குழந்தைகளை வளர்ப்பதுவும் ஒரு கலையே.பொறுமையும் விவரமும் சேர்ந்து சிறுவயது முதலே கற்பித்தல் பிற்கால ஆபத்துக்களை அவர்கள் எதிர்நோக்க துணை புரியும்.
சில வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்த வெற்றிவேந்தன்-அன்பரசி தம்பதிகளுக்குக் கடவுள் அருளால் ட்வின்ஸ் பிறக்கிறது.அவர்கள் வெண்ணிலா மற்றும் ஆதவன்.
பிறந்த குட்டிகள் தம்பதிகளின் நேரத்தையும் வாழ்க்கையையும் நிறைத்து விடுகிறார்கள்.
இவர்கள் இருக்கும் அதே இடத்தில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஆகாஷ் இவர்களின் செல்ல பிள்ளையாக இருக்கிறான். அவர்களின் டிரைவரே பணத்திற்காகக் கடத்த எப்படியோ கண்டுபிடித்தாலும் அது ஒரு பயத்தை அன்பரசியின் மனதில் தோற்றுவிக்கிறது.
பாசத்தை அதிகமாகக் காட்டி குழந்தைகளைக் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் அன்பரசியை வெற்றிவேந்தன் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுகிறான்.
குழந்தைகள் வளர்ந்து மூன்று வயதில் பள்ளிக்கும் போகும் போது அவர்கள் டூர் சென்ற பஸ் டிரைவராலே கடத்தப்பட அந்த நேரத்திலும் வெண்ணிலா விவரமாக இருந்து இருக்கும் இடத்தைப் பெற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறாள்,கடத்தியவர்களைப் பிடிக்க போலீஸிடம் அவர்களின் அடையாளத்தையும் சொல்லிகிறாள்.
அடிப்படையான சில விஷயங்களைக் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் என்று சொல்லும் கதை.
குழந்தைகள் மொழி நிறைய உள்ளதால் கொஞ்சூண்டு பொறுமை வேண்டும் படிக்கும் போது.