Jump to ratings and reviews
Rate this book

பள்ளம் [Pallam]

Rate this book
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்தது. ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

64 pages, Paperback

First published December 1, 1985

Loading...
Loading...

About the author

Sundara Ramaswamy

61 books221 followers
Sundara Ramaswamy (1931–2005), fondly known as "Su.Ra" in literary circles, was one of the exponents of Tamil modern literature. He edited and published a literary magazine called Kalachuvadu. He wrote poetry under the penname "Pasuvayya". His novels are Oru Puliya Marathin Kathai (The Story of a Tamarind Tree), J.J Silakuripukal (J.J: Some Jottings, tr, A.R Venkadachalapathy, Katha, 2004) and Kuzhanthaikal, Penkal, Aankal (Children, Women, Men).
Ramaswamy was born on 30 May 1931, in Thazhuviya MahadevarKovil,[1] a village in Nagercoil). At 20, he began his literary career, translating Thakazhi Sivasankara Pillai's Malayalam novel, Thottiyude Makan into Tamil and writing his first short story, "Muthalum Mudivum", which he published in Pudimaipithan Ninaivu Malar.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (15%)
4 stars
5 (25%)
3 stars
10 (50%)
2 stars
1 (5%)
1 star
1 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Marudhamuthu.
68 reviews14 followers
October 30, 2023
பள்ளம், குரங்குகள் இரண்டும் மிக அருமையான சிறுகதைகள்
Profile Image for Yadhu Nandhan.
264 reviews
February 21, 2022
இதுவே சுந்தர ராமசாமி அவர்களின் சிறுகதைகளை படித்த எனக்கு வாய்த்த முதல் அனுபவம் ஆகும்.

ரத்னாபாயின் ஆங்கிலம் எனும் கதை என்னை மிகவும் கவர்ந்தது அது மனித மனதின் ஒரு தவிர்க்க முடியாத இயல்பான வேண்டாத உணர்வினை அழகாக பதிவு செய்கிறது.

ஓவியம் எனும் கதை தள்ளாத வயதில் கலையின் மீது ஒரு மனிதன் வைத்திருக்கும் காதலை அழகாக தூரிகையால் வண்ணமிட்டு காட்டுகிறது.

ஆத்மாராம் சோயித்ராம் எனும் கதை கலை உணர்வும் திறமையும் இருந்தும் ஒரு கலைஞன் ஒரு கவிஞன் படும்பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக விவரிக்கிறது

ஆறு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் மேற்சொன்ன மூன்று கதைகள் என்னை வெகுவாக கவர்ந்தன.
Profile Image for By Dee.
8 reviews
May 6, 2026
இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆழத்தை நான் முழுவதுமாக உணர்ந்தேனா என்பது தெரியவில்லை. சில கதைகள் முடிந்தபோது, “ஏன் இப்படிச் முடிந்தது?” என்ற கேள்விகள் மட்டும் மனதில் இருந்தது.

ஆனால் ஒவ்வொரு கதையிலும், சூழ்நிலைகளால் கட்டுப்பட்ட வாழ்க்கையிலேயே இருந்தாலும், மனம் இழுக்கும் ஏதோ ஒரு ஆசையை நோக்கி வாழும் மனிதர்களை பார்த்தேன்.

அதை வாசித்தபோது நினைவுக்கு வந்தது —
Thirukkural குறள்:
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”

ஏன் அந்த குறள் நினைவுக்கு வந்தது தெரியவில்லை…
ஆனால் இந்த கதைகளின் உணர்வோடு அது நன்றாக பொருந்தியது. ✨
Profile Image for Dinesh.
128 reviews12 followers
November 4, 2021
3.5/5

ஆறு சிறுகதைகளின் தொகுப்பு.

குரங்குகள் சிறுகதை நிலைகுலைய செய்தது.

பள்ளம், ஆத்மாராம் சோயித்ராம், ரத்னாபாயின் ஆங்கிலம் ஆகிய சிறுகதைகள் அருமையாக இருந்தன.
Profile Image for ishhreads.
256 reviews16 followers
February 16, 2026
பள்ளம்-சந்தர் ராமசுவாமி

நான் எப்போதும் சிறுகதைகளை விரும்பி படிப்பேன். இது எனது விருப்பமான வகையாகும். அது குறுகியதாக இருந்தாலும் சரி, நீளமாக இருந்தாலும் சரி. கடந்த மாதம் நான் எந்த தமிழ் புத்தகங்களையும் படிக்கவில்லை. எனவே நான் ஒரு குறுகிய நாவலைத் தேர்ந்தெடுத்தேன். இதில் 6 சிறுகதைகள் உள்ளன.

சுந்தர ராமசாமியின் எழுத்தில் எனது முதல் புத்தகம். பெரும்பாலான கதைகள் மிகவும் தனித்துவமானவை என்றாலும், படிக்க மிகவும் நன்றாக இருந்தது. வரைதல் கலையை இன்னும் நேசிக்கும் ஒரு மனிதரைப் பற்றிய ஒரு கதையை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன். மற்றொன்று குரங்குகளுக்கு இடையிலான ஒப்பீட்டின் போலி கற்பனை. தோல்வியடைந்த திருமணத்தைப் பற்றி அவர் எழுதிய முதல் கதை 1970 களில் இருந்தது.

மொத்தத்தில், ஒரு நல்ல வாசிப்பு, நான் உணர்ந்தேன். நீங்கள் reading slump-இல் இருந்தால் நிச்சயமாக இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
Displaying 1 - 5 of 5 reviews