ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடியும் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழு வேலாவின் சுரங்கத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்து அழகு கொழிக்கும் மாலையாகி தந்துள்ளது இதற்காக ஜூ வி யை பாராட்டியே தீர வேண்டும்.
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவை என் எழுத்துகள் ...! -வேல ராம மூர்த்தி
நாவலை மொத்தமாய் படித்து முடிந்ததும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள வெகுநேரம் பிடித்தது குலாணி கிழவி அன்று இரவு முழுக்க அழுகையும் ஆங்காரமும் நின்று கொண்டு என்னை தூங்கவே விடவில்லை . வேலாவை பற்றிய சிந்தனை எனக்குள் வரும்போது அவரை உருவபடுத்த முடியாமல் திணறுவேன். குற்ற பரம்பரை நாவல் வந்தபின் வந்த பின் அடையாளம் கண்டவிட்டேன் நாவலில் வரும் வில்லாயுதம் தான் இந்த வேலா .- தோழமையுடன் எஸ்.ஏ.பெருமாள்
வேல ராம மூர்த்திக்கு இந்த பொய் முகங்கள் தெரிகிறது அவர் தங்கள் ஜனங்களுக்காக கசிகிறார் அவர்கள் அவல நிலை வறுத்த மடையா செய்கிறது . அவரது கோபம் அவரது எரிச்சல் ஆதரவு அணைப்பு ஆதரவு,அணைப்பு அவரது கதைகளாகி இருக்கின்றன. வேல ராம மூர்த்தியின் முப்பது கதைகளை நான் வாசித்து இருக்கிறேன் முதல் வாசிப்பில் உண்மை கானலும் ,இரண்டாவது முறை கலை அலகுகளும்,சிக்கன வார்த்தை பிரயோகம் முதலியனவையும் புரிபடும்.இலக்கியத்தை திட்டவட்டமான கோட்பாடுகள் வடிவமைத்து கொண்டு எழுதுகிற எழுத்தாளர் வேல ராம மூர்த்தி .- நேசமுடன் பிரபஞ்சன்.
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.
நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
I had huge expectations about this book since reputed Tamil directors Bala and Bharathiraja were fighting over this story. But I was disappointed. I felt Villayadham character was unnecessary and his Vajrany story line was irrelevant. Definitely not a bad book, not a classic either.
"ரெண்டு சாதிகளையும் மோதவிட நடக்கிற சதிக்கு, யாரும் எப்போதும் பலியாகக் கூடாது."
வேயன்னா- என்னும் கதாபாத்திரம் இந்த நாவலின் பெயரை கேட்கும் போதெல்லாம் வந்து போகும், ஆழ் மனதில் எதோ ஒரு தேடலை விதைத்து விட்டு செல்கிறது அந்த கதாபாத்திரம்.
What a writing. thought Vela Ramamoorthy acting is out of world. but his writing much much better. Narrative jumps between multiple tracks and the way it blends at the end is awesome...
இந்தியாவை ஆங்கிலேய துரைகள் ஆண்டு கொண்டிருந்த காலம் அது, அறமும் வீரமும் முகவரியாக கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்திற்க்கு எதிராக கிளர்ந்தெழும் சாதி, குல வேறுபாடு பார்கும், சூழ்ச்சி எண்ணம் கொண்ட செழிப்பான பக்கத்து ஊர் மக்கள்.
காலத்தின் உந்துதலால் கொம்பூதி ஊரில் குடியான மக்களின் வீரமும், வாழ்வு முறையும், அறமும் வியப்பூட்டும். மற்றொரு பக்கம் பெருநாழி காரர்களின் வஞ்சகமும், சூழ்ச்சியும், சுயலாபத்திற்கான செயல்களும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை உலுக்கிப் பார்க்கும்.
அன்றைய காலம் தொட்டு, இயலாதவனின் உரிமை பரிக்கப் படுதலும், பணம் படைத்தோர் செயற்கையான ஒரு பகட பரிவை உண்டாக்கி எப்போதும் தன்னை சார்ந்து வாழும் சூழ்நிலையை உருவாக்குதலும், குடிநீரில் கழிவுகளை கலத்தலும், பணபலம் கொண்டோருக்காக இயங்கும் அதிகார கூட்டமும் என இத்தனை அவலமும் இன்னமும் நடந்து கொண்டிருப்பது வேதனை.
கதையை சுவாரசியமாக நகர்த்தி, வாசிப்பவர்களை இறுக கைக்கோர்த்து இட்டுச் செல்லும் வேல ராமமூர்த்தி கடைசி பத்து பக்கத்தில் வேகத்தைக் கூட்டி போட்ட முடிச்சுகளை கலையும் அந்த விறுவிறுப்பு அவருக்கான தனிச்சிறப்பு எனலாம்.
I had a huge expectations about this book since reputed Tamil directors Bala and Bharathiraja were fighting over this story. And since I had read Kaval kottam on similar lines, this book is a huge let down.
இந்த புத்தகம் குறிப்பிட்ட இன மக்களை பற்றியும் அவர்களை அடக்க ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை பின்னணியாகவும், தலைப்பாகவும் கொண்டு அம்மக்களுக்குள்ளாகவே ஒரு ஆழமான கதையை நகற்றி செல்கிறது. கதையின் முன்னோடி வேயன்னா. வேயன்னா மற்றும் அவரின் இரு மைந்தர்கள், மகள் மற்றும் அவரின் கூட்டம் இதை கொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் படிப்பதற்கான ஆவலை தூண்டியவர்கள் இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா. இந்த கதையை படமாக்குவதில் இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையே, இந்த கதையில் என்ன அப்படி இருக்குனு படிக்க தூண்டியது.
குற்றப்பரம்பரை சட்டம் என்பது தென் தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களில் அமுல்படுத்ததிய சட்டமாகும். இந்த கதையின் களம் இராமநாதபுரம் அந்த சட்டத்தின் கீழிருந்த பகுதியாகும். வேயன்னாவும் அவர் கூட்டமும் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பித்து, பெரு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்பு தாழ்த்தப்பட்டு இனத்தை சேர்ந்த ஒருவரால் காப்பாற்றப்பட்டு பெருநாழியில் குடியமர்த்துவதில் ஆரம்பிக்கும் கதை, ஒவ்வொரு பக்கமும் விறு விறுவென நகரும். களவையே தொழிலாய் கொண்ட கூட்டத்தின் தலைவனாய் வேயன்னா. களவை அடியோடு அழிக்க நினைக்கும் ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு உதவும் சில ஊர்களும், மனிதர்களும் மற்றும் இவர்களுக்குள்ளான கதையை கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். இடையில் வஜ்ராயினி மற்றும் நாகமுனி என இரண்டு பாத்திரத்தை கொண்டு நகரும் கதையின் ஒரு பகுதி, கதையின் பின்னடைவு என்று தான் சொல்லவேண்டும். காரணம் அவர்கள் இருவரும் வாழும் இடம் மற்றும் வாழ்வியல் முறைகள் அரசர்கள் காலத்து முனிவர்கள் கதை போல் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கதை ஆரம்பிக்கும் காலமோ பிரிட்டிஷ் காலம். அதை தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களும் கண்டிப்பாக நினைவில் நிற்பவையே.
புத்தகம் படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, தொடர்ச்சியாக தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்து கிட்ட தட்ட 7 நாட்களில் படித்துவிட்டேன். படித்து முடிக்கும் வரை, படிக்கும் ஒவ்வொருவம் இந்த கதை களத்தின் ஏதோ ஓர் மூலையில் நின்றுகொண்டு கதை நிகழ்வை பார்ப்பது போல உணர்வீர்கள்.
ஒரு திரைப்படம் பார்த்து முடித்த உணர்வு. வெவ்வேறு கதைக்களங்கள் மற்றும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் இறுதியில் ஒரு புள்ளயில் வந்து ஒன்றிணையும். இந்த புத்தகத்தை படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன இருந்தும் இன்னும் கொம்பூதி மக்களின் நினைவுகளில் இருந்து வெளிவரமுடியவில்லை.
கொம்பூதி மக்களிடம் சூழ்ச்சி இல்லை, சூது இல்லை. இவர்கள் சக மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை. தீண்டாமையை அறவே இவர்கள் போற்றுவதில்லை. அப்படிப்பட்ட மக்களுக்கும், இவர்களிடம் அன்னோன்னியமாய் பழகி வந்த வேம்பச்சேரி மக்களுக்கும் இடையே சாதி கலவரத்தை உண்டு பண்ணி அதில் குளிர் காய்ந்தது யாரு? அதுதான் கதை.
கதையில் வரும் வேயன்னா கொம்பூதியை மட்டும் அல்ல கதையையும் இறுதி வரை தாங்கி பிடிக்கிறார். தீண்டாமையை பற்றி வேயன்னா கூறும் அனைத்தும் வார்த்தைகளும் அழுத்தமானவை மற்றும் ஆழமானவை.
திருட்டை குலத் தொழிலாகக் கொண்ட கொம்பூதி கிராமம், வேயன்னா என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தன் கிராமத்ததின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்த பெரும் பச்செரி கிராமத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து மீட்க கோம்பூதி கிராமம் உதவ செய்யும் அதிரடியால் ஆதிக்க பெருநாழி கிராமம் அவதி படுகிறது.
கொம்பூதி கிராமத்தை கட்டுபடுத்த பெருநாழி கிராமத்தில் கச்சேரி (police station) அமைத்து ரேகை சட்டத்தை அமல் படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சி செய்கிறது. இரண்டு அதிகாரிகள் எடுத்த முயற்சி கொடூரமான தோல்வியாக மாற. மூன்றாவதாக வேய்யன்னாவின் தொலைந்த மகன் சேது கச்சேரி பொறுப்பை ஏற்று கட்டு படுத்த முயற்சிக்கிறார்.
சேது வெய்யனாவிடம் களவு செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கி களவை தடுக்கிறார்.
இதனால் பாதிக்க பட்ட பெருநாழி கிராமத்தை சேர்ந்த பச்சை முத்து சதி செய்து பெரும்பூதி கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி அதன் விளைவால் சேதுவின் தலைமையில் கிராம மக்களை கொன்று குவிக்கி றது பிரிட்டிஷ் அரசாங்கம். வேயன்னா செத்து மடிவதுடன் கதை முடிகிறது.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக போகும் கதையில் சேதுவின் வருகைக்கு பிறகு சிறிது தொய்வு ஏற்படுகிறது. மற்றபடி விறுவிறுப்பான கதை.
கதையில் வரும் கிழட்டு போலீஸ் கொம்பூதிக்கு பயந்து இருப்பதும், மறுபுறம் சதிக்கு பயந்துபயந்து உதவி செய்வதும் சுவாரஸ்ய கதாப்பாத்திரம்.
வேய்யன்னா மற்றும் கூழாணிக் கெழவி கதாப்பாத்திரம் வரும் இடம் எல்லாம் மெய்சிலிர்த்து போவது உறுதி.
நான் படித்த சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெறும் புத்தகம் இந்த குற்றப் பரம்பரை.
Marvellous!! Such a lovely and lively read am speechless now, where to start how to say this is a must read book to a reader because people ask me why to read this?! Ugh!! Hmm. I don’t have any answers to them but I had my own experience. Hm yes! let me tell you this there are characters in every fiction books that stay in our heart. குலாணி கிழவி & வேயன்னா both of them beat those other characters and standing in the top most loved person in fiction on my heart, specially “வேயன்னா” he is more than Atticus finch to me. So far in historical fiction khaled hosseini , khushwant singh and now on my list Vela Ramamoorthy is also Top listed favourite author of all time. “Tamilan perumaiya tamila sonatha Alazghu “
குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார், வேல ராமமூர்த்தி.
இந்த புத்தகம் கொம்பூதி, பெரும்பச்சேரி, பெருநாழி என்ற மூன்று ஊரையும் கதைக்களமாக கொண்டுள்ளது.
கொம்பூதி - இந்த ஊரினை சார்ந்த மக்கள் களவு ஒன்றையே தொழிலாக கொண்டவர்கள் அதை அவர்கள் தவறு என்று உணர்ந்ததே இல்லை , அதுதான் அவர்களை பொறுத்தவரை பிற அனைத்து தொழில்களை விட நேர்மையானது திருட்டிற்காக கொலையும் செய்வர் . ஆனால் தொழிலை தான்டி யாரையும் ஏமாற்றவோ , தொல்லை கொடுக்கவோ, கொலையோ செய்யாத நல்லவர்கள், திருடும் பொருளின் மதிப்பு கூட தெரியாது அதை தெரிந்துக்கொள்ளவும் விரும்பியது இல்லை, அவர்களை பொறுத்தமட்டில் களவு என்பது அவர்களின் உணவிற்கான தொழில் , விலைமதிப்பற்ற வைரத்தை திருடினாலும் ஒரு மூட்டை அரிசிக்கு கொடுத்து விடுவார்கள்.
பெருநாழி - இது மேல்சாதியினர் மட்டும் வாழும் ஊர்.
பெரும்பச்சேரி - இது கீழ்சாதியினர் மட்டும் வசிக்கும் ஊர் . பெருநாழி ஆட்களின் வீட்டு எடுபடி வேலைகளுக்கும் , விவசாய வேலைகளுக்கும் செல்வதே இவர்களின் பிழைப்பிற்கான வழி.
பெருநாழி மக்களின் தீண்டாமை பழக்கத்தின் விளைவாய் பெரும்பச்சேரிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு கொம்பூதி மக்களும் பெரும்பச்சேரி மக்களுக்கு ஆதரவாக நிற்க இவர்களை அடக்க பெருநாழி மக்கள் வெள்ளைக்கார போலிசை துணைக்கு அழைக்க அதன் பின் நடப்பவற்றை விறுவிறுப்பாக சில கிளை கதைகளோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் நிறைந்த இந்த புத்தகம் , படிப்பவர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் தரும்.
first of all its not a classic.. novel doesn't portray d culture very deeply it juz gives some vague description, I felt like juz a normal story spinning around often I felt irritated with tat vajrayini character. If u have read KAVAL KOTTAM b4 hand I would not recommend u KUTRAH PARAMBARAI. NOT A GREAT NOVEL..
ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியிருந்த கிரமங்களான பெரும்பச்சேரி, பெருநாழி, கொம்பூதி கிராமங்களைக் கதைக்களமாக புனையப்பட்ட நாவல் குற்றப்பரம்பரை... அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.
அம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் என இரத்தமும் சதையுமாக கதை நகர்கிறது...
கதையில் வரும் வஜ்ராயினி, நாதமுனி, ஹசார் தினார் கதாப்பாத்திரங்கள் மாய எதார்த்ததை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டிருக்கிறது... இந்த கட்சிகள் வரும் இடத்தில் எல்லாம் கதையில் தொய்வு மேலிடுகிறது...
வேயன்னா கதாப்பாத்திரம் விளக்கப்பட்ட விதமும், அதன் கம்பீரமும் அதன் மிடுக்கும் வாசிப்பர் மனதில் பதிந்துவிடும்! கூழானிக்கிழவி, சேது, வைய்யத்துரை என எல்லா கதைமாந்தரும் நம் அகக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார் வேல ராமமூர்த்தி!
பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை கொம்பூதியின் மேல அமல் படுத்துவதற்காக வெள்ளை அரசு மேற் கொள்ளும் கொலைவெறி ஆட்டத்தை வாசிக்கையில் மனசாட்சியுள்ள எவருக்கும் பதைபதைக்க செய்யும்...
நாவலின் கதாநாயகன் வேயன்னாவின் சுவடுகள் இன்னும் கொஞ்ச நாள் மனதிற்குள் நிலைத்திருக்கும் அந்தளவு அழுத்தமான கதாப்பாத்திரம்... அன்பையும், வீரத்தையும், வெள்ளந்தித்தனம் நிறைய மனிதர்களையும் காட்டிய இந்த நாவல் சாதியப் பிரிவினையை தூண்டி குளிர்காயும் சமூகத்தையும் இந்த நாவல் தோலுரித்து காட்டியுள்ளது!
புத்தகம் – குற்றப்பரம்பரை ஆசிரியர் - வேல ராமமூர்த்தி பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் - 448 விலை - ₹400
நம் நாட்டில் நிகழும் சாதிக்கொடுமைகள் பற்றி ஏதேனும் ஒரு செய்தி தினந்தோரும் நம் காதுகளில் ரீங்காரமிடத்தான் செய்கிறது. அத்தகைய நிகழ்வு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னும் நடந்ததாக இப்புத்தகம் நமக்கு கூறுகையில் நம் சமூதாயத்தின் வளர்ச்சியை குலைக்க பெரிய முயற்சி எதுவும் இன்றி, சாதிகளே அதை கட்சிதமாக செய்து வருகிறது என்பதை உணர்ந்தேன்.
களவு தொழில் புரியும் கொம்பூதி மக்கள், கீழ்சாதி என்று ஒதுக்கப்பட்ட பெரும்பச்சேரி மக்கள் மற்றும் மேல்சாதி என்று கூறி��்கொண்டு கொடுமைகள் இழைக்கும் பெருநாழி மக்கள் என்று இம்மூன்று சமூகத்தைச் சுற்றியே நகர்கிறது கதை. கொம்பூதி மக்களின் தலைவராக கம்பீரமாக வலம் வருகிறார் வேயன்னா. அவர் தம் மக்களை வழி நடத்துவதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதும் நம்மை நெகிழச்செய்கிறது. ஒரு கட்டத்தில் பெரும்பச்சேரி மக்களுக்கு ஆதரவாக களமிறங்கையில், பெருநாழியின் பகையைச் சம்பாதிக்கிறார் வேயன்னா. அவரை எதிர் கொள்வதற்காக பெருநாழி மக்கள் காவல் நிலையம் ஒன்றை அவ்வூரில் வர ஏற்பாடு செய்கின்றனர். எத்தனை ஆங்கிலேயர்கள் அதிகாரிகளாக அங்கு பொறுப்பேற்றாலும், வேயன்னாவையும் அவர் மக்களையும் அசைக்க இயலாத நிலையில், சேது காவல் அதிகாரியாக நியமிக்கப் படுகிறான். யார் இந்த சேது? இறுதியில் வேயன்னா வீழ்ந்தாரா என்பது தான் கதை.
உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைக்கொண்டு, சாதியை வைத்துத்தான் இங்கு அரசியல் நடக்கிறது என்று எளிமையாக கூறியிருக்கிறார் எழுத்தாளர். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, சந்தர்ப்பவாதிகளுக்கு ஆதாயம் தரும் சாதியை இன்னும் இங்கு உழவவிட்டு, 75 ஆண்டுகளாக இது சுதந்திர இந்தியா என்று கூறிவது எத்தகைய அறிவீனம்!
அனைவரும் இது போன்ற படைப்புகளை வாசித்து சாதி மற்றும் அரசியல் பற்றிய புரிதல் அடைய வேண்டும்!
இயக்குனர்கள் பாரதிராஜாவும் , பாலாவும் குற்றப் பரம்பரை என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க சில வருடங்கள் முன்பு மோதி கொண்டார்கள். அன்றில் இருந்து இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வம். இப்பொழுதுதான் படிக்க முடிந்தது
இந்த நாவலை இரண்டு கோணங்களில் பார்க்கலாம், ஒன்று நான் இப்படித்தான் இருப்பேன், யாரு சொல்லுக்கும் மதிப்பில்லை என்று ஒரு கூட்டம்(கொம்பூதி), எப்படியாவது உயிர் வாழனும் ஒரு கூட்டம்(பெரும்பச்சேரி), நான் சொல்லுறத கேட்டு தான் அனைவரும் வாழனும் ஒரு கூட்டம்(பெருநாழி). இவர்கள் இடையில் உள்ள பிரிவை பயன்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம்(ஆங்கிலேயர்கள்). இந்த கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் குற்றப்பரம்பரை.
இரண்டாவது, வைரம் தேடி அலையும் நாகமுனி யின் கதை எதற்காக இந்த நாவலில் முக்கிய கதையுடன் இணைக்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். இதுதான் என்னுடைய விளக்கம், இந்த சிறுகதை முக்கிய கதையின், கருப்பொருள் ளை உவமை படுத்தி எழுதப்பட்டது. ஒரு பேராசை பிடித்தவன்(நாகமுணி,பச்சமுத்து). ஒரு வெள்ளந்தி(வஜிராணி,வேயன்னா), இந்த வெள்ளந்தி க்கு வேறு ஒரு மனிதனிடம் (சேது,வில்லயுதம்) அளவுகடந்த பாசம். பேராசை பிடித்தவன் வெள்ளந்தி யை அழிகிறான். இந்த வெள்ளந்திக்கு உயிர் கொடுத்த(ஹசார் தினார், வையமுத்து) மனிதன் கையால் பேராசை பிடித்தவன் (நாகமுணி,பச்சமுத்து) அழிக்கிறான். இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரும் குற்றப்பரம்பரை செர்ந்தவர்கள்
இந்த கதை திரைப்படம் பாணியில் எழுதப்பட்ட நாவல். காதபாத்திரங்கள் அறிமுகம் ஆகும் வரை படிக்க சற்று சிரமமாக இருந்தது.
Got different perspectives on casteism and the type of work they do and how its influencing their life to a greater extent. கொம்பூதி என்பது ஊர் அல்ல அது ஒரு உணர்வு. Great narrative by Vela Ramamoorthy.
Fictional story about the community and doing robbery for living without even knowing that's crime but their humanity, their thought about casteism and truthfulness makes us admire them and respect them.
Especially love with the characters - police officer Victor, Veiyanna. One of the best tamil books.
An excellent story enriched with beautiful plots and characters. My only fear is that the book will be done a massive amount of injustice if tried to convert into a movie either by bala or barathiraja.
பொன்னியின் செல்வனுக்கு நிகரான ஒரு நாவல், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்கள், அனைத்தும் இறுதியில் ஒருங்கிணையும், சாதிய ஒடுக்குமுறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும் மிக ஆழமான ஒரு கதை என்பதால் வழமையான பல்லவி இல்லாமல் சுவாரஸ்யமாக நகருகிறது. வேயன்னா என்ற தலைவனின் பண்புகள் எங்கள் தலைவனை ஞாபகமூட்டுகிறது.
பொதுவாக நான் ஒரு புத்தகத்தை படித்து முடித்த பிறகு தான் அடுத்த புத்தகத்தை படிப்பது வழக்கம் ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த புத்தகத்தை படிக்க தொடங்கிய சில மணி துளிகளில் அதன் சாராம்சத்தை என்னால் உணர முடிந்தது அந்த உணர்வின் ஊடாக சில காலம் பயணப்பட வேண்டும் என்று என் மனம் கோரியது எனவே இரண்டு மாதத்திற்கு மேலாக வார பத்திரிகையில் வரும் தொடர்கதை போல பகுதி பகுதியாக இந்த குற்றபரம்பரையை படித்தேன். படித்தேன் என்பதை விட அந்த மக்களோடு நானும் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். களவை மட்டுமே தொழிலாக புரிந்த மக்களின் வீரம், பாசம், தர்மம், தியாகம் போன்ற நல்ல விஷயங்கள் பல இருக்கையிலே களவு செய்பவர்கள் என்ற ஒன்றை வைத்து அவர்கள் புறக்கணிக்க பட்டதை ரத்தமும் சதையுமாக கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டார் ஆசிரியர். எரியும் குடிசைக்குள் ஓடி சென்று நிறைமாத கர்ப்பிணியை வேயன்னா காப்பாற்றியது, காளத்தியை கதவு இடுக்கில் வைத்து வயிற்றை கிழித்து குழந்தையை தூக்கி எரிந்து கதவு இடுக்கில் வைத்தே அவளை கொன்றது, பெரும்பச்சேரியை சேர்ந்த ராக்கு பெருநாழி கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக அவளது கணவன் துருவனை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்த துட்டை வெறும் கைகளால் எடுக்க வைத்தது, பெரும்பச்சேரி சனமெல்லாம் நாளை முதல் பெருநாழி கிணற்றில் தான் தண்ணீர் எடுப்பார்கள் என்று சொல்லிவிட்டு சென்ற வேயன்னா மறுநாள் பெரும்பச்சேரி மக்களோடு கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தபோது கிணற்று தண்ணீரில் மலம் கலந்திருப்பதை கண்டு நிலைகுலைந்து, இரவு முழுவதும் கச்சேரியில் வைத்து காவலர்கள் கொம்பூதி மக்களை தாக்கிய போதும் பொறுமையாய் இருந்து காலை விடிந்ததும் காவலர்களை ஒன்று சேரவிட்டு கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொன்றது, களவு என்பது பாவம் அல்ல அது ஒரு தொழில் என்று கால காலமாக செய்து வந்த மக்களை வேயன்னாவின் மகனான காவல் அதிகாரி சேது களவு செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கியதும் அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு கடைசி வரை கொம்பூதி மக்கள் சத்தியத்தை காப்பற்றியது, சேதுவின் கையாலே வேயன்னாவை சுட்டது போன்ற பல சம்பவங்களை படிக்கும் போது நம்மை அறியாமலே ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. நாம் வாழ்ந்த அந்த 19 ஆம் நூற்றாண்டில் இப்படி ஓர் மக்கள் வாழ்ந்தார்கள் குற்றப்பரம்பரை என்று ஓர் சட்டம் இருந்தது என்பது தெரியாமல் வாழும் இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் இந்த நூல��� உணர்வு பூர்வமாக பதில் அளித்திருக்கிறது. அருமையான படைப்பை தந்தமைக்கு ஆசிரியர்க்கு மிக்க நன்றி.
The criminal tribe. The kind of crimes committed., that's not much important. What matters is, the temperament of people those days, and the remnants of it that we see in this contemporary society. At least, that's what I understood very well after completing the book.
Veyanna, the clan leader arrives to Komboodhi, a village which continues to haunt people around because of the nature of its people's occupation. Robbing wealth from the rich, killing anyone who opposes or comes in their way, living a life only to rob and have food and not hoarding up the riches shows the innocence and ignorance go hand in hand pitifully. The caste discrimination against the working clan by the business clan, and the way they deceive to set a trap, misusing the trust to make something happen and going to a disgusting extent just to prevent Veyanna and his clan from disowning robbery as their occupation, brought indignation to me, as exactly planned by the Author.
The book revolves around three villages mainly, and the British police. The way of describing the villages, the animals and birds, the river and its shore, the huts and their thatches, the weapons, toddy and meat, their clan deity and the relation to their clan occupation helps us to picturize the old Madras presidency back in 20th century. The kallars or the thief clan stays etched in mind even after putting down the book and letting some tears to escape. The weapons and equipment to steal, the use of a lapwing bird(aalkaati kuruvi) to identify the presence of men, and the valor of the men to avenge an injustice guarantee goosebumps. The women those days, the way they smack a police upside down, surprised me and even gave me temporary crushes on them.
Overall, a good read. Worth the time spent and a saddening tour back a century.
வேல.ராமமூர்த்தி அவர்கள் திரை படங்களில் யதார்தம் மீறாமல் அட்டகாசமாக பொருந்துபவர். வட்டார கிராமங்களில் பார்த்த வன்மம், பாசம் நிறைந்த மனிதர்களை அப்படியே திரையில் பிரதிபலிப்பவர். யார் இவர்? என்று இவரைப் பற்றி தெரிந்துகொள்ள தேடியபோது இவர் ஒரு எழுத்தாளர் என்று தெரிந்தது.
கதை களம் : --------------- கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமநாடு மாவட்ட கள்ளர்களின் ரத்த பூமி வாழ்க்கையை சொல்லும் கதை. கொம்பூதி, பெரும்பச்சேரி, பெருநாழி கிராமங்களில் தங்கி அந்த மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் தன் அற்புதமான கதை சொல்லும் திறனால் அந்த மனிதர்களை நம் முன்பே உலவ விட்டிருக்கார் வேல.ராமமூர்த்தி. கள்ளர்களின் வாழ்க்கையையும், குற்றப் பரம்பரை சட்டத்தையும் இக்கதை மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
கொம்பூதி என்னும் கிராமத்தில் வேயண்ணா என்கிற வேலுச்சாமி தலைமையில் வாழ்ந்த மனிதர்களின் கருணை, தலைமைப் பண்பு நிறைந்த ஆளுமை, பிறப்பிலேயே வீரமும், பாசமும், பேரன்பம் பெருங்கோபமும் விதைபட்ட மனிதர்கள் சாதி எனும் சுருக்கு கயிரால் சில பேராசை மனிதர்களால் வஞ்சிக்கபட்ட கதை இது.
வேயண்ணாவின் தாக்கம் என் மனதில் இன்னும் சில நாட்கள் அடித்துக் கொண்டேயிருக்கும்... !!!
திரைப்படம் ஆக்கப்பட்டால் வேயண்ணாவின் பாத்திரதிற்கு திரு. ராஜ்கிரண் அவர்கள் கச்சிதமாக பொருந்துவார்.
This is a violent and tragic story centered around a community of South Tamilnadu that has theft as its occupation during the British rule. The book entertains, to an extent; and causes goosebumps at many instances. But incidentally, it is biased and tries to paint an 'Innocent' colour on the people it was written about.
The characters were deep rooted, or that's what they seemed to be. Because the ending of the story was so abrupt and sudden. Felt like watching 'Game of Thrones' again - starts off with a bang, gathers a high tempo, intricate story seems to be coming together, but in the end every detail will be tossed away as a joke.
I can't even understand the reason behind the story of a mystic that is written along with the main story. There are several unsolved ends in the book. Of course a decent book, but cannot be termed anyway near Classics.
While I picked up this book in the library and browsed through the pages, I read a few sections and found that the style of writing was pretty new and I was feeling whether I may like reading the book. I still decided to give it a chance and started reading. After a couple of chapters, the style just got into me, the reader, and I was comfortable reading the book. The style, literally made the book more interesting.
The story is set during the british era in India. As in any story, there are a few main characters and a lot of supporting characters. What makes the story interesting is the way the plot unfolds.
Overall, it is a great read, however, I found the end a bit cinematic. It is a book I would not want to miss. I'm glad I picked it up from the library.
நூறாண்டுகளுக்கு முந்தய கால கட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் சாதி குறித்தான மனப்போக்கை(வெறியை) தன்னுடைய சிறப்பான எழுத்துக்களால் ஆசிரியர் வாசகர்களுக்கு கடத்தியுள்ளார்..... படிக்க ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாமல் பக்கங்கள் புரல்கின்றன...... ஆனாலும் நாகமுனி, வஜ்ராயினி, ஹசார் தினார் வரும் சில இடங்கள், கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.....
ஊர் விட்டு ஊர் சென்று தங்களுக்கென்று களவைத் தொழிலாக்கி, அந்தத் தொழிலிலும் கண்ணியம் காத்து, கொடுத்த வாக்கை மீறாமல் உயிரை இழந்த வேயன்னா மனத்திற்குள் கனக்கிறார்.
first of all hats off to vela ramamorrthy for the amazing story and its characterizations.veyanna character actually lived vigorously in my mind when im reading the novel. other characters like koozani kelavi vaiyathurai,thuruvan annamayil,angamma,thiruvettai,irulaayi,villayudham,kiraichatti,ekambaram,visakuttai,etc etc each and every characters is sculpted by vela ramamoorthy ayya. the story of kaalathi which virgin girls should not hear that is actually made me think about how foolish people lived that day.the story is set in 1900s and it also travels to 1920s but each and evry detail is amazing.the kutrap parambarai law which is also known as regai sattam which was brought up by british and what are the consequences and how it even affects people who already left their dacoity job is the one line of the story. sethu charecter can be with more emotions. why i give 4 star is because of the negative ending in both the stories(naagamuni vajrayini and komboothi village).atleast in anyone of the stories vela ayya must have written an happy ending but i dont know why he gave a sad ending in both the sub genres of the story. The detailing about how the kallar caste people lived and how they treat people without caste discrimination,how they eat sleep,why they become thieves,how they execute a theft using a aatkaati bird,how they get angry and how their tame bulls in jallikattu etc etc were brilliantly written by vela ayya. i dont know whether these thins are true but some of them were found out to be true.its a must ready book for those who speak about caste and religions. one thing to say is that the pachaimuthu character is brilliant written especially whenever the character comes in we get a disgusting feeling.