் இசுலாமிய படையினரை மயக்கி போராடியதாகவும் கருத்துண்டு. இப்போரில் பல வைணவர்கள் கொல்லப்பட்டார்கள்.
உற்சவர் சிலை பாதுகாத்தல்
இசுலாமியர்களிடமிருந்து காக்க திருவரங்கத்தினை விட்டு பிற இடங்களுக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது.
Sri Venugopalan, whose literary craftsmanship allowed him to straddle two genres — serious literature and popular fiction under the name Pushpa Thangadurai
A native of Kizhanatham village in Tirunelveli district, he worked briefly with the postal department, before resigning to become a full-time writer.
He was prolific and penned everything, from short stories and novels to essays, television serials and plays.
His novel ‘Oru Oothappu Kanchimitukirath’ was made into a film, and two of his songs, ‘Andavan Illa Ulagam Yethu’ and ‘Nalla Manam Vaazhga,’ with music scored by Dakshinamurthy, became unforgettable melodies for many fans. A voracious reader with an avid passion for astronomy, Sri Venugopalan’s collection of books was a bibliophile’s envy.
If the name Sri Venugopalan and his novels, including ‘Nee En Nila’, ‘Nanda En Nila’, ‘Thiruvarangan Ula’ and ‘Madura Vijayam,’ appealed to lovers of serious literature and received appreciation from no less than a person like late critic and writer C.S. Chellappa, the pen name Puspha Thangadurai struck a chord with the common man.
“‘Thiruvarangan Ula’ was so popular, the Vaishnavites in Srirangam honoured him by taking him in procession on an elephant,” said Tirupur Krishnan, editor of Tamil literary magazine ‘Amudhasurabhi’
திருவரங்கனின உலா பாகம் 1 மற்றும் 2 ல் இருந்த அதே வேகம், 3,4 லும் இருக்கிறது. மதுரா விஜயம் என்ற துணை தலைப்புடன் வருவதற்கு குமார கம்பணரின் மனைவி கங்கா தேவியின் மதுரா விஜயம் ஒரு காரணமாக இருந்தாலும், பாண்டியர்களின் முறையான வாரிசு குலசேகர பாண்டியனின் மகள் மதுராங்கனி, இந்த பாகத்தின் மற்றுமொரு நாயகியும் ஒரு காரணம் தான்...
இராஜவல்லபன், தத்தன் இருவரும் முன்னைய சந்ததியினரின் கடமையை சிறுவயதிலிருந்து நோக்கமாக கொண்டு, சத்யமங்கலத்திலிருந்து வெளியேறுவதில் ஆரம்பிக்கும் இந்த பாகம். இடையில் அவர்கள் சந்திக்கும், கற்பூர வியாபாரி, மஞ்சரி, போபண்ணா, கம்பணர் மற்றும் பலரோடு கதையின் வேகம் குறையாமல், வரலாறும் பிசகாமல் அழகாக கதையை கொண்டு செல்லுகிறார் ஸ்ரீவே. இளைஞர்களாக இருந்தாலும் ஒவ்வொரு தருணத்திலும் வல்லபனும், தத்தனும் சாமர்த்தியமாக முன்னேறி கொடுக்கப்பட்ட பொறுப்பை செவ்வனே முடித்துவிடுகிறார்கள். திருப்தியிலிருந்து, ஸ்ரீரங்கத்திற்கு அரங்கனை கொண்டு வருவதற்குள் நடக்கும் முயற்சிகள் தான் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம்.. முதல் பாகம் திருப்பதியில் இருக்கும் வனாந்திரங்களில் அரங்கனை கண்டுபிடிப்பதில் ஓடிவிடும்..
இறுதியில், கண்ணனூர், சாம்புவுரையாரின் காஞ்சி மற்றும் செஞ்சி போன்ற இடங்களை வென்று, ஸ்ரீரங்கத்தில் அரங்கனை மீண்டும் எழுந்தருள செய்து, அங்கே ஏற்படும் குழப்பங்களை சரிசெய்து, மதுரை நோக்கி படையெடுத்து அங்கும் வெற்றி கொள்ளுக்கும் விஜய நகர பேரரசு. இந்த முழுநீள போரில் வல்லபன் மற்றும் தத்தனின் முயற்சிகள் பெரும்பங்கு வகிப்பதாக இருக்கும்..
முக்கியமான குறையாக நான் பார்த்தது, விஜயநகர பேரரசின் வெற்றிக்கு தென்னாட்டில் சம்புவரையரை தவிர்த்து மற்ற பல்வேறு தரப்புகளிடம் இருந்து உதவி கிடைத்தது. அதன் காரணமாகத்தான் சுல்தான் ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டது.. இதே விஜய நகர பேரரசை தோற்கடித்த சோழ வம்சம் இந்த சமயத்தில் அடியோடு அழிந்துவிட்டது. ஆசிரியர் ஓர் வைணவர் என்ற காரணத்தினால், தென்னாட்டை மீட்டெடுத்ததில் வைணவர்களின் பங்கு மட்டுமே அதிகம் என்பது போல கற்பனையை மிகுதியை செலுத்தியிருக்கிறார். ஆனால் சோழர்கள், பாண்டியர்களின் ஆட்சிகளில் கிடைக்காத பெரும்மதிப்பு வைணவர்களுக்கு விஜய நகர பேரரசில் கிடைத்தது என்பது உண்மை.
இந்நூலை படிப்பதில் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களின் பட்டியல். 1. ஸ்ரீரங்கத்தின் பிற்கால வரலாறு ( விபீஷணன் பிரதிஷடை செய்த்து, பின்னாளில் சோழர்கள் கோவிலைகட்டிய வரலாறு இதில் இல்லை) 2. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த சில முக்கியமான வைணவ பெரியவர்களின் விவரங்கள். பிள்ளை லோகாச்சார்யார், வேதாந்த தேசிகர் மற்றும் பலர். 3. ஹொய்சளத்தின் கடைசி மன்னன் வீரவல்லாளதேவனை பற்றிய சில விஷயங்கள் 4. சுல்தான் ஆட்சியின் அடக்குமுறை மற்றும் அவர்களின் வாழ்வியல் 5. திருப்பதி கோவிலின் சில வரலாறுகள் 6. விஜயநகர பேரரசின் தொடக்கம் பற்றிய சில வரலாறுகள் 7. கங்காதேவியின் மதுரா விஜயம் பற்றிய சில குறிப்புகள்
What a novel it is ? Made me cry at various places. The plot is too engaging and emotional at various places. Just like part 1 and 2 the war scenes are of great hit and finally a celebration . This is one of the novel that should be treasured. Hope a movie or a web series can be made of this great work. The author has put so much effort on the research of this beautiful work. Kudos....