‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் வடிவம். "சிறந்த ஒளிப்பதிவாளர், திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது படங்களை ரசிக்காதவர்கள்கூட இருக்கலாம். ஆனாலும் இப்புத்தகத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை எவராலும் புறக்கணிக்க முடியாது."
- கே.சந்துரு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி
"இந்நூலைப் படிக்கின்ற அறிவுள்ள தமிழர்கள் சிந்திப்பார்கள். உணர்ச்சியுள்ள தமிழர்கள் செயல்படுவார்கள். இவையொன்றுமே இல்லாமல் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் உண்மை உணர்வின் உச்சத்தைக் கண்டு குறைந்தபட்சம் வியந்து நிற்பார்கள். இன்றைய தேவை தமிழர்களுக்கு வியப்பு அல்ல. விழிப்புதான். இந்த நூல் அந்த விழிப்புக்கு வித்திடும்."
'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி. ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் வடிவம்.
நாம் தினமும் காணும் மக்கள் தவிப்பு, எளிய மக்களின் இயலாமை, அரசு அதிகாரிகளின் அட்டூழியம், அரசியல்வாதிகளின் பொய்மை வாக்குறுதிகள், கல்வியின் அவல நிலை, தனியார் மருத்துவமனையின் கொள்ளை, உழவன் படும் பாடு, மதுவின் சூறையாடல், வளச் சுரண்டல் என 50 தலைப்பில் நம்ம எல்லோரின் மணதில் ஒழிந்திருக்கம் கருத்தை உணர்வுப் பூர்வமாகவம், தரவுகளின் உதவியுடன் வெளிச்சமிட்டுள்ளார். கோடையில் தர்பூசணியை கடந்த செல்வது கடினம், அது போல தேர்தல் காலத்தில் இவர் முன் எடுத்து வைக்கும் கருத்துகளைக் புறந்தள்ளி வாக்களிப்பது இயலாது.
இதில் கூறப்பட்டுள்ளக் கருத்துகள் இந்திய முழுமைக்கும் பொருந்தும். இதை கண்டிப்பாக இந்தி, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டும். இதை எல்லா அரசியல், மற்றும் சமூக அக்கரையுள்ளவர்கள், பொதுத்துறையில் வேலையில் ஊள்ளவர்கள், வருங்கால அரசு ஊழியர்கள், மாணவர்கள் படிக்க வேண்டும்.
சமூகத்தின் குறைகளின் மீது உள்ள தனி மனிதனின் கோபம். அரசாங்கத்தின் அலட்சியம், பள்ளிகள் மதிப்பெண் சந்தையாக மாறுவது, இயற்கை வளங்கள் சூறையாட படுவது ஆகியவற்றால் வந்த கோபமும் அரசியல் கட்சிகளால் வந்த ஏமாற்றமும் அடங்கிய புத்தகம். இப்புத்தகத்தை படிப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சமூக இன்னல்களின் மீது கோபம் வரும், அந்த கோபம் மாற்றத்திற்கான பாதையில் நம்மை இட்டு செல்லும். ஆக சமூக இன்னல்களை இனம் கண்டு அதற்கு வழி வகுக்க செய்யும் நூல் இது.