Thenpandi Singam is a Tamil historical novel written by Kalaignar M. Karunanidhi, who based his novel on a legendary story of Valukku Veli, a Petty chief ruling Paganeri Nadu, one of the Kallar nadus in the 18th century.
Kalaignar was also awarded the "Raja Rajan Award" by Tamil University, Thanjavur for this book.
Muthuvel Karunanidhi (மு. கருணாநிதி) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He had the longest tenure as Chief Minister of Tamil Nadu with 6,863 days in office. He was also a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. He also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as "Kalaignar" (கலைஞர்) (Artist) and "Muthamizharignar" (முத்தமிழறிஞர்) (Tamil Scholar) for his contributions to Tamil literature.
கதை :தென்பாண்டி சிங்கம் ஆசிரியர் :கலைஞர் கருணாநிதி
ஆங்கிலேய ஆதிக்கம் பெரும் நோயைப் போல இந்தியா எங்கிலும் பரவ, அவர்களை எதிர்த்து முதலில் களமிறங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இன்றளவிலும் போற்றி வருகிறோம் . அவரது வீரத்தின் சிறிதும் குறையாத மன்னன் ஒருவன் சூழ்ச்சியால் விழுந்த கதை தான் தென்பாண்டி சிங்கம்.
கட்டபொம்மனை தூக்கிலிட்டதும் ,அவரது தம்பி ஊமைத்துரை மருது பாண்டியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தார். அதனால் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை தன் ஆட்சிக்குக் கொண்டு வர திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. அதனை சிறிதும் விரும்பாத மருது சகோதரர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட கள்ளர் நாடுகளின் படையோடு ஆங்கிலேயரை எதிர்க்க திட்டமிட்டனர். கள்ளர் நாடுகளில் ஒரு நாட்டின் தலைவன் தான் வாளுக்கு வேலி.தென்பாண்டி சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்.
வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர். சூரியன் அஸ்தமிக்காத காலனி ஆதிக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைந்த ஆங்கிலேயரை துச்சமென மதித்து மருது பாண்டியர்களுக்கு துணை நின்ற வீரன். இத்தகைய வீரன் எதிர்கட்சியில் இருந்தால் மருது சகோதரர்களை எதிர்த்து நிற்க முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள், கலகத்தை உருவாக்க திட்டமிட்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியை கைகொண்ட அவர்கள், கள்ளர் நாடுகளில் மிகுந்த பலம் நிறைந்த நாடுகளான பாகனேரி மட்டும் பட்டமங்கலத்தை மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர்.
வீரத்தை மட்டுமே பிரதானமாக கருதிய அவ்விரு நாடுகளும் சூட்சியில் சிக்கி தவித்தன. தம் நண்பர் நாடுகளான பிற கள்ளர் நாடுகளையும் உட்கட்சிப் போருக்கு அழைத்தார் வாளுக்கு வேலி.
இந்தப் போர் நடைபெற்ற நேரத்தில் தான், மருது சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. காளையார்கோவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடியில் வந்தது. தன் தவறை உணர்ந்த வாளுக்குவேலி, படைகளை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக வழிநடத்திச் சென்ற போது, வஞ்சகமாகக் புதைகுழியில் விழுந்து மாண்டார்.
அந்த தென்பாண்டி சிங்கம் , கத்தப்பட்டு என்னும் இடத்தில் இன்றும் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்து இருக்க வேண்டிய வீரன், சூழ்ச்சிக்கு சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறான்.
இவ்வுண்மை கதையை சிற்சில கற்பனைகள் சேர்த்து அழகாக உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
கலைஞரின் தமிழ் அறிவுக்கு சான்றாக எத்தனையோ திரைப்படங்களும், அவர் எழுதிய வசனங்களும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லையென்றாலும் அவரின் புத்தகப் படைப்புகளும் அவ்வண்ணமே அமைந்திருப்பதை கண்டு வியக்கிறேன்...
சுமார் 300 பக்கங்கள் கொண்ட நாவல், கதை ஆரம்பித்த உடனே முடிந்தவரை இடைவெளியில்லாமல் படித்து முடிக்க தூண்டும். ஆங்கிலத்தில் சொல்லப்படும் " Great page turner" என்பது இந்த நாவலுக்கு பொருந்தும்.. சில முக்கியமான அத்தியாயங்களில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் நம்மையறிமால் நம் கோபத்தை தூண்டிவிடும்..
கதையில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள்:
வாளுக்குவேலி கறுத்த ஆதப்பன் கல்யாணி நாச்சியார் வெள்ளை ஐயர், மேகநாதன் !
வல்லத்தரையன் வைரமுத்தன் வீரம்மாள் உறங்காப்புலி!
சுந்தராம்பாள், வடிவாம்பாள்!
மற்றும் கேப்டன் அக்னியு!
அமைதியாக வாழும் இரு ஊருக்குள் (பட்டமங்கலம், பாகனேரி) ஏற்கனவே இருக்கும் காழ்புணர்ச்சிகள் மேலும் சில விஷயங்களால் வளர்ந்து, பின்னாளில் பெரும் போராக உருவெடுத்து, அதே நேரம் இந்த உள்ளூர் போரினால் இந்திய சுதந்திர போராட்டக்காரர்களுக்கு ஏற்படும் தொய்வும் அழகாக சொல்லப்பட்டதே "தென்பாண்டி சிங்கம்".