யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ' ஊர் சுற்றி' அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. 'ஊர்சுற்றி' யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும் போது 'ஊரசுற்றி' யில் அது சகல சாத்தியங்களுடனும் முன் நகர்கிறது. ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை, இடங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது. மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது -சுகுமாரன்
Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
எல்லார் வாழ்விலும் அமையப்பெறாத எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்த தளமே ஊர்சுற்றுதல். நினைத்த மாத்திரத்தில் ஊர்சுற்றியாக முடியாது காரணம் நம்மைச் சுற்றி நாம் பின்னிக் கொண்டிருக்கும் குடும்ப உறவுச் சூழல்களே. பெற்றோரை இழந்த பின் ஏற்படும் மனச்சிக்கலால் தேசாந்திரியாக (ஊர்சுற்றியாக) மாறும் ஒரு இளைஞனின் கதை. ஊர் சுற்றியாக வரும் சீதாபதி தாம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளையும் அதன் கதை மாந்தர்களையும் உட்படுத்தி கதை சொல்ல அதை அவர் ஊருக்கு வரும் சினிமாப் படக்குழுவின் இணை இயக்குநராய் பணி செய்யும் கமலக்கண்ணன் வாயிலாக பதிவுச்செய்யப்படுவதாக அமைகிறது. கதையின் ஓட்டமானது கதை சொல்லியின் மூலம் இறந்த காலத்தையும் , கேட்பவர் வாயிலாக நிகழ் காலத்தையும் கொண்டு நகர்கிறது. கதையின் காலக்கட்டமும் கதைக்களங்களும் கதை சொல்லியின் மனவோட்டத்தில் கொடுத்திருப்பதால் தொடர்கதையாக அமையாமலும் அதன் தொடர்ச்சி பிறழாமலும் சீதாபதியைச் சுற்றியும் , அவர் குறிப்பிடும் கதை மாந்தர்களும் , அந்த கதை மாந்தர்களின் மனவோட்டவுமாக நகர்கிறது. மொழி நடையும் , கதைக்குள் கதையாக விரியும் பாணியும் படிப்பதற்கு வேகத்தைக் கொடுக்கிறது.இந்த நாவல் யுவன்சந்திரசேகரின் ஏழாம் படைப்பாக காலச்சுவடு மூலமாக வெளிவந்துள்ளது. புனைவா நிஜமா என்ற தர்க்க ரீதியான எண்ணங்கள் மனதில் ஓட ஏதோ ஒரு இழப்பை வாசித்து முடிக்கும் போது உணர்கிறேன்...
'வெளியேற்றம்' வாசித்ததுதான் இதை வாசிக்கத் தூண்டியது. தீராத பயண வேட்கையை எல்லா நேரமும் பயணித்தே தீர்க்க முடியாத போது இது போன்ற வாசிப்புகளோ, பயணம் தொடர்பான சினிமாக்களோ இட்டு நிறப்புகிறது. வாசித்து முடித்த இந்த நாளில் வேறேதோ காரணங்களால் நெகிழ்ந்திருந்ததால் அந்த உணர்வில் புத்தகமும் சீதாபதியும் சேர்ந்து கொண்டது/டார்.