சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்.
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கும் பொழுதோ அல்லது தனிமையின் பொழுதோ நீங்கள் வண்ணதாசனின் கதைகளைப் படிக்கநேர்ந்தால்... நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பூவரச மரத்தடியிலோ அல்லது நாகலிங்க மரத்தடியிலோ கிடக்கிற ஒரு பழுப்பேறிய மரபெஞ்ச்சில் சென்று அமரக்கூடும். பூக்களை பொறுக்கியெடுத்து கைகளிலேந்தியபடி சிறு புன்னகையோடு வண்ணதாசன் உங்களருகே வந்தமர்ந்து பேசக்கூடும். எங்கோ தேடியது அங்கே கிடைக்கலாம். எங்கோ கிடைத்தது அங்கே தொலையலாம். கதைபேசித் தீர்கையில் நீங்களறியாமல் அற்புதங்கள் நிகழ்ந்துவிட்டிருக்கக்கூடும்
It was unbelievably light read. Collection of short stories that leave you with a hint of smile, a little nod, a deep breath and sometimes all at once. Vannadasan tells all stories with equal enthusiasm touching a fine line between prose and poem. It took some time to understand and appreciate its uniqueness. A promising work in Tamil that reinforces the faith in the culture and its beliefs.
#210 Book 51 of 2023- ஒரு சிறு இசை Author- வண்ணதாசன்
“இசையில் சிறிதென்ன,பெரிதென்ன? இசை. அவ்வளவு தான்.”
நான் படிக்கும் இரண்டாவது வண்ணதாசனின் சிறுகதை தொகுப்பு இது. ஏன் இந்த தலைப்பு என முன்னுரையில் அவர் சொல்வது ஆகட்டும்,இந்த புத்தகத்தைப் பற்றி ஜெயமோகன்,எஸ்.ரா எழுதியிருப்பவை ஆகட்டும்,எல்லாவற்றின் ஆழமும் புத்தகம் முழுக்க உணர முடிகிறது.இது மிக வித்தியாசமான தொகுப்பு! சட்டென ஆரம்பித்து,அப்படியே முடிகிற கதை ஒன்று கூட இல்லை. கதை தொடங்குகிறது,நம்மை அந்த இடத்திற்கே அவர் அழைத்துச் செல்கிறார்,எல்லாவற்றையும் சொல்கிறார்..இறுதியில் அது முடியும் போது அது மனதை என்னமோ செய்கிறது. ஒவ்வொரு கதையும் நிச்சயம் ஆழ்ந்த தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும்.
எதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு இப்படி அசாதரணமாக கதையை படைக்கும் கலையை இவர் எங்கு கற்றுக்கொண்டாரோ! “வண்ணதாசன்” என்னும் மனிதன் தமிழ் இலக்கிய உலகிற்க்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.நிறைய என்னை அழச் செய்தது இந்த புத்தகம்! இது பிடித்திருக்கிறது இதனால் நீங்கள் இதை படிக்க வேண்டும் என்று ஒரு விஷயத்தை என்னால் இதில் சொல்லவே முடியாது! இதை அவ்வளவு ரசித்தேன்! உணர்ச்சி பெருங்கடலில் சங்கமித்தேன்!
“வண்ணதாசன்” என்ற பெயரைத் தவிர வேறென்ன பெரிய காரணம் வேண்டும் உங்களுக்கு இதை படிக்க?🥺
ஒரு சிறு இசை போதும் பெரும் அறையின் நிசப்தத்தைக் கலைக்க, சிறு இசை போதும் மெல்லத் ததும்பிக் கடக்கும் இளந்தென்றலை ரசிக்க, சிறு இசை போதும் அசைய மறுக்கும் மனதை லேசாக அசைக்க, ஒரு முணுமுணுப்பைத் துவக்க, ஒரு சிறு இசை போதும் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நினைவுகளை அள்ளி எடுக்க.
அப்படி மனதின் ஆழத்தில் சிறு இசையாக எப்போதும், எந்த ஆரவாரமும் இல்லாமல் ஒளிந்து கிடைக்கும் மனிதர்களும், உணர்வுகளும், நினைவுகளும், சொல்லப்படாத கதைகளும், திறக்கப்படாத ரகசியங்களும், அன்றாட வாழ்வில் இயல்பாய் கடக்கும் தருணங்களும், மரங்களும், செடிகளும், பறவைகளும் - கதையாய், கவிதையாய் வடித்த 15 சிறுகதைகளின் தொகுப்பு தான் ஒரு சிறு இசை.
ஒரு சிறிய இசையாக மட்டுமே தொடங்கி, அன்றாட நிகழ்வுகளாக விரிந்து, ரசித்து, கதாபாத்திரங்களின் அகத்திற்குள் பயணித்து மெல்ல மெல்ல ஒரு மலர் மலர்வதைப் போல ரகசியங்கள் மலர்ந்து கதையின் இறுதியில் வேறொன்றாகக் கனிந்து, நினைவுகளின் வழியாக வேறொன்றை எக்கிப் பிடிக்கிறது ஒவ்வொரு கதைகளும்.
இத்தனை கவித்துவமாய் ஒரு கதையை நகர்த்தி, முடிவில் ஒரு சிறு வரிக்குள் அத்தனை ஆழத்தைக் கடத்தி, அதே கதையை வேறொன்றாய் நிகழ்த்திக் காட்டுவது வண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியம் போலும்.
கனியான பின்னும் நுனியில் பூவைப் பார்க்கிற, உடைந்த கண்ணாடி துண்டில் வெயிலின் வாசத்தை நுகர வைக்கிற, வெயிலுக்கு மினுக்கும் இலையின் பளபளப்பை ரசிக்க வைக்கிற, எங்கோ சுவரின் ஓரத்தில் தொங்கும் நூலாம்படையின் நிழலில் அரூப சித்திரங்களை வரைந்து பார்க்க வைக்கிற அதே சமயத்தில் மனிதர்களின் கைப்பிடித்தும், தோல் சாய்ந்தும் அவர்களின் அகத்திற்குள்ளும், உணர்வுகளுக்கும் சேர்த்தே பயணப்பட வைக்கிறது வண்ணதாசனின் எழுத்து.
எல்லா கதைகளும் எப்போதோ ஒரு சிறு இசையாக மீட்டப்பட்டு இன்னமும் ஆழத்தில் அடங்காத ஒரு ஒலியாக ஏதோ ஒரு ரகசியத்தை சுமந்துகொண்டே இருக்கு, அந்த ரகசியங்கள் மெல்ல உடைபடும் தருணமும், அப்படி உடைபட்ட தருணத்தைக் கூட அத்தனை எளிதாய் கடக்கும் மனிதர்களும் என ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு கதைகளும்.
ஒரு சில கதைகளை வாசிக்கும் போது -வண்ணதாசனின் கதைகளில் காற்று கூட அத்தனை பலமாக வீசுவதில்லை என்று எழுத்தாளர் இமயம் ஒரு முறை சொல்லிக் கேட்ட அந்த வார்த்தைகள் எவ்வளவு சரியானதென்று யோசிக்க வைக்கிறது.
காற்று மட்டுமா, அவரின் கதைகளில் வரும் மனிதர்களும் கூட அத்தனை இலகுவாகவும், அன்பாகவும்.
சின்ன மகனுக்குக் குழந்தை குட்டி இல்லைனு சொல்ல வருத்தப்பட்டுட்டு, எழுவது வயசாகிடுச்சு இனிமே நம்மலே குழந்தை மாதிரி தானப்பானு சொல்லற அப்பா, ஒரு முறை குனிந்து நிமிர்வதுக்குள் சோமு சார் கண்களில் முத்தம் வைக்கிற ஜான்சி, நீ என்னோட நிலைக்கண்ணாடி மாதிரி மாப்பிள்ளைன்னு சொல்ற பூரண லிங்கம் மாமா, கனியான பின்னும் நுனியில் பூவை பார்க்கிற தினகரியின் அப்பா, பல நாள் கழித்து சுப்புவை பார்த்ததும் அவளை தன் பக்கம் இழுத்து அவ தோலில் முகத்தை வைத்து குனிந்து நின்னுக்கிற சுந்தரி, கைலாசம் காலில் வீக்கம் இருக்கதை பார்த்துட்டு சட்டுன்னு குனிந்து தொட்டுப் பார்க்கிற பிரமு, அவனையும், அவளையும் ஒரு போட்டோ எடுத்து கல்பனா ஸ்டுடியோல வைக்கணும்னு நினைக்கிற கைலாசம், எல்லாரோட கையையும் இருக்கமா பிடிச்சுக்கிற மூக்கம்மா ஆச்சி இப்படி இன்னும் எத்தனையோ தருணங்களும், மனிதர்களும் இயல்பாய��, இலகுவாய், அன்பாய், நேசமாய்.
தொகுப்பில் இருக்கிற எந்த கதையிலும் கவித்துவத்துக்குப் பஞ்சமே இல்லை, இருந்தாலும் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை கனியான பின்னும் நுனியில் பூ.
படித்து முடித்ததும் ஒரு கவிதையே தனக்கென ஒரு உரையை எழுதிக்கிட்டு தவறி இந்த தொகுப்பில் விழுந்துருச்சோ அப்படின்னு யோசிக்க வச்ச ஒரு கவிதை - ஆமாம் நிச்சயம் அது கதை இல்ல கவிதை தான்.
ஒரு சிறு இசையாய் வர மூக்கம்மா ஆச்சியின் கதையை வாசித்து முடித்ததும் எனக்கென்னமோ அது கர்ணன் படத்துல வர மஞ்சணத்தி புருசா காட்சியை ஞாபகப்படுத்திட்டுப் போச்சு. காட்சியும், மனிதர்களும் தான் வேரையே தவிர இரண்டும் கடத்துற உணர்வு என்னமோ ஒன்னு தான்.
இப்படி இன்னும் திறக்கவே படாமல் எத்தனை மூக்கம்மா ஆச்சிகளின் அன்பும், காதாலும், ரகசியங்களும் - தாழம்பூ வாசனையோடு இன்னும் விடாமல் ஒரு சிறு இசையைத் தொடர்ந்து மீட்டிட்டே இருக்கும்ன்னு யோசிக்க வச்ச சிறுகதை.
அப்படித் திறக்கவே படாத அந்த பெட்டிகளுக்குள் கிடக்கும் மூக்கம்மா ஆச்சிகளின் சிரிப்பும், தங்கப் பொத்தான்களும் அப்படி எத்தனை காலத்திற்கு தான் தங்களுக்குள் ஒரு சிறு ரகசியத்தை பேசிச் சிரித்துக் கொண்டு இருக்குமோ தெரியல.
மொத்தமா இப்படித் தொடுதலும், அன்பும்,பிரிவும், நினைவுகளும், ரகசியமும், நேசமுமாய் ஒரு சிறு இசையாக தொடங்கி பெரும் இசையாக மாறி இன்னும் மனதின் ஆழத்தில் ஒலிச்சுட்டே இருக்க ஒரு தொகுப்பு.
இறுதியா - அவர் கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கிறோம். அவ்வளவு தான் மா.
நிச்சயம் அவ்வளவு தான் வாழ்க்கை, அவ்வளவே தான் வாழ்க்கை.
சப்டைட்டில் உடன் உலகத்தர பிரெஞ்சு படங்கள் பார்த்தது போல இருந்தது "ஒரு சிறு இசையின்" கதைகள். தமிழ் தான் என்றாலும், இக்கதைகளில் உள்ள கவிதைத் தன்மையும், பாத்திரங்களின் அகமொழியும் பழக 3 கதைகள் பிடித்தன. ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திய தாக்கத்தை கடந்து அடுத்தது வாசிக்கவும் நாட்கள் ஆகின. ஆனால் அதையெல்லாம் தாண்டி, பொதுவாக ஒரு சிறுகதை தொகுப்பில் 40 சதம் கதைகள் பிடித்திருக்கும் எனக்கு, இத்தொகுப்பில் இரண்டு கதைகள் தவிர மற்ற அனைத்துமே பிடித்துப்போனது!
'ஒரு தாமரைப் பூ, ஒரு குளம்' என்ற சிறுகதையில், மையப் பாத்திரத்தின் ஒரே செயல் சாயங்காலம் நடை செல்வது தான். ஆனால் கதை அந்த வினையைத் தொடாமல், பாத்திரத்தின் நினைவைத் தொடரும்போது, அது நம்மை வேறொரு தளத்துக்கு இட்டுச்செல்கிறது!
நம்மையே அறியாமல் நாம் கடந்து போகும் சிறு உணர்வுகள் தான் இத்தொகுப்பின் பல கதைகளில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஒருவர் இறந்தபின் அவரது செல்பேசி எண்ணை நாம் அழிப்போமா, நினைவுக்காக வைத்திருப்போமா? ஜான்சி சோமு இறந்தபின் தான் அவரது எண்ணை செல்பேசியில் ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறாள்! மேலும் சில தோன்றல்களின் உவமைகளாக வண்ணதாசன் எழுதும் காட்சிகள், கவித்துமாக நம்முன் விரிகின்றன:
பேபி வந்திருக்கிறாள் என்று தெரியும்போது ராசாமணியின் உணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார்:
"மலையில் இருந்து இறங்கி, முதுகில் கருப்புமண்ணும் தழையும் கிடக்க, தும்பிக்கை வீசியபடி வயலில் நிற்கும் யானை ஒன்று தூரத்தில் நிற்பது போல இருந்தது"
கஸ்தூரி அக்காவின் சிரிப்பு அடுக்களையில் இருந்து இப்படிக் கேட்டதாம்:
"ஒரு சோப்புக் கொப்புளம் பெட்ரோல் நீலமும் வாடாமல்லிச் சிவப்பும் படித்துறையில் உரசின மஞ்சளுமாகத் திரண்டு பெரியதாகி, எல்லாப் பக்கங்களிலும் வர்ணங்களைச் சிதறி வெடிக்கிறது போல அது."
நமக்கு நாமே போட்டுக் கொண்டிருக்கும் யதார்த்த வேலிகளைத் தாண்டி அவரவர் கனவுகளும் நினைவுகளும் குழம்பி நிற்கும் விசித்திர உலகுக்கு பயணம் கொள்கிறது கதைகள்! இதற்குத் தேவையான காட்சியமைப்புகளும் பாத்திரங்களின் ஊடே அமையப் பெறுவது அழகு. ஜானகி அந்தக் கடிதத்தை நீலாவுக்கு எழுதி இருக்கலாம்தான். ஆனால் அவள் சுந்தரத்துக்குத் தானே எழுதினாள். அதற்கு அவள் சொல்லும் காரணமே ஒரு காட்சியாய் விரிந்து வியக்க வைக்கிறது:
"வெயிலில் உலர்த்துவது என்றாகிவிட்டது. எல்லா இடத்திலும் தானே வெயில் விழும். ஆனால் இங்கே மட்டும்தான் விழும் என்பது போல ஒவ்வொருத்தரும் கொடியில் ஒரு இடத்தில் தொங்கப் போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது. இல்லையா?"
சில இடங்களில் இதே surreal கதையாடல் தான் தொய்வையும் தருகிறது. வாசித்த பத்தியையே மீண்டும் வாசித்துத் திரும்புவது போல; கடந்து போன படக்காட்சியை மீண்டும் ஓட்டி முதலில் இருந்து காண்பது போல.
மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது:
"எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"
ஆனால் ஒரே கதை வெவ்வேறு கலைஞர்களிடம் இருந்து புறப்படும்போது அது தரும் அனுபவம் வெவ்வேறாகிறது இல்லையா! "ஒரு சிறு இசையை" பொறுத்தவரை, அது நமக்குள் கடத்தும் உணர்வும், தரும் நினைவுகளும் புதுமையானவை. அன்பும், மன்னிப்பும், பரிவையும் கொண்ட இக்கதைகள் முடிந்துவிடக் கூடாது என்று எண்ணவைப்பவை!
The Sahitya Academy winner of 2016. I am a fan of his poems. This is a collection of short stories. Somehow couldn't connect with many of the stories though they all had their little moments. It is all based on minute observations of human nature in a variety of situations. Any reader would take a bit of time to get accustomed to his way of story telling. But to make up for the disappointment, the last 2 stories were super good especially the last one which carries the title of the book.
அன்றாட வாழ்வில் சிலகணங்கள் மெல்லிய உணர்வுகளை ஒரு தென்றலைப்போல் வீசிச்செல்வதுண்டு... நமது நினைவுப்பேழை அந்த உணர்வுகளின் ஊடாகவே நம் கடந்த கால தடங்களை வழியமைத்துக்கொள்கிறது.... அதற்கு எந்த வரையறையும் விளக்கங்களும் சிக்குவதில்லை... அக்கணங்களை கவிதைகளாக்கும் வண்ணதாசன், இங்கே அவைகளுக்கு ஒரு அறிமுகம் தந்திருக்கிறார்...
🎶சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூல் 15 சிறுகதைகளை உள்ளடக்கியது.
🎶மொழி நடை சிறப்பாக இருந்தது. மூளைக்குள் காட்சிகள் படம் போல ஓடின. வட்டாரச் சொல்லாடல்கள் சொந்த ஊரை நினைவுபடுத்தின. எனது கிராமத்தில் இருந்தது போன்ற ஒர் உணர்வு.
🎶ஒரு தாமரைப் பூ ஒரு குளம், ஒரு பறவையின் வாழ்வு, ஒரு சிறு இசை ஆகிய சிறுகதைகள் பிடித்திருந்தன. அவ்வளவாக உணரமுடியாத சிறுகதைகளிலும் கூட பிடித்தமான சில வரிகள் இருந்தன.
🎶முறை தவறிய உறவுகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றைப் படிப்பதற்கு மிகவும் நெருடலாக இருந்தது. பெண் கதாபாத்திரங்கள் இவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது போல காட்டப்பட்டிருந்தன. அதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. மன்மத லீலையை சிறுகதை worst.
🎶There are more love than hate. இந்த வாக்கியத்தில் என��்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆயினும் அந்த சிறு வெறுப்பையும், கோபத்தையும் காட்டாமல் கதை நகர்வது எதார்த்தமான மனித உணர்வுகளைப் புறந்தள்ளுவது போன்று இருந்தது. அன்பு சாத்தியம்தான். ஆனால் 24/7 சாத்தியமில்லை.
🎶புரிந்துகொள்ளமுடியாத அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாத சிறுகதைகளில் இருந்து நான் வெகு தொலைவில் உள்ளேன். எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களும் கசப்பான சம்பவங்களால் அன்பின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களும் இப்புத்தகத்தை வாசிக்கலாம்.
15 சிறுகதைகளின் தொகுப்பு....2012-13 வாக்கில் 'உயிர் எழுத்து', 'கல்கி', 'விகடன்' போன்ற இதழ்களில் வெளி வந்தவை.
புகை போன்ற படிமத்தினுள்ளே பயணப்படும்படியான கதைப்போக்கு, நாஞ்சில் நாட்டு மொழி வாடையில்(சிற்சில இடங்களில்), வாசித்துக்கொண்டிருக்கும்போதே நம்மை நமது வாழ்வின் பல நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு , அதனுள் இழுத்து சென்றுவிடும். அதாவது, பல்வேறு மனித மனங்களை ஊடுருவி படித்து, அவரவர் பார்வையின் வழிநின்று, வடித்த கதைகளாக இத்தொகுப்பைச் சொல்லலாம்.
போலவே கதைச் சம்பவங்கள் நடக்கும் இடத்தை சுற்றி இருக்கும் ஊர்வன, நடப்பன, பறப்பன உயிரினங்கள் பற்றியும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கதையிலுள்ள கதைமாந்தர்களின் குணநலன்கள் கட்டமைக்கப்பட்ட விதம், ஒருவிதம் என்றால், கதையின் முடிவில் அப்படியே அதை புரட்டிப் போடும்படியான வரி ஒன்று இடம் பெற்று, கதையின் கருவையே மாற்றிவிடுகிறது.
ஆழ ஊன்றி படிக்கும் படியான, சில இடங்களில் ஒருமுறைக்கு மறுமுறை படிக்கும்படியான எழுத்து நடை கொண்டதாக இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள தொடர்பு கோர்வையாக இல்லாது, நடுநடுவே விழுங்கியது போல சித்து விளையாட்டாக செல்கிறது. 'வண்ணதாசன் எனும் திரு கல்யாணி.சி அவர்களின் எழுத்துநடையே சற்று ஆழமான வர்ணனைகளால் ஆனதாக இருக்கலாம் எனத் தோன்றவைக்கிறது.
கதைகளின் தலைப்பு: * ஒரு தாமரைப் பூ, ஒரு குளம் * எண்கள் தேவையற்ற உரையாடல்கள் * பொழுது போகாமல் ஒரு சதுரங்கம் * பூரணம் * கனியான பின்னும் நுனியில் பூ * நிரப்புதல் * எதுவும் மாறிவிடவில்லை * கல்பனா ஸ்டூடியோவில் ஒரு போட்டோ * தண்ணீருக்கு மேல் தண்ணீருக்கு கீழ் * அந்த பன்னீர்மரம் இப்போது இல்லை * மன்மத லீலையை * சந்தனம் * ஒரு பறவையின் வாழ்வு * தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் * ஒரு சிறு இசை
இக்கதைகளில் நமது மனதில் நின்ற கதை என்றால், 'தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்' சொல்லலாம்.
புத்தகத்திலிருந்து....
\ ஆண்டுவிழா சரித்திர நாடகங்களுக்கு சீன் செட்டிங்ஸ் போடுகிற பெரிய தெரு கோடீஸ்வர முதலியார் பையன்கள் எல்லாம் சூரி மாமாவுக்கு பழக்கம். இரண்டு பேரும் சேர்ந்துதான் நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி.நடராஜன் மீட்டிங் எல்லாம் கேட்கப் போவார்கள். அப்புறம் எப்படி சூரி மாமாவுக்கு இந்தி பாட்டு பிடிக்கும்? /
\ குண்டு பல்புக்கு முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல், எதிர் சுவரில் அரூப சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது. /
\ 'காக்கா கொட்டினதா ஒரு ஆற்றை சொல்றா. அது வேணும்னு கொட்டித்தா, வேண்டாம்னு கொட்டித்தா தெரியலை. ஆனா இன்னிய தேதிக்கு அதில இறங்கி நின்னா கரண்டைக்கு கூட ஜலம் இல்லை. ஜலத்தை விடுங்கோ. குனிஞ்சு பார்த்தா ஒரு குத்து மணல் இல்லை. இதை கொட்டின கணக்கில் சேர்கிறதா, அள்ளின கணக்கில் சேர்க்கிறதா? /
\ ஆறு கீமோ, பன்னிரண்டு கதிரியக்க மருத்துவத்திற்கும் தாண்டி, அவளுடைய மிகப் பிந்திய மஞ்சட்காமாலை தினங்களில் கூட எந்த செல்லப் பெயரிட்டும் அழைக்கவில்லை. அவள் தன்னுடைய அறுபத்தாறு வயதின் இறுதி தினத்தைக் கிழித்து பறக்கவிடும் வரை, தான் வேறேனும் அப்படியொரு செல்லப் பெயரால் அழைக்கப்பட விரும்பினாளா என்று தெரியாது . /
\ அவர் மிகவும் கனவு கொண்டிருந்த அந்த அருவிச் சாலை ரிசார்ட் கட்டுமானத்தை முடித்து, காலையில் திறப்பு விழா நடத்தியிருந்தார்.மலையின் நீல அழைப்புக் கேட்கிற தூரத்தில், அருவியின் வெள்ளி ரிப்பன் அசைவது தெரிகிற நெருக்கத்தில், அதுவும் ஓர் பெரும் நெருக்கடியிலிருந்து மீண்ட முதல் நொடியில் துவங்கி வேகமாகக் கட்டி முடித்து விட்டார். /
\ விடைகளை முதலில் தந்துவிட்டு, கேள்வியின் புதிர்களை நம்மை எழுதச் சொல்கிற தேர்வு முறைகளுக்கு நான் பழகியிருக்கவில்லையே. இந்த ஒன்பது வருடங்களில் நாங்கள் செய்த பிரயாண காலங்களில் பெய்த பெரு மழையை எந்த கடலில் கொண்டு சேர்ப்பது? நாங்கள் அமர்ந்த பாறைகளின் மேல் விட்டுவிட்டு வந்திருக்கும் எங்கள் உடல் சூட்டை இனி என்ன செய்வது? நாங்கள் சேகரித்த வண்ணத்துப் பூச்சிகள் காளான்கள் எல்லாம் என்னாகும்? /
\ எல்லாத் திசை காட்டிகளும் பிடுங்கி எறியப் பட்ட சாலையில் நான் நின்றேன். /
"கனியான பின்னும் நுனியில் பூ" "ஒரு தாமரை ஒரு குளம்" "எண்கள் தேவையற்ற உரையாடல்கள்"
கதைகளும் அப்படியே..
"எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"
"வெயிலில் உலர்த்துவது என்றாகிவிட்டது. எல்லா இடத்திலும் தானே வெயில் விழும். ஆனால் இங்கே மட்டும்தான் விழும் என்பது போல ஒவ்வொருத்தரும் கொடியில் ஒரு இடத்தில் தொங்கப் போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது. இல்லையா?"
"நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ. உனக்கு காட்டுததுக்கா பார்க்கிறேன்? எனக்கு பார்க்கணும்னு தோணுது பார்க்குறேன். எனக்கு வலதுன்னா கண்ணாடியில் இடது, அதுக்கு வலதுன்னா எனக்கு இடது. நிலைக்கண்ணாடி யாரு கிட்டே போய் சொல்ல போகுது"
"அப்படி இல்லையா அத்தை போகணும்? எப்படி போனாலும் வீடு வந்திரும்"
ஒரு சிறு இசை நமக்குள் உள்ள பெரும் இசையை மீட்டக் கூடியது.அன்பு தான் இந்த சிறுகதைகளின் கரு.அடிமை ஆண்டானிடம்க் கொள்ளும் அன்பு,தோழர்களுக்கிடையே உள்ள அன்பு என அன்பின் பலப் பரிமாணங்கள் இந்த சிறுகதைகளின் பேசும் பொருளாக உள்ளன. இந்த புத்தகம் எதிர் மறையான இந்த உலகத்திலிருந்து நம்மை விலக்கி வைத்து நம்மை ஆசவாசப்படுத்தி நம்முடைய பார்வையை நேர்மறையாக மாற்றும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
The compilation of short stories are really good. The author narrates the stories from his native Tamil slang. Some bring a small fun, disturbance and other feelings. It is difficult to know whether they are real or just imagination
வேகமாக நகரும் அன்றாட வாழ்க்கையை ஒரு பொறுமையோடு , மனிதர்களுக்கு சுற்றி இருக்கும் நண்பர்களாலோ - உறவுகளாலோ ஏற்ப்படுகின்ற மெல்லிய அனுபவங்களை எழுத்தோவிமாக தீட்டுகிறார் , இத்துடன் நினைக்கிற - நிறைவேறா பல செயல்களின் நினைவாடல் "ஒரு சிறு இசை" ....
The stories are taken from our surroundings and daily life scenes which we didn't give much attention. The narrative of those stories and details given to small small things made this one as epic.
தனிமையின் வேதனை பொழுதுகளின் போது கையில் வந்தமரும் பட்டாம்பூச்சி போல, ஒரு தென்றல்,போல ஒரு சிறு இசை போல வருடி போகும் இனிமை வாய்ந்தது வண்ணதாசனின் இருத்தல் (எழுத்துருவில்).
இறந்த சேதியை பேப்பரில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் போது 'சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல்" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்து பெரியம்மை, 'நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ' என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்டனும்போலருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, "உன் வீட்டுக்காரி நிறை அம்மணமா என் கனவுல வந்தா" எனச் சொல்லி சிரிக்கும் சிவசைலம் பெரியப்பா, தண்டவாளங்களை தாண்டும் காந்தி டீச்சர், எல்லாரையும் தாராளமாய் கைபிடித்து பேசும் மூக்கம்மா ஆச்சி... வண்ணதாசன் வரிகளிலேயே சொன்னால் "ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல நிறைய முகங்கள்".
தூக்கிவிசிறிட்ட சாவி விழும் இடத்தில் இடம்பெயர்ந்த கொத்துமயிர், எட்டிப்பார்க்கும் செம்பருத்தி செடி, காத்தாடியில் படபடக்கும் புத்தகம் என எல்லாம் வண்ணதாசனின் கண்களுக்கு தான் படும். மரங்களில் சாமிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தனை அன்போடு ஆரத்தழுவ அவருக்கு தான் வரும்; மரமும் பறவையும் பூக்களும் தான் வண்ணதாசன்!
This book got sagithya academy award for vannadasan , the 5th person to get this award from thirunelveli district in the row. for the past 5years the persons from nellai district getting this award.