Jump to ratings and reviews
Rate this book

ராணி மங்கம்மாள்

Rate this book
இராணி மங்கம்மாள் பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

264 pages, Paperback

Published January 1, 1981

69 people are currently reading
71 people want to read

About the author

Na. Parthasarathy

69 books36 followers
Na. Parthasarathy (Tamil: நா. பார்த்தசாரதி), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under various pet names like Theeran, Aravindan, Manivannan, Ponmudi, Valavan, Kadalazhagan, Ilampooranan and Sengulam Veerasinga Kavirayar.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
46 (34%)
4 stars
48 (35%)
3 stars
24 (17%)
2 stars
8 (5%)
1 star
8 (5%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Dhanaraj Rajan.
533 reviews363 followers
July 30, 2020
A historical fiction based on the life of the famous Nayakka Queen, Mangammal. I was interested in it as she was the queen of the region that is close to my heart (The Madurai region in Tamil Nadu). I expected a lot from the novel. Truth be spoken, I expected what is supposed to be expected from a Historical Fiction. But it was very flat. In fact, each chapter could be written as separate essays (non fiction). It did not look like a historical fiction. It looked like an amalgamation of details.
Profile Image for Aravind.
548 reviews13 followers
December 25, 2019
Rani Mangammal was a remarkable woman who faced tragedies and challenges all through her life, but held her own to emerge as a much revered queen of the hearts of Tamil people. This novel, written in a straightforward manner, describes the major events of her life until her unfortunate death at the hands of her own people. The author has let the history take its own course, holding his creative inputs to a minimum, which makes the novel both easy to read and somewhat monotonous.
Profile Image for Ram M Srinivas.
91 reviews2 followers
May 3, 2023
இந்த வருடத்தில் நான் முடிக்கும் 43ஆவது புத்தகம்.
புத்தகத்தின் பெயர்: ராணி மங்கம்மாள்
எழுதியவர்: நா. பார்த்தசாரதி

ஒரு சரித்திர நாவல் என்றால் எப்படி இருக்கவேண்டும், எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும், வரலாற்றின் சம்பவங்களை சில கற்பணையுடன் அழகாக எவ்வாறு கூற வேண்டும், படிப்பவர்கள், சலிப்பு இல்லாமல் எப்படி கதையுடன் பயணிக்க வேண்டும் என்பதெல்லாம் வரலாற்று நாவலில் மிகவும் முக்கியமானவை. தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான "தீபம்" நா. பார்த்தசாரதி அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாரா என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறியே. ரங்க கிருஷ்ண முத்து வீரப்பனின் வரலாற்றை வைத்து புத்தகத்தின் ஏறக்குறைய பாதி பயணம் நிறப்பிவிட்டார் . கற்பனை டயலாக் மூலமாக மீதம் கால்வாசி நிரப்பி விட்டார். கடைசி பாதியில் "ராணி மங்கம்மாள் பல நன்மைகள் செய்தாள் " என்பது போல விரிவாக்கம் இல்லாத, கதையுடன் புனையாத, ரசிக்கமுடியாத வகையில் எழுதியுள்ளார்.
படித்து முடித்ததும் "எதற்காக ராணி மங்கம்மாள் அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்ற கேள்வி எழும் வகையில் தான் இருந்தது இந்த புத்தகம். அதற்கு காரணம் ராணி ஒன்றும் செய்யவில்லை என்பது அல்ல, செய்த பெருமைகளையும், துடித்த துயரங்களையும் 5% கூட உருப்படியாக கூறவில்லை என்பதே காரணம். இந்த புத்தகத்தை படிப்பதற்கு, யூடியூபில் எதேனும் documentary பார்த்து அறிந்துகொள்ளலாம். 15 நிமிடங்களில் நன்றாக கூறி உள்ளனர் சிலர்.
இந்த புத்தகம் சுருக்கமாக "டைம் வேஸ்ட்"
மதிப்பீடு:
ராணி மங்கம்மாள் அவர்களின் பெருமைக்கு 5/5 அதை விவரித்த புத்தகத்திற்கு 1/5
எதிர்பார்ப்புக்கு இரட்டிப்பு ஏமாற்றம் தான் மிச்சம்.
Profile Image for Arun A.
59 reviews10 followers
September 23, 2017
​காவல் கோட்டம் படித்ததில் பெரிய பிரமிப்பாக இருந்த நாயக்கர் வரலாற்றில் ராணி மங்கம்மாள் பற்றிய சில பாகங்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளின் விரிவாக்கம் இருந்தால் இன்னும் பயனுள்ளது என்று இந்த வரலாற்று சரித்திரத்தை படிக்க தொடங்கினேன். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தகவல் கிடைக்கவில்லை, காரணம் பெரும்பான்மையான விஷயம் காவல் கோட்டத்தில் படித்துவிட்டதால் புதிதாக ஒன்றும் இல்லை.

மங்கம்மாளின் கணவன் பிறந்ததிலிருந்து, மரணம் வரை முழுத்தகவலையும் கதைபோல தொகுப்பாக்கி நா. பா பாணிக்கே உரிய முறையில் பதிவிட்டுள்ளார். ஆனால் மங்கம்மாளின் முக்கியமான சரித்திர பதிவிக்குள் மிக குறுக்கியதாதலால், சில இடங்களில் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான விளக்கங்களும் பதிவுகளும் சலிப்படைய வைக்கின்றன. இதற்கு காரணம் ஏற்கனவே மங்கம்மாளின் வாழ்கை வரலாறு சிறிதளவு காவல் கோட்டத்தில் படித்ததால் கூட இருக்கலாம்.

முக்கியமான சம்பவங்கள் இதில் இல்லாமல் போனது, வருத்தமே. காவல் கோட்டத்தில் மூன்று பக்கத்திற்கும் மேலாக மதுரையின் கோட்டையில் பலிஜுவருக்கும் கம்பளத்தாருக்கும் இடையே நடந்த சதி தீட்டங்கள் முறியடிக்க அவள் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி எந்த தகவலும் இல்லை. இருந்தாலும் காவல் கோட்டத்தில் தகவலாக படித்தவை உரையாடலுடன் நடந்தவையாக படிக்கும் போது இறுதி வரை படித்து முடிக்க தூண்டியவாறு இருந்தது.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
August 20, 2018
ஏதோ ஒரு காலத்தில் வெற்றி பெற்று வரி செலுத்த ஒப்புக்கொண்ட நாடுகளுக்கு எதுவும் செய்யாமல் வரி மட்டும் வசூலிப்பது, இன்றைய இந்தி இனவெறி இந்திய அரசிற்கு அப்படியே பொருந்துகிறது. ஒரு சிற்றரசனைக் கூட கட்டுப்படுத்தமுடியாதவரை கதாநாயகியாக்கி அவ்வளவு build up தேவையா? பக்கத்து நாடுகளின் உள் நாட்டு பிரச்சினையினால் அதிக எதிர்ப்பு இல்லை. எதிரி நாட்டு வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதால் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அவ்வளவு தான். மற்ற படி இராணி மங்கம்மாளின் தனிச் சிறப்பு என்று எதுவும் இல்லை?
Profile Image for Sathiyaraj Sriramamoorthy.
6 reviews5 followers
January 7, 2019
ராணி மங்கம்மாள் என்று பெயரை வைத்து விட்டு அவரை விட ரகுநாத சேதுபதியின் பெருமைகள் தான் பெரிதாக பேசப்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஆசிரியரின் உவமைகளை கையாளும் விதம் பாராட்டத்தக்கது. புனைவு கதைகளுக்கு உரிய விறுவிறுப்பு சற்றே குறைவு.
ஒரு முறை படிக்கலாம்.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.