நீதியை நிலைநாட்டுவதை எந்தவொரு தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.ஒப்புக்கொடுக்க முடியாது. நீதி மன்றங்களில்கூட குறைந்தபட்ச அல்லது நடுவண் மன்றத் தீர்ப்பு எனத்தான் குறிப்பிடப்படுகிறது. நாம் இன்னும் நீதி குறித்து நெடும் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது...
It's not just the economy that decides if a country is 'third-world'. A real life story that exposes how even basic human rights are tied to wealth/caste-related privileges in India. Thousands of these incidents must happen on a daily basis, but they rarely ever garner any attention. I'm glad this book was published and later made into a movie. This spine-chilling account brings to the forefront a voice that's so rare - not just of working class men but of those untethered, nomadic, vulnerable men who have no families.
ஸ்டெர்லைட் தூத்துக்குடி கலவரத்திலும் சரி, ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சரி காவல்துறையின் அராஜகம் நாம் அறிந்ததே. ஆனால், காவல் நிலையத்தில் நடக்கும் அராஜகத்தை பற்றி மு.சந்திரகுமாரின் லாக்கப் விவரிக்கிறது. "காவல் துறை உங்கள் நண்பன் இல்லை" என்று முன்னிறுத்துகிறது. அதிகாரம் ஒருபோதும் மனித சந்தோசத்திற்கு உத்தரவாதம் தந்தது இல்லை. நூறு குற்றவாளிகள் தப்பிச்சென்று விட்டாலும், குற்றத்தன்மையற்ற ஒருவன் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் நீதிமன்ற விசாரணையின் சாரமே.
Tamil Movie 'Visaaranai' (Interrogation) is based on this book. It bagged national award and other international awards. Plot: Four laborers are tortured by the police to confess to a theft they are not committed. Just as they feel relieved after being saved by an honest policeman, they find that the worst is yet to come. The film deals with police brutality, corruption, and loss of innocence in the face of injustice.
இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் பொழுது இதையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை புறந்தள்ளுவது சிரமமே. இருந்தாலும் லாக்கப் நாவலும் விசாரணை திரைப்படமும் கையாண்ட விஷயங்கள் வேறு வேறு. இது லாக்கப் நாவல் பற்றிய விமர்சனம் ஆகையால் அதைப்பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன்.
எழுத்தாளர்: மு. சந்திரகுமார் பக்கங்கள்: 144
நாம் நமது அன்றாட வாழ்வில் நிறைய போலீஸ்காரர்களை சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம். நீங்கள் சரியாக கவனித்தீர்களேயானால் போலீஸ்காரர்களின் நடத்தை ஒரு சாமானியனுக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையில் வேறுபடும். எடுத்துக்காட்டாக சொல்கிறேன் போலீஸ்காரர்கள் லாரி ஓட்டுனரை நடத்துவதும் ஒரு காருக்கு சொந்தக்காரரை நடத்துவதும் வித்தியாசப்படும். இப்புத்தகம் இதைத்தான் வலிமையாக பேசுகிறது. சாமானியர்கள் இவர்கள் கையில் கிடைத்தால் எப்படியெல்லாம் இரக்கமின்றி அவர்களை நடத்துவார்கள் என்பதே இப்புத்தகத்தின் அடிநாதம்.
நல்லவர்கள் அல்லாதவர், மக்கள் பண்பை இழந்து போனவர்கள், மனிதனை மனிதனாய் மதிக்கத் தெரியாதவர்கள் ஒருக்காலும் மனித குலத்தை அல்ல, ஒரு சில மனிதர்களை கூட திருத்த முடியாது காப்பாற்றவும் முடியாது.
குமாரும் அவனுடைய நண்பர்களும் தன் சொந்த ஊரை விட்டு குண்டூருக்கு வருகிறார்கள் காரணங்கள் சொல்லப்படவில்லை. இவர்கள் அன்றாடம் காட்சிகள் சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு நாள் இந்த நண்பர்களில் ஒருவன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வரும்பொழுது போலீஸ்காரர்களிடம் மாட்டுகிறான். அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ உளறுகிறான் அப்படி உளறும் பொழுது அவனுடைய மற்ற நண்பர்களையும் தேவையில்லாமல் கோர்த்துவிடுகிறான். போலீஸ் அவர்களை கொண்டு வந்து சிறையில் அடைக்கிறது. இந்த புத்தகம் முழுவதும் அவர்கள் எப்படி எல்லாம் சித்திரவதை அனுபவித்தார்கள், போலீஸ்காரர்கள் தங்களுடைய அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ஒரு சாமானியன் கிடைத்தால் எப்படி எல்லாம் அவன் மீது தங்களுடைய எதேச்சதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியது. கடைசியில் அவர்கள் தப்பித்தார்களா அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் பட்டார்கள் என்பதை நீங்கள் புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்.
இம்மாதிரியான நாவல்களை நான் இதுவரை படித்ததில்லை. முதல் முறை சில விஷயங்களை எழுத்தின் மூலமாக தெரிந்து கொள்ளும் பொழுது மிகவும் மனது சஞ்சலப்படுகிறது. நான் போலீஸ்காரர்கள் எப்படியெல்லாம் ஒருவரை நடத்துவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் ஒரு சில முறை அவர்களுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியும் இருக்கிறார்கள் ஆனால் இந்தப் புத்தகத்தை படிக்கும் பொழுது தான் அவர்களுடைய உண்மை முகம் வெளிப்படுகிறது.
என்னதான் நாவலின் எழுத்தாளர் பட்ட கஷ்டங்களை இப்புத்தகத்தில் எழுதி இருந்தாலும் என்னால் ஒரு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தானோ என்னமோ அந்த நம்பகத்தன்மை எனக்கு வரவில்லை. இருந்தாலும் அவன் பட்ட கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு இந்நாவலில் பிடிக்கவில்லை என்றால் எழுத்து நடை. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் எழுத்துநடை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி மாறுகிறது. ஒரு சில இடத்தில் எழுத்துத் தமிழிலும் ஒரு சில இடத்தில் பேசும் தமிழிலும் எழுதப்பட்டு இருந்தமையால் படிக்கும் பொழுது சில தடுமாற்றங்கள் ஏற்பட்டது.
எனினும் இப்புத்தகம் காவல்துறையினரின் மனநிலைகளும் ஒரு சாமானியனை இவர்கள் எப்படியெல்லாம் நடத்துவார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஒரு திறவுகோலாக பார்க்கிறேன்.
நீங்கள் இப்புத்தகத்தைப் படித்து இருக்கிறீர்களா? அப்படி படித்திருந்தால் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
இந்த அதிகாரவர்கத்தின் அடக்கு முறையில் சிக்கும் சாமணியர்களில் ஒரு சிலரே ஒடுக்கப்படும் போதும் எதிர்த்து போராடி தப்பிக்கொள்கின்றனர், அப்படி தப்பி வந்த ஒருவனின் கதையே இந்த லாக்கப்
லாக்கப் நாவல் ஆசிரியர : சந்திரகுமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
கதையின் காலக்கட்டம் 80 களின் தொடக்கம். ஊரை விட்டு ஓடி வந்த நான்கு மாறுபட்ட எண்ணங்களைக் கொண்ட இளைஞர்களைப் பற்றிய கதை. கதையின் நாயகர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.கதைக்களம் ஆந்திரமாநிலம் குண்டூர் பகுதி. கதையின் நாயகர்கள் அறிமுகம் முடித்தவுடனே அவர்களின் வாழ்வில் புயல் காவல்துறையின் ரூபத்தில் அடிக்கிறது. சந்தேகத்தின் பெயரில் விசாரணைக் கைதிகள் ஆக்கப்படுகிறார்கள். அதன்பிறகு என்ன என்பதே நாவலின் இதய ஓட்டம்.
இன்றைய காலக்கட்டத்தில் விளிம்புநிலை மனிதர்கள் காவல்துறையால் அலைக்கழிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகசிதைக்கப்படுகிறது காவல்துறையின் வன்மம் லாக்கப்பில் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் மனிதனுக்கான உரிமை மறுக்கப்படுவதும். விசாரணை என்ற பெயரில் அவர்களை சித்ரவதைக்குள்ளாக்கி துன்புறுத்துவதுமே. இவர்களின் போக்கிற்கு யார் பொறுப்பு , இவர்களின் மனம் மிருகமாய் இருப்பதற்கு யார் காரணம், இவர்களின் பார்��ை ஏன் அநாதைகளையும் , சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் மீது மட்டுமே விழுகிறது. என்ற கேள்விகளை எழுப்பும் இந்த நாவல் கடைசியில் அவர்களின் நிலை என்ன என்பதை காட்டுவதில் முடிகிறது.
இந்த நாவலைத் தழுவி "விசாரணை" என்ற படம் வெளிவந்து சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது.
காவல் நிலையங்களில் விசாரணை என்ற போர்வைகுள் நடக்கும் இரக்கமற்ற செயல்களே சந்திரக்குமாரின் "lockup".
கைதி,திருடன்,குற்றவாளி, ஜெயிலுக்கு போனவன் என நாம் அருவருப்புடன் பார்க்கும் மனிதர்களை பற்றிய கதை.
கைதிகள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல குற்றவாளியாயினும் அவன் மனிதன் எனும் மைய கருத்தை கொண்டு நமது குற்றவியல் துறையின் அவலத்தையும் தடயவியலின் அலச்சியத்தையும் பிரதிபலிக்கிறது.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள், இக்கதையில் வருவது போல காவல் நிலையங்களின் கொடுமைகளில் சிக்கி சிறைசாலை தவத்தை முடித்து வெளிவரும் ஒருவனை நம் சமுகம் எப்படி பார்க்கும் என என்னி பாருங்கள்.
என்னை கவர்ந்த வரிகள்:
"உள்ளே அமர்ந்திருந்த அத்தனை பேரும் சரியானவர்களோ,தவறானவர்களோ?எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் இந்த சமூகத்தின் பிம்பங்கள், பிரதிபலிப்புகள்,மானுடப் பிறவிகள் என்பதில் எனக்கு அன்றும் இன்றும் சந்தேகமேயில்லை."
ஓகே. சாமானியனின் குரல் என்ற வகையில் முக்கியமான பதிவு. ஆனால் எதோ ஒரு நம்பகமின்மை கூடவே பயணிக்கிறது. அதிகார வர்க்கம் அப்பாவிகளை சித்ரவதை செய்வது மற்றும் அவர்களுக்கு எவ்வகையிலும் தங்கள் குற்றமின்மையை நிரூபிக்க வாய்ப்பே தராமல் இருப்பது - இவற்றை மிக அழுத்தமாகவே நூல் சொல்கிறது. எடிட் செய்யப்படாத நூலின் நடை மொழியில் தோற்றாலும், எளிய மொழியாளுமை அற்ற பதிவு என்ற வகையில் இதுவே நூலின் பலமாகவும் மாறுகிறது.
Lock Up is not a work of fiction but a memoir of brutal incidents endured by the author Chandrakumar at a police station in the city of Guntur in Andhra Pradesh. He lives a nomadic life drudging about for a living before landing a job in a tea shop in the city. He and his acquaintances doing jobs that the mainstream society views as menial go about living and sleeping on street outside a mosque. On a morning which would be a mark of grievous turn of events in their life, Kumar and his friends are picked up by cops on grounds of interrogation for a theft they haven’t committed. Being taken to the police station they are beaten and subjected to torture and pain that a normal state of mind can never conceive. They are forced by the cops to consent to the theft. Eternally, the voiceless vagrants with no access to power center are the vulnerable beings in a society who could be swayed to the will of authorities. I leave it to your curiosity to delve into the proceedings of Chandra kumar and his acquaintences Moideen, Ravi and Nelson.
Lock Up is a read that will leave us shattered and wondering at the level to which a human mind can stoop to inflict pain and on the other hand its incredible ability in elevating its tolerance to pain physically and emotionally. One cannot help contemplating the failure of the establishment and the authorities in protecting the rights of the innocents through better interrogation techniques and the book does a tremendous job in exposing that with the details on the systematic torture inflicted on the author and his friends. The author’s ability in structuring the events as a story with the right narration makes this a piece of literature which if had been rightly translated rather than an indianized english would have ended up with far reaching recognition. Still the translator seems to have done a brilliant job in capturing the essence of the original text. The book was originally written in Tamil and translated to English. Prison literature of these kind are immense tools to understand the forbidden world of lock-ups and the darker shade of grim authorities and hapless innocents. The society is indebted to Chandrakumar and authors of his kind in shedding light on the injustice meted out to hapless beings that often go un-noticed both in literary circles and mainstream society.
The amazing sense of the author in touching upon the acts of humanity of fellow prisoners towards him and his friends when beaten days together renders a literary element to this memoir. The way literature can influence an individual into thinking about the circumstances way beyond the immediate conception of mind is evident when the author ponders over Henry Charriere’s Papillon and Bhagat singh and draws strength from them while struggling within the realm of the four walled hell. Books like Lock-up that turn first hand account into literature are essential needs of a society as it is Arts and Literature that through ages have given voice to the voiceless and reinforcing Martin Luther king’s adage “Injustice anywhere is a threat to justice everywhere”.
This entire review has been hidden because of spoilers.
சிறை இலக்கியங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று நாட்டுக்காக ஏதேனும் தியாகம் செய்து அதற்காக சிறையில் பட்ட கஷ்டங்களைக் கூறுவது. இரண்டு செய்யாத தப்புக்காக அநியாயமாக சிறைப்படுவது.
புலம்பெயர் தமிழர்களான குமார், ரவி, நெல்சன் மற்றும் மொய்தீன் வேறுவேறு வேலைகள் செய்தாலும் நண்பர்களாக இருக்கிறார்கள். நெல்சன் second show cinema பார்த்துவிட்டு வரும்போது சந்தேகப்பட்டு கைது செய்யப்படுகிறான்.பின் ஒரு கடைத்திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி நால்வரும் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஒப்புக்கொண்டார்களா இல்லையா ? பின் என்ன ஆனது என்பதே லாக்கப்.
George Floyd தொடங்கி ஜெயராஜ் பென்னிக்ஸ் என இன்றுவரை Police brutality உலகளாவிய பிரச்சினையாகத் தொடர்கிறது. ஆய்வொன்று கடந்த ஏழு ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் இதனால் 7680 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நான் என் தனிப்பட்ட முறையில் மோசமான காவலர்களை சந்தித்ததில்லை. எனக்கு விபத்து ஏற்பட்டபோது கூட உடனிருந்து ஆதுரச்சாலையில் அனுமதித்து பெற்றோர் வரும்வரை காத்திருந்து பின் விடைபெற்றனர்.
இந்நாவல் புதிதாகக் காவலில் சேர்வோர் நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. ஒப்புக்கொண்டிருந்தாலே ஒரு வாரத்துக்கு முன் வூடுதலை ஆகி இருக்கலாம் என நீதிபதியே கூறி சம்மதிக்க வைத்தது எல்லாம் நீதித்துறையின் நகைமுரண்.
இது போல் இன்றும் எங்காவது நடந்து கொண்டிருக்கலாம்.ஒரு சக மனிதனை அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் கூட அவர்களை இவ்வாறு சித்திரவதை செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.இது போன்ற நடைமுறைகள் ஒரு குற்றவாளி திருந்துவதை விட பல குற்றவாளிகள் உருவாகத்தான் வழி வகுக்கும்.
I was appalled at the fact that so many of us are unaware of the fact that atrocities of this degree coexist with all the shiny principles we hold dear such as human rights, equality, democracy etc. Just reading this book gives you chills let alone experiencing this man's plight. This voice needed to be heard loud & clear.
Chandra Kumar narrates his experience of being framed for an offense not committed. Hailing from TN, Kumar lands up in Guntur for a living. Suddenly one day, he's arrested by police. What happens in the Lock Up is for you to read.
It was good read. Book is about how poor people goes through the brutality of police who didn't even do the crime. Book even tell us the life in cell. No proper food and water is given. Police forced them to confessed. I even saw movie visaranai which was based on this book.
பொதுவாக சில பேய் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களில் எச்சரிக்கை வாசகம் போடுவார்கள் 'இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம்' என்று.
ஒரு வேளை அதை புத்தகங்களிலும் போடும் வழக்கம் இருந்திருந்தால் மு. சந்திரகுமார் இதில் நிச்சயம் போட்டிருப்பார். இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்த புத்தகத்தை/நாவலை படிக்க வேண்டாம் என்று. ஒரு வேளை இதுமாதிரி புத்தகங்கள் வெளிவருவது அரிதினும், அரிது என்பதால் அந்த வழக்கம் இல்லையென நினைக்கிறன். அவ்வாறு, எச்சரிக்க காரணம் ஆபாசமோ, பேய் மிரட்டலோ அல்ல ஒரு வித சகிக்க முடியாத அருவெறுப்பு, சோகம், வலி, வேதனை, எல்லாவற்றையும் தாண்டி எந்த மனிதனும் வெறுக்க கூடிய விஷயங்கள்.
தமிழில் சென்ற வருடம் (2016ல்) வெளிவந்து தேசிய விருதுகளை அள்ளியது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்ட திரைப்படமான 'விசாரணை' மு. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் பார்த்தவர்கள் "லாக்கப்" நாவலை பற்றி அறிவார்கள், சந்திரகுமாரை பற்றி அறிவார்கள். இதுவரை இருந்த என் கருத்தை "எந்த ஒரு உணர்வையும், உணர்ச்சியையும், திரையில் தான், கண்களால் காண வைப்பது மூலம் தான் அதிகம் மக்கள் மனதில் பதிய வைக்க முடியும்" என்பதை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டது லாக்கப் நாவல். திரையில் "விசாரணை" படம் பார்த்து உள்ளுக்குள் அனேக பேருக்கு குறிப்பாக சாமானிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு உண்டாகி இருக்கும். ஒரு வேளை சந்திரகுமார் நேரடியாக உண்மையாக, பாதிக்கப்பட்டவர் என்பதால் என்னவோ திரையை விட அதிகம் எனக்கு அச்ச உணர்வும், அருவெறுப்பும், பரிதாபமும் தந்து விட்டார். இன்னொன்ரும், காரணமாக இருக்கலாம் நாவலில் சொன்ன நிறைய விஷயங்களை, சந்திரன் அனுபவித்த கொடுமைகளை, உண்மைகளை பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் கூடி பார்க்கும் சினிமாவில் காட்டுவது கடினம். காட்டவும் முடியாது. அது ஏன் என்று இதில் அறிவீர்கள்.
மனிதனின் அடிப்படை உரிமை எது? சாப்பாடு ?, இருப்பிடம் ?, வாழும் உரிமை?. எல்லாவற்றையும் தாண்டி ஒன்று உள்ளது இயற்கை உபாதைகளை கழிப்பது. அதை இயற்கையாலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த உரிமை கூட மறுக்கபட்டால் அந்த உயிர் பூமியில் இனியும் வாழ முடியுமா? மறுக்கப்பட்டது சந்திரனுக்கும், சகாக்களுக்கும், பிற சிறைகைதிகளுக்கும். பத்துக்கு பத்து அகல அறையில் குறைந்தபட்சம் ஏழு பேர் அதிகபட்சம் இருபத்தியோரு பேர். சிறுநீர் கழிக்க வேண்டுமானால் கூட போலீசாரிடம் கேட்டால் திறந்து விடமாட்டார்கள், என்று அந்த சிறிய ஓட்டை வழியே கழித்தது, அந்த குடலை பிடுங்கும் நாற்றத்துடன் அங்கேயே தங்கியது, தவிர வியர்வை நாற்றம், குளிக்க முடியாத நாற்றம், அதையும் தாண்டி சிறைகைதி ஒருவன் நடுராத்திரியில் அடக்க முடியாமல் போன மல நாற்றம் என்ன எந்த மனிதனும் சகித்து கொள்ளவே முடியாத, சொல்லப்போனால் சகித்து கொள்ளவே கூடாதவற்றை சகித்து கொண்டு, அங்கேயே ஒரு வேளை சோறுண்டு வாழ்ந்திருகிறார்கள் என்பதை விட செத்திருகிறார்கள் என்று சொல்லலாம்.
ஒரு வேளை இது மாதிரியான தண்டனைகள் தவறு செய்தவன் அனுபவித்தால் அதை ஒருக்கால் ஏற்றுகொள்வோம். ஆனால், எந்த தவறும் அறியாதவர்கள், அந்த தவறே செய்யாதவர்கள் விசாரணை என்ற பெயரில் இந்த ரணங்களை அனுபவித்தால் ?? ஆம், நமக்கு பரிச்சயபட்ட கைதிகள் யார் என்று பார்த்தால். தூக்குதண்டனை கைதி, ஆயுள் தண்டனை கைதி, கடைசியாக தான் "விசாரணை கைதி", அதாவது வெறும் வெற்று சந்தேகத்தின் பேரில் விசாரிக்க காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பல நேரங்களில், பல வழிகளில் எந்த சம்மந்தமும் இல்லாமல் துன்பப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகப்படுபவர்கள். அந்த, விசாரணை கைதிகளின் அடிப்படை உரிமைகள் தான் அதிகம் பறிக்கப்படும். குற்றம் செய்த உண்மையான கைதிகளுக்கு கூட மூன்று வேளை சோறு, மருத்துவ உதவி, துப்பாக்கி ஏந்திய போலிஸ்களுடன் உயிர் பாதுகாப்பு நிச்சயம் (அது தப்பியதை கடந்த நாட்களில் நாம் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரு வகையில் அதுவும் விசாரணை கைதி என்ற வகைக்குள்ளே அடங்கும் என பலர் அறிவர்). உடல் சிதைக்கபடும், உள்ளம் வதைக்கப்படும், மனிதனை காக்க தான், இன்னொரு மனிதன், நீதி, கோர்ட் என்று எது இருந்தாலும் அது மாற்றப்படும்.
என்னால் புத்தகத்தின் அறுபது, அறுபத்தி இரண்டாவது பக்கங்கள் வரையிலும், நூற்றிஇருபது,நூற்றிஇருபத்தி இரண்டு பக்கத்தையும் மறக்கவே முடியாது. என்னவோ நானே அங்கே நின்று "சம்மட்டி" அடியும், இரவு முழுக்க கோழைத்தனமான வன்முறையால் என் உடல் சிதைக்கப்படுவதும் போல உணர்ந்தேன். அவ்வுளவு வலி, வேதனை, ரத்தம் மட்டும் இல்லை. "உள்ளங்கால் எலும்பு சதையின்றி மண்ணில் குத்துவது போல" என்று அவர் சொல்லும் பொழுதெல்லாம் என் உள்ளங்கால் சில்லிட்டது. மனம் கணத்தது.
இருண்ட அறைக்குள் எத்தனை குமுறல்கள், வலிகள், வேதனைகள். அதிகாரம் என்றுமே அது இருப்பவனிடமும், பணம் இருப்பவனிடமும் வேளை செய்வதே இல்லை. அது சாமானியனின் கைகளை தான் கட்டி போடுகிறது. பயம் காட்டுகிறது. மனித உரிமைகள் மீது அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் "லாக்கப்". "விசாரணை" படம் பார்த்திருந்தாலும் எந்த இடத்திலும் நிற்காத வேகமான ஓட்டம். அந்த உணர்வே இருக்காது, பல நேரங்களில் மனம் உணர்ச்சியற்று போகும்.
அடி, உதை, சத்தம், "**தா", "**மாலே" என ஆபாசம் தெறிக்கும் வார்த்தைகள், பொய், வலி அந்த சூழ்நிலையிலும் அவர்கள் அனுபவிக்கும் அற்ப சந்தோஷங்கள் இதுவெல்லாம் "லாக்கப்"பில் ஏராளம், தாராளம்.
சிறு வயதிலிருந்து காவல்துறை என்றால் ஏதோ குற்றங்களை தடுக்க வந்தவர்கள் போலும், அவர்களால் தான் இந்த உலகத்தை காப்பாற்ற முடியும் என்பது போன்றும் நினைத்திருப்போம். சினிமாவிலும் அப்படியே தான் மீண்டும் மீண்டும் காண்பிப்பார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல என்பது தான் #லாக்கப்...
chilling to know the injustice of police. the system that we live in India is scary. The marginalised people are helpless and lonely. Author has portrayed it well
'Lock-Up: Jottings of an Ordinary Man is a first person account by a Coimbatore-based auto driver M Chandrakumar who was brutally tortured and maimed inside a prison on a 'case of doubt'.
The incident happened about two decades ago when Chandrakumar, in his 20s, was working at a tea shop in a village in the Guntur region of Andhra Pradesh after running away from his home in Madras. Like many others, he lived alone and had found a few friends in other immigrant workers in the area. They were engaged in a series of manual jobs including driving rickshaw, working in hotels, and lugging sacks on their backs. They would sleep on street near a mosque but the movie-lovers that they were often dreamed of transforming into a hero someday. Even as their work wound up at ten in the night, they would stay up past midnight lost in conversations.
They were living an ordinary life until four of them were picked by the police in a burglary case.
While the author and his friends repeatedly refuted the charge of any involvement in the case, their voices went unheard and instead brought wrath on them. They were brutally tortured for 13 days before being imprisoned for around five months.
The 160-page novel on police brutality inside a cell also sheds light on how daily workers with no family or recourse to redress are taken into custody and asked to surrender. The continuous torture eventually breaks down their spirit. They find it's easier to "confess'' than be beaten to death or be left in a crippled state on railway platforms.
Chandrakumar questions the basic human rights for prisoners during interrogation. He writes about the quality of food, which was served only once a day, and the 10*10 feet cell that housed so many prisoners that it became impossible to move without touching each other. The room, at one point, had so many people that sweat could be seen flowing on the floor, he writes.
The book not only describes the atrocities faced by people like him and others marginalised, but serves to highlight their vulnerabilities, raising several questions about one's rights. The book, originally published in Tamil in 2006, was translated in English by journalist-editor Pavithra Srinivasan. There is also a movie titled Visaranai based on the novel, which won the Best Feature Film in Tamil at the 63rd National Film Awards, premiered at the 72nd Venice International Film Festival and was India's official entry for the Best Foreign Language Film at the 89th Academy Awards.