Jump to ratings and reviews
Rate this book

Periyar

Rate this book
‘Thandhai Periyaar’ holds a great place in making social changes in TamilNadu. He was an orphan who was adopted and brought up by a poor widow. He was nine years old when he was brought home by his father. The author Ajayan Bala has portrayed this book just like a movie to the readers. While reading the instances like Periyar intelligently over taking his father Venkata Nayakar in business , getting insulted inspite of losing his five year old daughter, getting spit on his face, disrespected by the people in Kasi in the name of caste, eating the thrown away food , readers get the experience of living with Periyar himself.

95 pages, Paperback

Published June 1, 2008

2 people are currently reading
27 people want to read

About the author

Ajayan Bala

18 books6 followers
Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (34%)
4 stars
10 (38%)
3 stars
5 (19%)
2 stars
1 (3%)
1 star
1 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
August 2, 2021
மிகச்சிறிய புத்தகம் தான். இருப்பினும் தந்தை பெரியாரினைப் பற்றிய எளிமையான தெளிவான அறிமுகம்.
Profile Image for Saravanan Meivel.
179 reviews8 followers
October 21, 2018
not only talked about periyar it described minor introduction to all great politicians of TN and all together never felt bored through out the read
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
December 6, 2018
ராமசாமியின் பால்யகால வளர்ச்சி காட்டுசெடியாக இருந்தது எனவே எதையும் துணிவுடன் எதிர்கொண்டனர். அவரின் சிறு வயது சேட்டைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு,வியாபார திறன், சிக்கனம்/கஞ்சத்தனம்,நாகம்மையுடன் திருமணம், குழந்தையின் மரணம், தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக 25 வயதில் சாமியார்(துறவி)யாக காசி பயணம், காசியில் பசியுடன் சுற்றிதிறிந்தது,காசியில் ராமசாமி வேறு சாதி என சொல்லி குருகுலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது, தந்தை மீண்டும் ராமசாமியை சமாதானப்படுத்தி ஈரோடு அழைத்து வந்தது, ராமசாமி வகித்த பல மதிப்புமிக்க பதவிகள், ராஜாஜி(ராஜகோபாலாச்சாரி) உடன் நடத்த சந்திப்பு, காந்திய கொள்கை ஈர்ப்பு, காங்கிரஸில் பெரியார் இணைந்தது, பெரியார் மேடை பேச்சு காந்த இழுவிசை போல மக்கள் கூட்டத்தை இழுத்துவந்த காரணம்,கதர் இயக்கம், காங்கிரஸ் கட்சியின் உயர்சாதி மக்களால் ஏற்பட்ட இன்னல்கள், இடஒதுக்கீடு விகாரத்தில் காங்கிரஸ் இருந்து வெளியேற்றம்,

ஜஸ்டிஸ்(நீதி) பத்திரிக்கை “நீதி கட்சி” தோற்றம், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், வைக்கம் போராட்டம் , “குடியரசு” பத்திரிகை தோற்றம், அண்ணா ராமசாமி சந்திப்பு, அண்ணா ராமசாமியின் நட்ப்பு, மலேய்யா பயணம், ரஷ்யா பயணம், நீதி கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பேற்றார், நீதி கட்சி “திராவிட கழகம்” என பெயர் மாற்றம், திராவிட கழகத்தின் கட்சி கொடி மாற்றம், நகம்மையார் மறைவு, இந்தி எதிர்ப்பு போராட்டம், சிறைவாசம்,ராமசாமிக்கு “பெரியார்” பட்டம் கிடைத்தது, அண்ணா& பெரியார் கருத்து மோதல், பொரியார்-மணியம்மை திருமணம், அண்ணாவின் புதிய கட்சி “திராவிட முன்னேற்ற கழகம்” உதயம். பெரியாரிடம் இருந்து பல தலைவர்கள் பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தது, பெரியார் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது, காமராஜர் அவர்களை முதல்வர் வேட்பாளராக பெரியார் தேர்ந்தெடுத்தது, அண்ணாதுரை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திருச்சி வந்து பெரியார்ரை சந்தித்து வாழ்த்து பெறுதல், அண்ணாவின் மறைவை அறிந்து மனம் நொந்து பெரியார் அழுதது, ராமசாமியின் நண்பரும், எதிரியுமான ராஜாஜி மறைவில் நண்பனை இழந்ததால் தேம்பி தேம்பி அழுதது, சிறுநீரகப் பிரச்சனை, பெரியார் மறைவு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பெரியார். இந்த தகவல் அனைத்தும் இந்த புத்தகத்தில் உள்ளது.

இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரின் சில வைரவரிகள்,

‘முதலில் இந்தச் சாதியை ஒழிக்காமல் தேச விடுதலைக்குப் போராடுவது என்பது, கோழி முட்டைக்கு மயிர் நீக்கும் வேலை’ என்பதில் உறுதியாக இருந்தார். மதத்தையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்காமல், சாதிய ஒழிப்பு என்பது ஆகாத காரியம் என்பதையும் அறிந்திருந்தார். மதம், யாரை உயர்ந்த குலத்தவராக அடையாளம் காட்டியதோ, அவர்கள் தொடர்ந்து எல்லா வகைகளிலும் உயர்ந்துகொண்டே இருக்க, மதம் கீழானவர்களாகச் சித்திரித்தவர்களெல்லாம் மேலும் கீழான நிலைக்கே சென்றுகொண்டு இருப்பதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஆணிவேர் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த நிலை மாறி, அனைவரும் சாதி எனும் மேலாதிக்கம் இல்லாதவர்களாக, எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாதவர்களாகச் சம நிலையில் வாழ வேண்டுமானால், முதலில் அந்த வரிசையை உருவாக்கிய வர்ணாசிரம தர்மத்தையும் அதற்குக் காரணமான மத நம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த அடிமைத்தனத்திலிருந்து மக்கள் முழுமையாக விடுதலை பெற வேண்டுமானால் முதலில் தேவை, அனைத்தையும் ஏன், எதற்கு என காரணகாரியங்களை அலசி ஆராயும் பகுத்தறிவு. அடுத்து, ‘நாமும் மனிதன்; மற்றவர்களும் மனிதர்; பின் என்ன காரணத்துக்காக ஒருவரைக் கண்டதும் பயப்பட்டுக் குனிந்து கூழைக் கும்பிடு போட வேண்டும்?’ எனத் தனக்குள் கேள்வி கேட்கும் தன்மான உணர்ச்சி. இந்த இரண்டையும் மக்களின் உள்ளத்தில், பேச்சாலும் எழுத்தாலும் ஊட்டினால் போதும். இந்தச் சாதிய அடுக்கு நிலையில் ஓரளவு மாற்றம் நிகழும். பிராமணரல்லாத இதர சாதியினரும் கல்வியும் அறிவும் பெற்று, அவர்களுக்கு ஈடாக வாழ்க்கையில் உயர்ந்த நிலைகளை அடைய முடியும் என நம்பினார். நாளைய சமூகம் புத்தொளியும், அறிவெழுச்சியும், சமநீதியும் கொண்ட புதிய சமூகமாக மலரும் எனப் புறப்பட்டார் ராமசாமியார்.

-கலைச்செல்வன் செல்வராஜ்
Profile Image for Arun Bharathi.
102 reviews3 followers
February 6, 2022
திரு. அஜயன் பாலா எழுதிய "நாயகன் பெரியார்" நூலை Amazon Kindle-ல் இன்று படித்தேன்.

பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் திரட்டி ஒரு சிறு வாழ்க்கை வரலாறாக இந்நூலைத் தொகுத்திருக்கிறார். பெரியாரின் பொது வாழ்க்கையோடு நில்லாமல் அவரது சொந்த வாழ்க்கையையும், அதில் அவர் சந்தித்த இழப்புகளையும், உளவியல் ரீதியான அழுத்தங்களையும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் விளக்குகிறது இந்நூல்.

பெரியார் அவர்கள் காந்திய கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் காங்கிரஸில் இணைந்தாலும், பின்னாளில் நாட்டு விடுதலையை விட சமூக விடுதலையே பிரதானமென காங்கிரஸில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் துவங்கியதின் காரணத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர். அதில் பெரியாரின் கொள்கைப் பிடிப்பு தெளிவாய் தெரிந்தது.

பெரியார் முன்னெடுத்தப் போராட்டங்களில் அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மா ஆகியோரின் பங்களிப்பே பெரியார் பெண் சுதந்திரத்தை கொள்கைப் பரப்புரைகளோடு நிறுத்தாமல், அதை சொந்த வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கு சான்று. இவ்விரு பெண்களின் போராட்ட குணமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

தேர்தல் அரசியலில் இருந்து விலகி, சாதிய ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து இச்சமூகத்தை சுயமரியாதை மிக்க சமூகமாய் மாற்றிய தலைவனுக்கு இந்நூல் ஒரு "tribute".
Profile Image for Buddy2Blogger.
92 reviews24 followers
November 9, 2016
A disappointment. I had already seen the 2007 movie "Periyar" starring Sathyaraj in the lead role. Most of the book's text seems to have been written after watching the movie. The book's first edition came out in June 2008.

The only saving grace are the pictures that cover half the book, since every alternate page has one. When the book itself has only 95 pages, that means the text is there for just about 50 pages. Plus, a few of those pictures are just artwork of Periyar.

For a well written book about a great statesman from Tamil Nadu, I would recommend "Perunthalaivar Kamarajar" by S K Murugan.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.