S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
சிறுவர் சிறுமியர் கதைகளில் சமீபத்திய பிரச்சினைகளையும் சேர்த்துச் சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.. புத்திமதி யாக இல்லாமல் அதை ஒரு குண்டூசி மூலம் சொன்னது அருமையாக இருந்தது..
என்னைப்பொறுத்த வரையில் எஸ்.ரா அவர்களின் ஒவ்வொரு புத்தகமும் ஒரு விடுமுறைக்காக குதூகலத்தை எப்போதும் மனதுக்கு அளிப்பவை. அவருடைய சிறார் இலக்கியங்கள் என்றால் அந்த குதூகலம் பன்மடங்காகிப் போகும். மீசையில்லாத ஆப்பிள், பறந்து திரியும் ஆடு, எலியின் பாஸ்வேர்ட் போன்ற புத்தகங்களும் அவ்வாறான ஓர் உணர்வுகளை கொடுத்துப் போகும் நூல்கள் தான். அதன் வரிசையில் அக்கடா என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அக்கடா என்ற சொல், மிகுந்த சிரமங்களுக்கு இடையில் எடுக்கும் சின்ன ஓய்வென்று பொருள் படும் படிக்கு தான் இது வரை தெரிந்திருந்தது.
ஆனால் இதற்கு அப்புறம் அக்கடா என்ற சொல்லை கேட்கும் போதெல்லாம், குறுந்தாடி வைத்து தன் நண்பர்களைக் காணத்துடிக்கும் ஒரு குண்டூசி என்பதே மனதில் நிறைந்திருக்கும். இந்த உலகத்தில் குண்டூசிகளுக்கென்று வாழ்வு இருக்குமா? குண்டூசிகளைப் போல தன்னலமற்ற பொருளின் வாழ்வுக்கென்று ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? எப்போதும் சிறார் இலக்கியங்களை, சிறார் இலக்கியங்கள் என்பதை தாண்டி ஒரு பொதுத்தளத்தில் வாசிக்க வேண்டும் என்பதே என் கருத்தாக உள்ளது. ஒரு சிறார் இலக்கியம் எந்த வயதில் வாசித்தாலும் ஒரே பொருளையும், உலகத்தையும், அதன் நடப்பையும் காட்டாமல் மாறி மாறி பலப் பொருளைக் கொண்டிருந்தால் அதுதானே அதிக முறை வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்?
அப்படியாக தான் இந்த அக்கடா புத்தகத்தையும் நான் பார்க்கிறேன். குழந்தைகளுக்கான வாசிப்பில் வேண்டுமானால் விடைகள் எளிதில் கிடைக்கலாம். ஏனென்றால் நாம்தான் நம் வாழ்க்கையை மிகப்பெரிய சிக்கலாக உருமாற்றி, உரமேற்றி வைத்திருக்கிறோமே! சரி மெல்ல அக்கடாவின் வாழ்க்கையை எட்டிப் பார்ப்போம். ஓர் அரசு போக்குவரத்து துறையின் பழைய கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள ஓர் அரசு அதிகாரியின் அறையில், அவரின் மேசை டிராயரில் வாழும் குண்டூசி தான் அக்கடா என்ற இந்த கதையில் வரும் கதை சொல்லி!
இந்த பெருந்தொற்றின் காலத்தில் எல்லோருமே அக்கடாவின் நிலையில்தானே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். அக்கடாவின் 5 நண்பர்களைப் பற்றியும், அந்த அரசாங்க சிறையின் அழுத்தம் பற்றியும், இதையெல்லாம் கடந்து எவ்வாறு அக்கடா தன்னுடைய 5 நண்பர்களையும் சந்தித்து ஒன்றிணைக்கப்போகிறது என்பதுதான் கதை. அயர்ன் ஹெட், காப்பர் ஹெட், ஸ்டீல் ஹெட், கோல்ட் ஹெட் மற்றும் டால் ஹெட் இவர்கள்தான் அக்கடாவின் தொலைந்து போன நண்பர்கள். குண்டூசிகளில் வித்தியாசம் கண்டு பிடிக்கத்தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு எங்கே தெரியும்? ஆயினும் எனக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும் என்ற தனி மனித எண்ணத்தின் (யோசித்து பார்த்தால் யாரை, எதனையெல்லாம் மிக இலகுவாக "ஒன்றே" என்று கடந்திருக்கிறோம் என்பது விளங்கும்)உச்சியில் அறைந்த படி துவங்குகிறது இந்த புத்தகம்.
அரசு இயந்திரத்தில் சிக்கிய மனிதரிடம் இருந்து எப்படி மீண்டு, எப்படி ஒவ்வொரு நண்பனையும் கண்டு பிடித்து கடைசியில் ஓவியத்தின் மூலமாக உயிர் பெற்ற கெபி என்ற குரங்கு நண்பனின் வழியாக அனைத்து நண்பர்களையும் ஒன்று சேர்க்கிறது அக்கடா என்பதுதான் மீதி புத்தகம். பூனையை குளிப்பாட்டும் எலி, நிலம் அதிர தும்மலிடும் சிவகவி, தங்க தலையனின் வீராப்பு, இரும்புத் தலையனின் மருத்துவமனை இருத்தல், காப்பர் தலையனின் வங்கி கதைகள், எலியுடன் போராட்டம், ஆமையின் நட்பு, கடல் நீச்சல் என்று மனிதர்களின் துயரங்கள், மகிழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி, மெல்லிய அன்பு, துரோகம், போராட்டம், அமைதி, நட்பு என்று நகர்கிறது இந்தப்புத்தகம்.
குண்டூசிகள் என்ற வார்த்தை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் இது எளிதில் ஒரு மனிதனின் கதையாக கூட மாறிப்போகலாம். மிக வேகமாக படித்து முடித்தாலும், இப்புத்தகத்தின் கேள்விகள் மெதுவாக மனதில் அசைந்தாடி தள்ளாடியபடி இருக்கின்றன. படித்துப் பாருங்கள்...