#243
Book 4 of 2024- ரகசியமாக ஒரு ரகசியம்
Author- இந்திரா சௌந்தர்ராஜன்
நான் படித்த முதல் “இந்திரா சௌந்தர்ராஜன்” புத்தகம் இது தான்.இது ஒரு மர்மக்கதை.வழக்கமாக அவர் நாவலில் கையாளப்படும் சித்தர்கள் பின்புலம் இதிலும் இருக்கிறது.இந்தக் கதை ஒரு தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது. முதல் அத்தியாயம் முதல் இறுதி வரி வரை சுவாரஸ்யம்,அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு,எதிர்பார்க்காத திருப்பங்கள் என கதை விறுவிறுப்பாய் தொடங்கி முடிகிறது.
“சித்தர்பட்டி” என்னும் மலைகிராமத்தில் சித்தேஸ்வர கோவில் இருக்கிறது.அது ஒரு அற்புதம் நிறைந்த கோவில்! தீரா நோயை தீர்க்கும் சக்தி அந்த கோவிலில் உள்ளது.நிறைய விதிகள்,கட்டமைப்புகள் நிறைந்த ஒரு இடம்,மீறினால் மரணம். நிறைய மரணமும் அங்கு நடந்திருக்கிறது.மூடநம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் ஒரு போர்! கோவிலில் இருக்கும் உண்மையான மர்மம் என்ன என்பது தான் கதை!
எளிய மொழிநடை,சுவாரஸ்யமான கதை ஓட்டம்!
My rating- ⭐️⭐️⭐️⭐️
Available on- Amazon, Flipkart, Commonfolks website