பக்கங்கள்: 120
எளிய மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் கையாலாகாத நிலையை, பரிதவிப்பை வெகு இயல்பாக சொல்லிச் செல்வதில் அசோகமித்திரனுக்கு நிகர் யாருமில்லை. இச்சிறுகதைத் தொகுப்பிலும் அத்தகைய கதைகள் உண்டு. கூடுதலாக புராண / மாய எதார்த்த கதைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். அவரது பதின்கால செகந்தராபாத் அனுபவம், சென்னை தண்ணீர் திண்டாட்டம், இலக்கிய கூட்டத்திற்கு அமெரிக்கா சென்ற அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முறையே 18ஆம் அட்சக்கோடு, தண்ணீர், ஒற்றன் ஆகிய சிறந்த நாவல்களை படைத்திருக்கிறார். அதன் பாதிப்பில் உருவான சிறுகதைப் பிரதிகளையும் இத்தொகுப்பில் காண முடிகிறது. படிக்கலாம்.