From Wikipedia - Melanmai Ponnusamy (Tamil: மேலாண்மை பொன்னுசாமி, born 1951) is a Tamil writer from Tamil Nadu, India. He was born in Mela Marainadu village in Virudhunagar District. He is a farmer by profession who also runs a grocery shop in his village. He is a Marxist by political orientation and a member of Communist Party of India (Marxist) (CPI-M). His first short story was published in 1972 in the literary journal Semmalar (lit. Red flower. CPI-M's literary publication). His works have since appeared in main stream Tamil magazines like Ananda Vikatan and Kalki. He credits Soviet literature as a major influence in his writing style and choice of subjects. His works are set in rural Tamil Nadu and deal with the lives of peasants. As of 2009, he has written 23 short story collections, six novellas, six novels and an essay collection. He was awarded the 2008 Sahitya Akademi Award for Tamil his short story Minsarapoo (lit. the electric flower). He was also awarded the 2009 Makkal TV award for his contributions to Tamil Literature. He is a founder member and the current general secretary of the Marxist writers' organisation - Tamil Nadu Progressive Writers Association (TNPWA). He is married to Ponnuthai and has three children.
கரிசல் மண்ணில் உள்ள அடித்தட்டு மக்களின் தினசரி நொம்பலங்களையும் அவர்கள் வாழ்வுமுறையையும் எதார்த்தமாக சொல்ல மூவராலேயே மட்டும் முடியும் என்பது ஏன் அபிப்பிராயம் . கி.ரா , எஸ் .ரா என்கின்ற வரிசையில் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு ஒரு தனி இடம் உண்டு .
பல சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் இருந்தாலும் , மின்சாரப்பூ என்கின்ற நீல் சிறுகதை என் மனதை தொட்ட ஒரு படைப்பு. கஷ்டப்படும் க்களுக்கிடையிலும் சாதியம் எப்பிடி புரை ஏறிப்போன சீல் வடியும் பெரும்புண்ணாக இன்னும் இருப்பது ஒரு சாபக்கேடு. அதை இச்சிறுகதையின் வாயிலாக மே.பொ நம் மனதை கனக்க வைத்துவிடுகிறார் .
ஒன்பது சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு இது.
எப்போதும் போல கரிசல் காட்டு சாதாரண மனிதர்கள்தான் முக்கியமான கதாபாத்திரங்கள். கரிசல் காட்டு கிராமங்களில் நிகழும் அன்றாட நிகழ்வுகள்தான் கதைக்கான கருப்பொருள்கள். மேலாண்மையின் கதைகளை படிக்கும் போது கரிசல் காட்டு மனிதர்களோடு அவர்களது கிராமத்தில் உலவுவது போலவே இருக்கும்.
சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக இருந்தவை ' காலப் பார்வை ' மற்றும் ' மனச் சலவை '. நீண்ட கதையான (குறுநாவல்) ' மின்சார பூ ' கதையும் பிடித்திருந்தது.
'காலப்பார்வை' (கதை) ஆடு கோழி பலியிட தடுப்புச் சட்டம் போடப்பட்ட பின்னணியில் எழுதப்பட்டிருந்த கதை. கரிசல் காட்டு சாதாரண பெண் தன ஒரே குழந்தையின் நோய் நீங்க வேண்டி தனது குலசாமிக்கு ஆடு பலியிடுவதாக வேண்டிக்கொள்கிறாள். பலியிட வரும்போது சட்டம் தடுக்கிறது. நிறைவேற்ற இயலவில்லை என்றால் தனது மகளுக்கு எதுவும் ஆகிவிடுமோ? என்ற பதட்டம் அவளை ஆட்கொள்கிறது. மிகுந்த மனக்கலக்கத்துக்கு ஆளாகிறாள். எப்படியாவது பலி போட்டு விடலாம் என தன்னால் ஆனா எல்லா முயற்சிகளையும் எடுக்கிறாள். ஒன்றும் முடியவில்லை. இறுதியாக 'சாமியா? சர்க்காரா?' என அவள் கேள்வி கேட்பதாக கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
'மனச் சலவை' கதை நம் ஒவ்வொருவரின் கதையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது எழுபது எண்பதுகளில் பஸ் பிரயாணம் செய்து பழக்கப்பட்டவர்களின் கதையாக கட்டாயம் இருக்கும். அடித்து பிடித்து பஸ்-சில் இடம்பிடித்து ஏறிய பிறகு அடுத்த நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணோ அல்லது கைக்குழந்தையுடன் இருக்கும் ஓர் இளம்தாயோ ஏறி நாம் அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகே வந்து நின்றால் நமது மனம் என்ன நினைக்கிறது? நாம் அந்தச் சூழ்நிலையில் என்ன செய்யப் போகிறோம்? என்பதை எளிமையாக மூணு பக்கங்களில் கதையாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அந்த நெகிழ்வான கிளைமாக்ஸ் நாம் உணர்ந்த ஒன்றுதான். எளிய அனுபவம். அன்றாட நிகழ்வு. ஆனால் அதை கதையாக மாற்றியிருக்கிறார் மேலாண்மை.
மின்சார பூ - வும் ஒரு நல்ல கதை. எளிய மனிதர்களின் கதை. இரண்டு நண்பர்களின் கதை. கரிசல் காட்டு கிராமத்தின் சாதி இறுக்கத்தைப் பேசுகிற கதை.
Few years ago, came to know about writer melanmai ponnusamy sir thro a Tv interview program. Loved his attitude and the interview inspired me to read his works. This books Short story collections are impressive. They shows the plights of a common man/woman is a very simple & interesting tone. We could feel for the characters thro the writings. Strongly recommend this book.