Jump to ratings and reviews
Rate this book

பாரதியின் வேடிக்கைக் கதைகள்

Rate this book

173 pages, Paperback

Published July 1, 2010

5 people are currently reading
85 people want to read

About the author

Subramaniya Bharathiyar

46 books217 followers
Chinnaswami Subramania Bharathi was an Indian writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu, India. Popularly known as "Mahakavi Bharathiyar", he is a pioneer of modern Tamil poetry and is considered one among the greatest of Tamil literary figures of all time. His numerous works were fiery songs kindling patriotism and nationalism during Indian Independence movement.

Born in Ettayapuram of the then Tirunelveli district (presently Tuticorin district) in 1882, Subramania Bharati had his early education in Tirunelveli and Benares and worked as a journalist with many newspapers, notable among them being the Swadesamitran and India. Bharathi was also an active member of the Indian National Congress. In 1908, an arrest warrant was issued against Bharathi by the government of British India for his revolutionary activities forcing him to flee to Pondicherry where he lived until 1918.

Bharathi's works were on varied themes covering religious, political and social aspects. Songs penned by Bharathi are widely used in Tamil films and Carnatic Music concerts.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (68%)
4 stars
5 (22%)
3 stars
2 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Anitha  Soundararajan.
63 reviews
February 26, 2017
தலையில் முண்டாசு கட்டி, கண்களில் தீட்சண்யமான பார்வையோடு "ரௌத்திரம் பழகு!", "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!" என்று கர்ஜனை செய்யும் மகாகவியாகத் தான் என் மனதில் பாரதி இதுவரை பதிந்திருந்தார். 'பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்' என்ற தலைப்பை பார்த்தவுடன் இந்த புத்தகத்தை வாங்கிவிட்டேன். இதுவரை பல்வேறு பரிமாணங்களில் ஒளி வீசிய நம் தலைவர், எப்படி வேடிக்கை காட்டுகிறார் என்று பார்த்தே ஆகவேண்டும் என்ற ஒரு விதமான எதிர்பார்ப்பும் ஆவலோடுமே இதை படிக்கத் தொடங்கினேன்.

இந்தக் கதைகளின் மூலமாகத் தான் வாழ்ந்த நாட்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். அப்போது இருந்த மூட நம்பிக்கைகள், சாத்திரங்களைச் சுட்டிக் காட்டி அதே சமயம் வேடிக்கையும் காட்டுகிறார். தனது சாவு பற்றி யோசித்து, "நாம் செத்தால் இந்தக் குழந்தைகளும் பெண்டாட்டியும் எப்படி ஜீவிக்கும்? அட போ ...அதெல்லாம் வீண் கதை. ஒரு மாதம் அழும். அப்பால் அப்பா இருந்தார். மொத்தத்திலோ நல்லவர் என்று கதை சொல்லிக்கொண்டு சௌக்கியமாகவே இருக்கும்" என்று எழுதுகிறார். குடிசையில் தொங்கி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இரு துண்டு கயிறுகளைக் கூட கொஞ்சவிட்டு, காதல் செய்யவிட்டு வேடிக்கைக் கதை சொல்கிறார். இப்போது தேவர்களிடம் சண்டைமூட்டும் தொழிலை விட்டுவிட்டு மனிதர்களிடம் தான் நாரதர் சண்டை மூட்டுகிறாராம்!

"விழுந்தால் விழுந்தது, கிடந்தால் கிடந்தது. ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாரத தேசம் அய்யா பாமர தேசம்!" என்று குத்திக்காட்டி வேடிக்கை செய்கிறார். "தெய்வம், கிய்வம் எல்லாம் வீண்பேச்சு . வேலை செய்தவன் பிழைப்பான், வேலை செய்யாதவன் செத்து போவான்" என்று நெற்றியடி அடிக்கிறார். "சும்மா இருந்து, சும்மா இருந்துதான் இந்தத் தேசம் பாழாய், குட்டிச் சுவராய் போய்விட்டதே, இன்னும் என்ன அம்மா?" என்று தனது ஆத்திரத்தை இறக்கி வைக்கிறார். "தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டுவருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் கருதும் இந்த சமுதாயம், என்று ஆணும் பெண்ணும் சமமென்று மாறுகிறதோ அன்றே நமக்கெல்லாம் உண்மையான விடுதலை" என்று நண்பர்களோடு நின்று தர்க்கம் செய்கிறார்.

வெறும் கதைகளோடு நில்லாது உலக நடப்புகளையும் விமர்சிக்கிறார். ஜெர்மனியில் நடக்கின்ற போரை பற்றி பேசுகிறார். ரஷ்யாவின் அரசியல் கட்சிகளை கிண்டல் அடிக்கிறார். அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதியான வில்சனைப் பற்றி பேசுகிறார். "உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி..லெனினுக்கு லட்சம் பக்கத்திலே!" என்று ரஷ்யாவின் தலைவரான லெனினை பற்றி எழுதுகிறார்.

ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், ஹிந்தி வார்த்தைகளை மிகச் சரளமாக பயன்படுத்துகிறார். நவீன ஐரோப்பிய பாணியில் ஒரு கதை சொல்ல முனைகிறார். "சக்தி வடிவேலனை வணங்குவோருக்கு துன்பமில்லை!" என்று வேல்முருகனை துதிக்கிறார். திருவாசகம் சொல்கிறார். ஸ்கந்த புராணம் சொல்கிறார். "தள்ளடா! லெனினுமாயிற்று; வெங்காயமுமாயிற்று; தூங்குவோம்!" என்று படுத்துத் தூங்குகிறார். "பொழுது போக வேண்டுமே .. சரி இவனிடம் பேச்சு கொடுக்கலாம்" என்று தெருவோரம் நிற்கும் ஒருவனோடு கதை பேச ஆரம்பிக்கிறார். தானும் ஒரு சாமானியன் தான் என்பதை இது போன்ற பல தருணங்களில் யதார்த்தமாகவும் அழகாகவும் சொல்லிருக்கிறார்.

வேடிக்கைக் கதைகளில் தத்துவத்தையும், ஞானத்தையும் சேர்த்து விதைத்து எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நம் முண்டாசுக் கவி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!" என்ற சொன்ன பாரதிதான் யாம் அறிந்த கவிகளிலே என்றும் மகாகவி!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.