பெண்கள் துணியில் பூவேலைகள் செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகள் எழுதியவர் ஆண்டன் செகாவ் என்று ரஷ்ய இலக்கியத்தின் சிகரமான லியோ டால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார். கார்க்கியும். இவான் புனினும், குப்ரினும் செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள். உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாகக் கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை. அவரது படைப்புலகை, அவரது நண்பர்களை. சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
"ஆன்டன் செக்காவ்" ரஷ்ஷிய இலக்கியத்தில் மிகப்பெரும் சாதனை படைத்த ஒரு ஜாம்பவான்.
அடிப்படையில் இவர் மருத்துவர் ஆனால் எழுத்துலகில் இவர் நிகழ்த்தாத சாதனை என்று எதுவும் இல்லை. பல நூறு சிறுகதைகள் , இதழ்கள் , டயரிக் குறிப்புகள் , கதைகள் , பிரதிகள் , மருத்துவக் குறிப்புகள் , பயணக் குறிப்புக்கள், நாடகங்கள் , கடிதங்கள் என பலவற்றை எழுதியும் அதை பத்திரமாக சேமித்தும் வைத்துள்ளார்.
எனக்கு முன்பின் செக்காவ் என்ற எழுத்தாளனை பற்றித் தெரியாது ஆனால் இந்த புத்தகத்தை வாசித்தப்பின் இவரைப் பற்றியும் இவரின் எழுத்துக்களையும் வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது எஸ்.ரா வின் ஆன்டன் செக்காவ் வாழ்க்கை வரலாற்றை பற்றி விவரிக்கும் இந்த சிறிய புத்தகம்.
1800 களில் ரஷ்ஷியாவில் வாழ்ந்த செக்காவின் சிந்தனை மிகவும் Advanced ஆக உள்ளது. செக்காவ் எந்த கோட்பாட்டினையும் தத்துவத்தையும் சார்ந்து எழுதியவர் இல்லை. ஓர் எழுத்தாளராக வாழ்க்கையை அவர் கண்டுணர்ந்து விதத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு கலைஞனின் வேலை அவ்வளவே. படைப்பு உலகில் அவநம்பிக்கையின் குரல் ஒலிப்பது போலவே நம்பிக்கையின் குரலும் ஒலிக்கவே செய்கின்றன. அவர் மனிதர்களை நேசித்தார் இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார். மனிதனை ஆராய்வதே தனது பணி என்று கூறிய செகாவ் நம்பிக்கையே மனிதனை உருவாக்குகிறது என்று கூறுகிறார்.
மனிதர்களை நேசித்த செகாவ் தனது படைப்புகளில் 8000 கதாபாத்திரங்கள் பெற்றிருக்கிறார். இத்தனை கதாபாத்திரங்களை கச்சிதமாக ஓர் எழுத்தாளர் உருவாக்குவது எளிதானதில்லை என்று வியந்து கூறுகிறார் விமர்சகர் செர்கோவ்.
செக்காவ்வின் காலத்தில் இலக்கியத்தில் முன்னோடியாக திகழ்ந்த டால்ஸ்டாய் செக்காவை விட 32 வயது அதிகமானவர் . செக்காவ் எழுதியது போல டால்ஸ்டாய் 3 மடங்கு எழுதி இருக்கிறார். தன் வாழ்நாளில் செக்காவ் எழுதியதை 30 தொகுதிகளாக வெளிவந்துள்ளன டால்ஸ்டாய் எழுதியது 90 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த புத்தகத்தில் டால்ஸ்டாய்க்கும் செக்காவுக்கும் நிகழ்ந்த பல சுவாரசியமான தகவல்களும் உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. செக்காவை டால்ஸ்டாய் தனது ஒரு சொந்த மகனைப் போல நேசித்துள்ளார். இருவரும் தங்களின் எழுத்துகளைப் பற்றியும் நிறை , குறை , பிடித்தது பிடிக்காததையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
சுருக்கமாக கச்சிதமாக சிறுகதைகள் எழுதப்பட வேண்டும் எனக் கற்றுத்தந்தவர் செக்காவ். சிறுகதை எழுதுபவர்கள் செக்காவை தான் ஆசானாக கருதுகிறார்கள். கதை எழுதுவதற்கு அவரும் நிறைய ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார் அவற்றை தொகுத்து 'How to write like a checkov' என்ற நூலாக Piero Brunello தொகுத்துள்ளார்.
செக்காவின் மிகவும் முக்கியமாக படைப்பு என்றால் அது 'Sakhalin Island'. இது ஒரு தண்டனை தீவு. இங்கு 6000 த்திற்க்கும் மேலான சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்தி நரக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். பெண்கள் , குழந்தைகள் உள்பட பலரும் எந்த ஒரு மருத்துவ வசதி இன்றி பால்வினை நோய்கள் , மூட்டு வலி, வயிற்று உபாதைகள், சுவாசக் கோளாறு, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் அங்கே பெருகி இருந்தன. அதற்கான முறையான சிகிச்சை பெற மருத்துவமனை இல்லை. நிறைய பேருக்கு பார்வையின்மை ஏற்பட்டிருந்தது. மனநலமற்ற கைதிகள் தனியே இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஷகலின் தீவுப்பற்றிய தனத எழுத்தை நூலாக வெளியிட ரஷ்ஷிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் செக்காவ் அதனை மருத்தவத் துறையின் ஆய்வு அறிக்கைகளாக வெளியிட்டார்.
ஷகலின் தீவு அனுபவம் செகாவின் ஆளுமையில் மிக முக்கிய மாற்றத்தை உருவாக்கியது. ரஷ்ய சமூகம் குறித்து அதன் அரசியல், அதிகாரம் மையங்கள் குறித்தும் தீவிரமாகவும் பேசவும் எழுதவும் முற்பட்டார். வேடிக்கை கதைகளை எழுதுவதை விடவும் ரஷ்ய சமூகத்தின் அவலநிலையை சித்தரிக்கும் உண்மையான சம்பவங்களை தான் எழுத வேண்டும் என விரும்பினார். அதிலும் குறிப்பாக பெண்களை ரஷ்ய சமூகம் நடத்துகிற விதம் குறித்து தனது எதிர்ப்பு உணர்வுகளை அவர் கதைகளாக எழுதத் துவங்கினார்.
செக்காவிற்கு தனது சமகால எழுத்தாளர்கள், இளம் படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என அனைவரிடமும் நெருக்கமாக உறவு இருந்தது.
செக்காவ் அன்றைய இளம் எழுத்தாளர்களான் இவான் புனின் , மாக்சிம் கார்க்கி போன்றவற்களை எழுதச்சொல்லி நிறைய உர்ச்சாகப்படுத்தி இருக்கிறார்.
எழுத்துலகிலும், மருத்துவத்துறையிலும் பல பெரும் சாதனையும் , சேவையையும் செய்த செக்காவ் தனது உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்தாததால் காசு நோயின் காரணமாக தனது 44 வயதில் மரணித்தார்.
செகாவின் மறைவிற்குப் பிறகு அவரது நூல்களை முறையாக பதிப்பிப்பதற்கும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கும் புனின் தான் பெரும் உதவி செய்தார். செக்காவின் வாழ்க்கை வரலாற்றை "About checkhov : The unfinished symphony" என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார்.
இவரின் பல கதைகள் திரைப்படங்காளகவும், நாடகங்களாகவும் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி தமிழிலும் இவரின் சில சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. சமூக தடைகளும் ,பண்பாட்டு ஒடுக்கு முறைகளும், சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டு தான் இருப்பார்கள். கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள், சக மனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிற செகாவ்.
❤ எலும்பைத் துளைக்கும் படியான பனிபொழிகிற ஓர் இரவில் பீட்டர்ஸ்பர்க் தெருவொன்றில் ஒரு குதிரை தன்னந்தனியாக நிற்கிறது.
அதைத் தாங்கமுடியாமல் தானும் சென்று அந்தக் குதிரையோடு நின்று கொள்கிறார் செகாவ்.
அந்த வீதியில் செகாவும் குதிரையும் மட்டுமே நிற்கிறார்கள். இருவர் மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. செகாவ் துயரமடைகிறார்.
“கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்ற குறிப்பை எழுதுகிறார்.அவரது கதைகள் இந்த இரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன."
செகாவைப் பற்றி என்னிடத்தில் யாராவது கேட்டால், நான் இங்கிருந்து தான் அதைத் துவங்குவேன்.
வெறும் 44 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு மனிதன் எத்தனை பெண்களை காதலித்திருக்க முடியும்?
செகாவ் 34 பெண்களைக் காதலித்தார். செவிலியர், மருத்துவர், எழுத்தாளர்கள், வேசிகள் என எத்தனையோ தரப்பட்ட பெண்களைக் காதலித்திருக்கிறார். அதைக் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இந்த உலகில் அவர் அளவிற்கு காதல் கதைகளை எழுதிய ஒரு எழுத்தாளன் இல்லவே இல்லை.
சிறு��தை இலக்கணத்திற்கு உதாரணமாக செகாவின் சிறுகதைகளைத் தான் சொல்ல முடியும். அத்தனை படைப்புகள்.
இன்று உலகம் முழுவதும் செகாவின் பெயரில் அ���ுநூற்றுச் சொச்சம் கதைகள் கிடைக்கின்றன.
அவற்றில் சிறு சிறு துணுக்குகள் சம்பவங்களைக் கழித்தால் கிட்டத்தட்ட நானூறு கதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார்.
அவற்றில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை வெறும் நாற்பது தான் இருக்கும்.
ஒரு எழுத்தாளனின் மிக உன்னதமான படைப்புகளைக் காட்டிலும் அவனது வாழ்க்கையே ஒரு சிறந்த படைப்பு தானே. அந்த வகையில் இந்த நூல் செகாவின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது.
புதுமைப்பித்தனைப் போலவே செகாவும் காச நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஜெர்மனியிலிருந்து அவருடைய உடல் ரஷ்யாவிற்கு கொண்டுவரப்பட்டது.
மாபெரும் கொண்டாட்டத்திற்கு உரிய எழுத்தாளனின் இறந்த உடல் மீன்கள் வைத்துக் கொண்டுவரப்படும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ரயிலில் கொண்டுவரப்பட்டது.
படைப்பாளிகளை இந்த உலகம் கௌரவிக்கும் வண்ணம் இது தானே. ஆனால் அதற்காகவெல்லாம் ஒரு எழுத்தாளன் என்றுமே கவலை கொள்வதேயில்லை. அவன் நேசிப்பது தன் எழுத்தைத் தான். இந்த எண்ணம் தான் இன்றும் பல படைப்பாளிகளை இந்த உலகிற்குத் தந்து கொண்டேயிருக்கிறது.
ஸ்.ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் எழுத்துக்கள் வழியாக ஆண்டன் செகாவை அறிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. செகாவின் உலகம், அவர் வாழந்த வாழ்க்கை அவரது குடும்பம், நண்பர்கள் என ஒவ்வொரு அத்தியாயம் செகாவின் வெவ்வேறு பரிமாணங்களை நமக்கு சொல்கிறது. குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்தது டால்ஸ்டாய் செகாவ் நட்பை பற்றி பேசும் அத்தியாயம்.
செகாவின் எழுத்துகளும் சிந்தனையும் வியக்க வைத்தது போலவே அவரது வாழ்க்கையை படித்து வியக்க வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை வாசிக்கவும். செகாவ் என்ற மாபெரும் எழுத்தாளரின் வாழ்க்கையை மிக அருமையாக தொகுத்து எழுதியுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.