சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா? இல்லை கோழியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.
ஆசிரியர் புத்தகத்தை சுவாரஸ்யமாக்க எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. ஏனேன்றால் நாஸ்டிரடாமஸ் பற்றிய பல போலி தகவல்கள் உலாவுகின்றன அதுவும் நாஸ்டிரடாமஸ் ஒருபோதும் செய்யாத பல போலி கணிப்புகளை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு அளவு கடந்த பாராட்டுக்கள்.