Jump to ratings and reviews
Rate this book

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

Rate this book
புகழேந்திப் புலவர் பெயரிலுள்ள பாரதம் தொடர்பான 15 கதைகளில் சுருக்கம் இந்தக் கதைகள் எல்லாம் அம்மானை வடிவில் உள்ளன அல்லிஅரசாணி மா பவளக்கொடி மாலை அபிமன்னன் சுந்தரி மாலை ஆரவல்லி சூரவல்லி கதை ஏணி ஏற்றம் பஞ்சபாண்டவர் வனவாசம் திரௌபதி குறம் திரவுபதி அம்மானை மின்னொளியாள் குறம் வித்துவான் குறம் பொன்னுருவி மசக்கை கர்ண மகாராஜன் சண்டை குருகுல மக்கள் கதை அரவான் கதை ஆகிய பதினைந்து கதைகள் இதில் உள்ளன இந்தக் கதைகளைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையும் உண்டு ஒவ்வொரு கதைக்கும் பழைய வரைபடங்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன இந்தப் படங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அம்மானைப் பாடல்கள் நூல்களில் உள்ளவை.

224 pages, Paperback

Published January 1, 2012

16 people want to read

About the author

A.K. Perumal

26 books7 followers
A.K. Perumal (September, 28 1947) is a Tamil folklore researcher and literary historian whose area of research includes Kanyakumari district's literary and archeological history. He has experience in field-based research. He plays an important role in collecting and publishing research works on oral history, inscriptions, sculptures, temple architecture, palm leaf manuscripts, folklore and folk artforms of Tamil Nadu.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
0 (0%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
14 reviews7 followers
September 13, 2025
எழுத்தாளர் அ. கா. பெருமாள் அவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களில் ஒருவர். இவர் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை “தென்னிந்தியத் தோல்பவைக் கூத்து“ , “தென்குமரியின் கதை” ஆகிய நூல்களுக்காக இருமுறை பெற்றுள்ளார்.

செழுமையான கதை மரபும் இலக்கியம் மரபும் ஏராளமாக நமது தமிழ் பண்பாட்டில் உள்ளது போல பாரதக் கதைகளும் இருக்கிறது. நாட்டார் கதைகளிலும் அவற்றை அறிய முடியும், அவற்றுள் சிலவற்றை மீள்பதிவு செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூல் 15 கதைகளை கொண்டதாய் அமைந்துள்ளது. “அல்லி அரசாணி மாலை”, “புலந்திரன் களவு மாலை”, “ பவளக்கொடி மாலை”, “அபிமன்னன் சுந்தரி மாலை”, “ஆரவல்லி சூரவல்லி மாலை”, “ஏணியேற்றம்”, பஞ்சபாண்டவர் வனவாசம்”, திரௌபதைக் குறம்”, “திரௌபதை அம்மானை”, “மின்னொளியாள் குறம்”, “வித்துவான் குறம்”, “பொன்னுருவி மசக்கை”, “கர்ண மகாராஜன் சண்டை”, “குருகுல மக்கள் கதைச் சுருக்கம்”, மற்றும் “அரவான் கதை”.

நாட்டார் வழக்காற்றில் பாரதக் கதைச் செய்திகளும், கதாபாத்திரங்களும் அதிக செல்வாக்குப் பெற்றிருப்பதை நம்மால் காண இயலும். அழகான இளைஞனை வர்ணிக்க “அர்ஜுனன்” என்று சொல்வதை கேட்டிருப்போம். கோள்சொல்லிக் குடும்பத்தை பிரிப்பவரை “சகுனி” என்று கூறுவோம். பொறுமையைக் குறிக்கும் வகையில் தருமரின் பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த புத்தகத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதைகளிலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது, கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் ஒவ்வாது. பிறர் வாசிப்பனுபவம் பாதிக்காமல் இருக்க ஒரு கதையை மட்டுமே எளிமையாக குறிப்பிட்டுள்ளேன். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.