1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
I grew up surrounded by stories of my mother's childhood in rural Tamil Nadu. I also have fond memories of visiting my grandparents in Salem until my late adolescent years. To top it all, I was also sent to live in a village in Tamil Nadu as part of my compulsory course work at the Institute of Rural Management, Anand. In short, the ethos of Tamil Nadu (if there's a word for that) is something that I can claim to be familiar with.
Reading these stories transported me to that world. The smell of jasmine, the temple rituals, urban Chennai, rural bus journeys, caste complexities and what not. The book was easy to read. But as the translator Kalyan Raman notes, Ashokamitran's accessible writing can be deceptive. The book left a lasting impression on me!
[ஸ்பாயிலர்னு ஒன்னும் பெரிசா இல்லை.சில கதைகளோட ஒன்-லைன் மட்டும் இருக்கும்] எளிய மனிதர்களின் துன்ப வாழ்க்கையை பட்டது பட்டபடி கூடியும் குறைத்தும் இல்லாமல் யதார்த்தபாணியில் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன் ஐயா.ஒன்றிற்கு இரண்டு முறை படிக்கலாம். இவற்றில் என்னுள் தாக்கம் ஏற்படுத்திய கதைகள்: 1.78 - வீட்டில் 78 ரூபாய் காணாமல் போய்விடும்.அதனால் குடும்பத்தலைவனின் மனக்குமுறல்கள் 2.தெளிவு - மறந்து போன பழைய நட்பில் இருந்து சில பாடங்கள் 3.மௌனம் - ஆங்கிலேயர் அடக்குமுறை பற்றி 4.பாதுகாப்பு - பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் தொல்லைகள் பற்றி 5.காபி - ஆபரேஷன் முடிந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் மகனை கவனிக்கும் தாயின் கவலை 6.சுயநலம் - வயதான காலத்தில் தகப்பனை பராமரிக்கும் ஒரு மகனை பற்றி 7.அம்மாவைத் தேடி - காசி நகரின் இருண்ட தெருக்களை பற்றி 8.சினிமாவுக்கு போன சென்ஸாரு - சென்ஸாரில் இருந்தபோது ஐயாவின் அனுபவங்கள் 9.மரியாதை - சொல்லத்தெரியவில்லை..நாம பண்போட இருந்தா ஊரு மதிக்கும்,ஆனால் ரொம்ப பண்போட இருக்கப்பாத்தா மரியாதை கெட்டுடும்.அடுத்தவங்களை பார்த்து கருத்து சொல்லக்கூடாது.சொல்லிரவேக்கூடாது,புல்ஸ்டாப். 10.வரிசை - ரேஷன் கடையில் ஒரு நாள்
What a gorgeous set of short stories! I am so glad I came across this collection by easily one of the best Tamil writers.
The 30 stories in this book are a testament to Ashokamithiran's understanding of human beings, the way they work, and their emotions. A wide range of complex characters, realistic settings, relatable events, and extraordinary writing (and translation)! - this book has it all. It also made me feel very nostalgic about a Madras that I never got to witness.
A Compendium of short stories by master story teller - The stories are all set in the lives of lower to middle class house holds and all pretty sad... So much of despair, clinging to meagre hope, holding grudges, nostalgia, survival, delusion... all expressed within a detailed slice of life narrative.