ப்ளீஸ்!இந்த புத்தகத்தை வாங்காதீங்க! இன்று படித்த புத்தகத்தின் பெயர் இது... . விஜய் டிவியின் "நீயா நானா" புகழ் கோபிநாத் அவர்கள்,தன் தந்தைக்கு சமர்ப்பணமாக எழுதியிருக்கும் இந்த புத்தகம்,அவரைப் போல பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கான சிறந்த வழிக்காட்டி என்றே சொல்லவேண்டும்! . புதிதாக புதிராக எதுவுமே இல்லை.ஆனால் இத்தனை நாளாக காணாத வாழ்க்கையின் மறுபக்கத்தை காண செய்ததாகவே உணர்ந்தேன்.ஒரு நண்பன் நம்மோடு பேசுவது போன்ற ஒரு உணர்வு வந்து போகிறது.ஒவ்வொரு பக்கத்திலும் புது நம்பிக்கையை விதைக்கிறார் கோபிநாத் அவர்கள்.மகிழ்ச்சியான வாழ்க்கையின் சீக்ரெடி பற்றித் தெரியாதவர்கள், அறியாதவர்களுக்கு இந்த புத்தகமே பதில் என்று சொல்லலாம்☺ இந்த நூலின் கடைசி பக்கம்.....அழகான வாழ்க்கைக்கு முதல் பக்கமாக அமையும் என்பதில் ஐயமே இல்லை!!!!!! . "சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்.அப்படி வைத்திருந்தால் யாராலும் அதை தொந்தரவு செய்யமுடியாது.கண்டிப்பா வாங்கி படிங்க!இணையத்தில் pdf கூட இருக்கிறது.
Quick and easy read. If your avid non fiction reader probably topics youre cognizant of. Still good to read when you are low. Touches all key topics on motivation in simple plain tanil language.